Home /News /automobile /

உற்பத்தி துவங்கி உள்ள நிலையில் மெரிடியன் எஸ்யூவி-க்கான புக்கிங்கையும் ஓபன் செய்துள்ள ஜீப் இந்தியா.!  

உற்பத்தி துவங்கி உள்ள நிலையில் மெரிடியன் எஸ்யூவி-க்கான புக்கிங்கையும் ஓபன் செய்துள்ள ஜீப் இந்தியா.!  

ஜீப் இந்தியா

ஜீப் இந்தியா

Jeep Meridian | இந்தியாவில் தயாரிக்கப்படும் தனது மெரிடியன் எஸ்யூவி-யின் உற்பத்தியை ஜீப் இந்தியா நிறுவனம் புனேவின் புறநகரில் உள்ள அதன் ரஞ்சன்கான் ஆலையில் (Ranjangaon plant) தொடங்கி உள்ளது.

    காம்பஸ் டிரெயில்ஹாக் மற்றும் காம்பஸ் நைட் ஈகிள் ஆகியவற்றை அறிமுகப்படுத்திய பிறகு, ஜீப் இந்தியா (Jeep India) நிறுவனம் அடுத்த மாதம் இந்தியாவில் Meridian SUV-ஐ விரைவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

    இந்தியாவில் தயாரிக்கப்படும் தனது மெரிடியன் எஸ்யூவி-யின் உற்பத்தியை ஜீப் இந்தியா நிறுவனம் புனேவின் புறநகரில் உள்ள அதன் ரஞ்சன்கான் ஆலையில் (Ranjangaon plant) தொடங்கி உள்ளது. இம்மாத இறுதியில் அல்லது ஜூன் மாத துவக்கத்தில் Meridian SUV விற்பனைக்கு வரும். ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்திற்குள் டெலிவரிகள் தொடங்கப்படும் என்றும் ஜீப் இந்தியா நிறுவனம் அறிவித்து உள்ளது.

    மெரிடியன் எஸ்யூவி-யின் உற்பத்தி தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் ஜீப் மெரிடியனுக்கான புக்கிங்ஸ் ரூ.50,000 டோக்கன் தொகையில் ஓபன் செய்யப்பட்டு உள்ளது. ஆல்-நியூ ஜீப் மெரிடியன் எஸ்யூவி-க்கான டிஸ்பிளே மற்றும் டெஸ்ட் டிரைவிங் இந்த மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து தொடங்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜீப் மெரிடியனைப் பற்றி பேசுகையில், மெரிடியன் SUV என்பது ஏற்கனவே இருக்கும் காம்பஸின் ஒரு நீட்டிக்கப்பட்ட வெர்ஷனாகும்.



    இது மேலும் 4x2 மற்றும் 4x4 டிரைவிங் கட்டமைப்புகளுடன் வரும். மெரிடியனின் வெளிப்புறத்தைப் பொறுத்தவரை இந்த புதிய கார் ஜீப் நிறுவனத்தின் செரோக்கி (Cherokee ) காருடன் ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையை கொண்டுள்ளது. மெரிடியனின் முன் மற்றும் பின் என்டுகளில் உள்ள பல எலிமெண்ட்ஸ்கள் செரோக்கியில் உள்ளதை போலவே கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. மெரிடியனின் ரூஃப் லைனானது ஜீப் நிறுவனத்தின் Compass காரை விட உயரமாக இருக்கிறது.

    ALSO READ | டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள 5 எஸ்யூவி மாடல் கார்கள் இதோ!

    காம்பஸை போலவே ஜீப் மெரிடியன் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படும், இது 172 பிஎச்பி ஆற்றலையும் 350 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்யும். டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகியவை அடங்கும். ஜீப் மெரிடியன் காம்பஸ் வாகனத்தை விட நீளமானது, அகலமானது மற்றும் உயரமானது.



    சுவாரஸ்யமாக, காம்பஸின் வீல்பேஸ் 2,636 மிமீ எனும் போது, மெரிடியனின் வீல்பேஸ் 2,782 மிமீ - நீளத்தை கொண்டுள்ளது. ஜீப் மெரிடியனின் விலை ரூ.19 லட்சத்தில் இருந்து ரூ.33 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர், இசுஸு எம்யூ-எக்ஸ், ஸ்கோடா கோடியாக், டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஆகியவற்றுடன் ஜீப் மெரிடியன் போட்டியிடும் வகையில் விற்பனைக்கு வர உள்ளது.

    Also read | இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் காரின் முன்பதிவு தொடங்கியது!
     ஜீப் பிராண்ட் இந்தியாவின் தலைவரான நிபுன் ஜே மகாஜன் பேசுகையில், எங்கள் ஜீப் மெரிடியன் சாகச மற்றும் அதிநவீனத்தின் சிறந்த கலவையாக வெளிவர உள்ளது. மெரிடியன் 10,00,000 கிமீ-களுக்கு மேல் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் நீடித்து நிலைத்து நிற்கும் மற்றும் சீரான செயல்திறனை உறுதிப்படுத்தி உள்ளோம். நுட்பம், செயல்திறன் மற்றும் ஒப்பிடமுடியாத திறன் ஆகியவை கொண்ட கார் ஒன்றை தேடி கொண்டிருப்பவர்களுக்கு ஜீப் மெரிடியன் சரியான தேர்வாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Car, Jeep

    அடுத்த செய்தி