Home /News /automobile /

ஜீப் நிறுவனத்தின் மெரிடியன் 7-சீட்டர் எஸ்யூவி இந்த ஆண்டில் அறிமுகம் - விவரக்குறிப்புகள்!

ஜீப் நிறுவனத்தின் மெரிடியன் 7-சீட்டர் எஸ்யூவி இந்த ஆண்டில் அறிமுகம் - விவரக்குறிப்புகள்!

மெரிடியன் 7-சீட்டர் எஸ்யூவி

மெரிடியன் 7-சீட்டர் எஸ்யூவி

புதிய மெரிடியன் காரை பற்றி பேசுகையில் இதன் வெளிப்புறத்தைப் பொறுத்தவரை இந்த புதிய கார் ஜீப் நிறுவனத்தின் செரோக்கி (Cherokee ) காருடன் ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையை கொண்டுள்ளது.

இந்த ஆண்டில் இந்தியாவில் மெரிடியனை (Meridian)அறிமுகப்படுத்தப் போவதாக ஜீப் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இது பற்றி கூடுதல் தகவல்களை வெளியிட்டுள்ள ஜீப் இந்தியா நிறுவனம், இந்திய சந்தைக்கு இந்த மாடலின் பொருத்தம் மற்றும் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றை மனதில் வைத்து, வாடிக்கையாளர்களின் உணர்வுக்காக மெரிடியன் (Meridian) என்ற பெயர் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக கூறி இருக்கிறது.

சில உலகளாவிய ஜீப் பெயர்கள் உட்பட 70 பெயர்கள் கொண்ட பட்டியல் பரிசீலனை செய்யப்பட்டது. எனினும் முற்றிலும் ‘மேட் இன் இந்தியா’-வாக வர உள்ள ஒரு SUV காருக்கு வாடிக்கையாளர்களை கவரும் மற்றும் மனதில் பதியும் வகையிலான சிறந்த பெயர் தேவைப்பட்டது. வாகனத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்தோமோ அதே அளவு அதற்கு வைக்கும் பெயருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். இறுதியாக இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள எங்கள் 7 சீட்டர் SUV காருக்கு Meridian என்ற பெயரை சூட்ட முடிவு செய்தோம் என்று கூறி இருக்கிறது ஜீப் இந்தியா.

புதிய மெரிடியன் காரை பற்றி பேசுகையில் இதன் வெளிப்புறத்தைப் பொறுத்தவரை இந்த புதிய கார் ஜீப் நிறுவனத்தின் செரோக்கி (Cherokee ) காருடன் ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையை கொண்டுள்ளது. மெரிடியனின் முன் மற்றும் பின் என்டுகளில் உள்ள பல எலிமெண்ட்ஸ்கள் செரோக்கியில் உள்ளதை போலவே கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. மெரிடியனின் ரூஃப் லைனானது ஜீப் நிறுவனத்தின் Compass காரை விட உயரமாகே இருக்கிறது. இது குறிப்பாக வாகனத்தில் மூன்றாம் வரிசையில் அமர்ந்து பயணிப்போருக்கு சிரமமற்ற பயண அனுபவத்தை வழங்கும். மெரிடியன் காரின் உட்புறம் பெரும்பாலும் காம்பஸ் காரை போலவே இருக்கும் என்பதை சமீபத்திய ஸ்பை ஷாட்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இதன்படி, ஜீப் பிரேசில்-ஸ்பெக் மாடலை போன்ற விஷயங்களை கொஞ்சம் வித்தியாசமாக வைத்திருக்க டிரிம்கள் மற்றும் அப்ஹோல்ஸ்டரிகளை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் இன்டர்நேஷனல் மாடல் 10-ஸ்பீக்கர் 450W ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், அலெக்சா இன்- வெஹிகிள் ஃபங்ஷன்ஸ் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) போன்ற பல அம்சங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது.

கனெக்டட் கார் தொழில்நுட்பத்துடன் கூடிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இந்த கார் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர டூயல்-ஜான் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப், பவர்டு ஃப்ரன்ட் சீட்ஸ் மற்றும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்களை மெரிடியன் பெறும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Also read... இந்தியாவில் மொத்தம் எத்தனை எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளன? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!

இந்த கார் பவர்டிரெய்னை பொறுத்த வரை 170PS 2-லிட்டர் டீசல் எஞ்சினுடன் மிகவும் சக்திவாய்ந்த டியூனில் வரும். மேலும் இது இது 6-ஸ்பீடு மேனுவல் (ஃப்ரன்ட்-வீல் டிரைவ்) மற்றும் 9-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் (ஆல்-வீல் டிரைவ்) டிரான்ஸ்மிஷனைப் பெறுகிறது. ஜீப் மெரிடியனின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இதற்கான முன்பதிவு வரும் மே மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Suv car

அடுத்த செய்தி