பல மாதங்களுக்குப் பிறகு, உலகம் முழுவதும் மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்பட்டு, முன்பு போல இயக்கப்பட்டு வரும் நிலையில், முன்னணி ஏர்லைன் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் மூன்று புதிய விமானங்களை இயக்க இருக்கிறது. அதற்கு தேவையான அனைத்து சோதனை ஓட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், இறுதி கட்ட சோதனையாக, மூன்று Proving Flight ஐ, 18 நபர்களுடன் ஜெட் ஏர்வேஸ் இயக்கியது.
Proving Flight என்பது விமானம் பயணிகளுடன் பறக்கத் தகுதியுள்ளது என்பதை நிரூபிக்கும் இறுதி கட்ட சோதனையாகும். சோதனையின் இறுதி கட்டத்தில் உள்ள இந்த மூன்று விமானங்களும், கடந்த 15ஆம் தேதி அன்று விமான ஒழுங்குமுறை ஆணையத்தின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) அதிகாரிகள் உட்பட சோதனை ஓட்டத்தை நடத்தியது.
விமானங்களை நிரூபிப்பது, அதாவது விமானம் பயணிகளை சுமந்து பறக்க தகுதியானது என்பது விமான நிறுவனம் ஏர் ஆபரேட்டர் சான்றிதழை (ஏஓசி) பெறுவதற்கான இறுதி நிலையானது. இந்த மூன்று ப்ரூவிங் விமானங்களுக்கும் ஜெட் ஏர்வேஸின் VT-SXE பதிவு எண் கொண்ட போயிங் 737 விமானம் தான் பயன்படுத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறுதி சோதனை இயக்கத்தில், மூன்று விமானங்களில் முதல் விமானம் டெல்லி மற்றும் மும்பை வழித்தடத்தில் இயங்கியது என்று செய்திகள் தெரிவித்தன. இரண்டாவது விமானம், மும்பையில் இருந்து டெல்லிக்கு இயக்கத் திட்டமிடப்பட்டது, ஆனால் அது மும்பையில் இருந்து புறப்பட்ட பிறகு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) அதிகாரிகள் அதை அகமதாபாத்திற்கு செலுத்துமாறு விமானிகளிடம் கோரியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்தகைய எதிர்பாராத சூழ்நிலைகளைக் கையாள்வதில், ஒரு புதிய விமானம் எவ்வளவு தயார் நிலையில் இருக்கிறது என்பதைச் சோதிக்க விமானங்களை திடீரென்று வேறு வழித்தடத்தில் இயங்க DGCA ஆணையிடுகிறது. மாற்று வழியில் சென்றதைத் தொடர்ந்து, இரண்டாவது விமானம் பாதுகாப்பாக அகமதாபாத்தில் தரையிறங்கியது. பின்னர், மூன்றாவது விமானம் அகமதாபாத் மற்றும் டெல்லி வழித்தடத்தில் செலுத்தப்பட்டது.
Also Read : எலக்ட்ரிக் வாகனம் வாங்கினால் இந்தியாவில் வரி விலக்கு பெறலாம்.!
விமானிகள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு விமானத்திலும், நான்கு கேபின் உறுப்பினர்கள் பயணித்தனர். இந்த மூன்று விமானங்களிலும் இரண்டு விமானிகள், DGCA அதிகாரிகள், நிறுவனத்தின் 12 மூத்த அதிகாரிகள் மற்றும் 18 பேர் கொண்ட கேபின் குழு உறுப்பினர்கள் ஆகியோர் இருந்தனர் என்று கூறப்படுகிறது.
ஒரு முறை வெற்றிகரமாக இயங்கி லேண்டிங் செய்வது போதுமானது இல்லை, மொத்தம் ஐந்து முறை வெற்றிகரமாக, சுமூகமாக தரையிறங்க வேண்டும். அப்போது தான் விமானம் இயங்க சான்றிதழ் வழங்கப்படும். இது வரை மூன்று விமானங்களின் லேண்டிங் முடிந்துள்ளன.
Also Read : 2022 KTM 390 Adventure VS BMW G 310 GS - இவற்றில் எது சிறந்த பைக்.?
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில், ஜூலை முதல் செப்டம்பர் மாதத்திற்குள் கமர்ஷியல் விமானங்களை மீண்டும் இயக்க ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Jet Airways