Home /News /automobile /

இந்தியாவில் அறிமுகமாகியது ஜீப் மெரிடியன் 7-சீட்டர் எஸ்யூவி - சிறப்பம்சங்கள்!

இந்தியாவில் அறிமுகமாகியது ஜீப் மெரிடியன் 7-சீட்டர் எஸ்யூவி - சிறப்பம்சங்கள்!

ஜீப் மெரிடியன்

ஜீப் மெரிடியன்

Jeep Meridian | ஜீப் மெரிடியன் 7 சீட்டர் கார் டெலிவரியை அடுத்த மாத இறுதிக்குள் ஜீப் நிறுவனம் துவங்க இருக்கிறது.

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஜீப், கடந்த 2016-ஆம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற Wrangler மற்றும் Grand Cherokee SUV-க்களுடன் இந்தியாவிற்குள் நுழைந்தது. இதிலிருந்து 1 வருடம் கழித்து ஜீப் காம்பஸ் 5-சீட்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது நிறுவனம். இந்த தயாரிப்பு ஜீப் நிறுவனம் இந்தியாவில் தனக்கென ஒரு பிராண்ட் பெயரை நிறுவ உதவியது. சில ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ஜீப் மெரிடியன் எனப்படும் 7 சீட்டர் கொண்ட எஸ்யூவி-யை  அறிமுகப்படுத்தியதன் மூலம் பிராண்ட் இந்தியாவில் மேலும் வலுவாக கால் ஊன்றுகிறது. சமீபத்தில், இந்தியாவில் புதிய மெரிடியன் எஸ்யூவி-க்கான முன்பதிவுகளை ரூ.50,000க்கு ஜீப் நிறுவனம் தொடங்கியது

    இந்தியாவில் தயாரிக்கப்படும் தனது மெரிடியன் எஸ்யூவி-யின் உற்பத்தியை ஜீப் இந்தியா நிறுவனம் புனேவின் புறநகரில் உள்ள அதன் ரஞ்சன்கான் ஆலையில் (Ranjangaon plant) ஏற்கனவே தொடங்கி உள்ளது. இன்று அறிமுகமாக உள்ள ஜீப் மெரிடியன் 7 சீட்டர் கார் டெலிவரியை அடுத்த மாத இறுதிக்குள் ஜீப் நிறுவனம் துவங்க இருக்கிறது.

    மெரிடியன் SUV என்பது ஏற்கனவே இருக்கும் காம்பஸின் ஒரு நீட்டிக்கப்பட்ட வெர்ஷனாகும். இது மேலும் 4x2 மற்றும் 4x4 டிரைவிங் கட்டமைப்புகளுடன் வரும். மெரிடியனின் வெளிப்புறத்தைப் பொறுத்தவரை இந்த புதிய கார் ஜீப் நிறுவனத்தின் செரோக்கி (Cherokee ) காருடன் ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையை கொண்டுள்ளது. எனினும் ஹெட்லைட்கள் முதல் பம்பர், அலாய் வடிவமைப்பு, பின்புறம் மற்றும் ஒட்டுமொத்த பரிமாணங்கள் வரை அனைத்தும் புதியவை. மெரிடியனின் நீளம் 4,769 மிமீ, அகலம் 1,859 மிமீ, உயரம் 1.698 மிமீ மற்றும் வீல்பேஸ் 2,782 மிமீ. மெரிடியன் 18-இன்ச் டயமண்ட் கட் டூயல் டோன் அலாய்களை கொண்டுள்ளது.

    Also Read : கார் வாங்கும் பிளான் இருக்கா..? டாடா மோட்டர்ஸ் வழங்கும் அசத்தல் ஆஃபர்

    மொத்தத்தில், இது மிகவும் பிரீமியம் தோற்றம் கொண்ட எஸ்யூவி-க்களில் ஒன்றாக இருக்கும். ஜீப் மெரிடியன் 170 ஹெச்பி மற்றும் 350 என்எம் பீக் டார்க்கை உற்பத்தி செய்யும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. புதிய 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் ஆப்ஷனையும் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். மெரிடியன் 4x2 மற்றும் 4x4 டிரைவ் ட்ரெய்ன்களில் கிடைக்கும்.

    காம்பஸ் காரில் உள்ளது போலவே 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 10.1-இன்ச் டச்ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜிங், பவர்டு ஃப்ரன்ட் சீட்ஸ், டூயல்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், ஆறு ஏர்பேக்ஸ், ட்ராக்ஷன் கன்ட்ரோல், ESC, ஹில் ஸ்டார்ட் மற்றும் டிசென்ட் கன்ட்ரோல், 360 -டிகிரி பார்க்கிங் கேமரா மற்றும் செலக்ட்டபிள் டிரைவ் மோட் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த புதிய 7 சீட்டரிலும் இடம் பெற்றுள்ளன.

    தற்போது, மெரிடியன் மிடில் ரோவில் பெஞ்ச் சீட்டுடன் 7 சீட்டர் மற்றும் மூன்றாவது ரோவை அணுக ஒரு டச் டம்பிள் டவுன் ஃபங்ஷனுடன் கிடைக்கிறது. 6 சீட்ஸ் கொண்ட வேரியண்ட் பின்னர் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதில் பெஞ்ச் இருக்கைகளுக்கு பதிலாக மிடில் ரோவில் கேப்டன் சீட் இருக்கும்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Automobile, Jeep

    அடுத்த செய்தி