ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

எலெக்ட்ரிக் வாகன பிரிவில் இணைந்து செயல்பட உள்ள Jio-BP & TVS Motor நிறுவனம்.!

எலெக்ட்ரிக் வாகன பிரிவில் இணைந்து செயல்பட உள்ள Jio-BP & TVS Motor நிறுவனம்.!

TVS and Jio BP

TVS and Jio BP

Jio BP and TVS | டிவிஎஸ் மற்றும் ஜியோ பிபி ஆப்கள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த தீர்வுகள் முன்வைக்கப்பட உள்ளன. இது மட்டுமல்லாமல் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து சர்வதேச அளவில் இந்த நிறுவனங்கள் திரட்டிய தகவல்களும் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட உள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இரு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் 3 சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நாடெங்கிலும் சார்ஜிங் ஸ்டேசன்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்வது என்று ஜியோ பிபி மற்றும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஆகியவை முடிவு செய்துள்ளன. இந்த கூட்டு முயற்சியின் விளைவாக, டிவிஎஸ் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் வாகனங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஜியோ பிபி நிறுவனத்திடம் உள்ள எண்ணற்ற சார்ஜிங் நிலையங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதே சமயம், இந்த சார்ஜிங் நிலையங்களில் மற்ற வாகனங்களுக்கும் சார்ஜ் செய்து கொள்ளலாம். இரண்டு நிறுவனங்களின் பலத்தை மேம்படுத்தும் வகையில், ஏசி சார்ஜிங் நெட்வொர்க் மற்றும் டிசி பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க் ஆகியவற்றை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற இடங்களில், சௌகரியமான சார்ஜிங் நிலையங்களை வழங்க வேண்டும் என்று இந்நிறுவனங்களின் இலக்கை பூர்த்தி செய்வதாக இது அமையும்.

டிவிஎஸ் மற்றும் ஜியோ பிபி ஆப்கள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த தீர்வுகள் முன்வைக்கப்பட உள்ளன. இது மட்டுமல்லாமல் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து சர்வதேச அளவில் இந்த நிறுவனங்கள் திரட்டிய தகவல்களும் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட உள்ளன. சர்வதேச அளவிலான உத்திகளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்வதன் மூலமாக வாடிக்கையாளர்களின் எலெக்ட்ரிக் வாகன போக்குவரத்து அனுபவங்களை மகிழ்ச்சிக்குரியதாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

ஜியோ பிபி பல்ஸ் :

ஜியோ பிபி பல்ஸ் என்ற பெயரில் மின்சார வாகன சார்ஜிங் மற்றும் ஸ்வேப்பிங் நிலையங்களை ஜியோ பிபி நிறுவனம் நடத்தி வருகிறது. ஜியோ பிபி ஆப் பயன்படுத்துவதன் மூலமாக அருகாமையில் உள்ள சார்ஜிங் நிலையங்களை வாடிக்கையாளர்கள் எளிதில் அறிந்து கொண்டு, அங்கு சென்று சார்ஜிங் செய்து கொள்ளலாம். இந்தியாவின் மாபெரும் ஈவி சார்ஜிங் நெட்வொர்க் என்ற வகையில், இந்த தொழில் சார்ந்த அனைவரும் பயன் பெறத்தக்க நடவடிக்கைகளை ஜியோ பிபி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

Also Read : கார் லோன் எடுக்கும் ஐடியா இருக்கா? இதை படியுங்கள்..

எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் டிவிஎஸ் நிறுவனம் :

புதிய எலெக்ட்ரிக் மொபிலிட்டி புராடக்ட்கள் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் டிவிஎஸ் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. டிவிஎஸ் ஐக்யூப் என்ற வாகனம் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை 12,000 வாகனங்களை இந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஸ்மார்ட் வசதிகளை கொண்ட இந்த வாகனம் வாடிக்கையாளர்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி துறையில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய டிவிஎஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்திருந்த நிலையில், அதில் கணிசமான தொகை ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டு விட்டது.

Published by:Selvi M
First published:

Tags: Electric bike, Jio, TVS