சர்வதேச விமானப் போக்குவரத்தின் ‘பிஸி’ நாளாக ஜூலை 24 அறிவிப்பு!

இந்தப் பட்டியலில் ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிடவையின் விவரங்கள் இணைக்கப்படவில்லை.

சர்வதேச விமானப் போக்குவரத்தின் ‘பிஸி’ நாளாக ஜூலை 24 அறிவிப்பு!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: July 29, 2019, 6:20 PM IST
  • Share this:
கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிகப்படியான விமானப் போக்குவரத்து இந்தாண்டு ஜூலை 24-ம் தேதி நிகழ்ந்துள்ளது.

2006-ம் ஆண்டுக்குப் பின்னர் ஒரே நாளில் சர்வதேச அளவில் 2,25,000 விமானப் பயணங்கள் நடந்த பிஸி நாள் என்ற சாதனை ஜூலை 24-ம் தேதி நிகழ்ந்துள்ளது. ஸ்விடனைச் சேர்ந்த இணையதள வழி சேவை நிறுவனமான ஃப்ளைட்ரேடார், கடந்த ஜூலை 24-ம் தேதிக்கான விமானப் போக்குவரத்து வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

கார்கோ விமானங்கள், கமர்ஷியல் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஜெட், க்ளைடர், சுற்றுலா விமானம், சுயவிமானங்கள் என அத்தனை விமானப் போக்குவரத்தும் இச்சாதனை நாளில் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. ரேடார் தகவல்கள், விமானப் போக்குவரத்து சிக்னல்கள் என அத்தனையும் ஆராயப்பட்டு இச்சாதனை விபரம் வெளியிடப்பட்டுள்ளது.


2006-ம் ஆண்டுதான் ஃப்ளைட்ரேடார் நிறுவனம் உருவானது என்பதால் இந்த 13 ஆண்டுகளில் அதிக விமானப் போக்குவரத்து நிகழ்ந்த நாளாக ஜூலை 24 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட விவரங்கள் இணைக்கப்படவில்லை.

மேலும் பார்க்க: புதிய கார் வாங்கும்போது இலவச பதிவுக் கட்டணம் பெற வேண்டுமா?
First published: July 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்