இந்திய நிறுவனமான ஜீப் (Jeep) எஸ்யூவி கார் விற்பனையில் முன்னணி வகுத்து வருகிறது. இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பதற்காக புதிது புதிதாக கார்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் அந்த ஜீப் நிறுவனம் அடுத்த புதிய எஸ்யூவி கார் ஒன்றை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், அதற்கு மெரிடியன் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜீப் நிறுவனம் மெரிடியன் எஸ்யூவி காரை 7 பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைத்துள்ளது. இது இதற்கு முந்தைய ஜீப் காம்பஸ் காரைவிட சற்று பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது. 70க்கும் மேற்பட்ட பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், பன்முக கலாச்சாரங்கள் மற்றும் அழகிய மாநிலங்களை இணைக்கும் நாடாக இந்தியா இருப்பதை பறைசாற்றும் விதமாக மெரிடியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக ஜீப் நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டதால், "மேட் இன் இந்தியா" என்பதை அறிவிக்கும் விதமாகவும், சந்தைக்கு வலுவான பொருத்தமும் பெயரை தேர்தெடுத்துள்ளதாக கூறப்படுள்ளது.
வெளிப்புறத்தைப் பொறுத்தவரை, கார் அதை அடிப்படையாகக் கொண்ட காருடன் ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக்கொண்டுள்ளது. முன் வடிவமைப்பு மற்றும் உட்புறத்தின் பின்புறம் உள்ள பல வசதிகள் செரோகி போன்ற சொகுசான பயணத்தை கொடுக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹெட்ரூமை அதிகரிப்பதற்காக மேற்கூரையின் உயரத்தை கூட்டியுள்ளதாகவும், மொத்தம் 3 அடுக்குகளைக் கொண்டு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதால் தாராளமாக 7 பேர் வரை பயணிக்கலாம் என்றும் தெரிகிறது.
காம்பஸ் காரில் அமைந்துள்ள எஞ்சின் உடன் இதில் 2 லிட்டர் 4 சிலிண்டர் கொண்ட டீசல் எஞ்சின் கூடுதலாக அமைந்துள்ளது. இது காருக்கு அதிக பவர் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 9 ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் கியர் பாக்ஸ் அமைந்துள்ளது. இந்த காரில் ஹெட் லைட் மற்றும் முன்பக்க பம்பர் ஆகியவையும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்தக் காரில் 10.1 இன்ச் இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம், , பனோரமிக் சன்ரூஃப், 4 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் முன் பக்கத்தில் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் ஆகியவை இந்த காரில் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச மாடல் 10-ஸ்பீக்கர் 450W ஹர்மன் கார்டன் ஒலி அமைப்பு, அலெக்சா இன்-வாகன செயல்பாடுகள் மற்றும் மேம்பட்ட டிரைவர் உதவி அமைப்புகள் (ADAS) போன்ற சிலவற்றைப் பெறுகிறது. டூயல்-ஜோன் காலநிலை கட்டுப்பாடு, வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், இயங்கும் முன் இருக்கைகள் ஆகிய சிறம்பம்சங்களும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கார் என்பதால் 30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய்க்குள் இதன் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.