ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

நடப்பாண்டில் தொடர்ந்து 4-வது முறையாக SUV காரின் விலையை உயர்த்திய ஜீப் இந்தியா!

நடப்பாண்டில் தொடர்ந்து 4-வது முறையாக SUV காரின் விலையை உயர்த்திய ஜீப் இந்தியா!

ஜீப் காம்பஸ் எஸ்யூவி

ஜீப் காம்பஸ் எஸ்யூவி

ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஒரு பரந்த விலை வரம்பை கொண்டிருப்பதால் மார்க்கெட்டில் அதிக போட்டியாளர்களை கொண்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  அமெரிக்கன் ஆஃப்-ரோடிங் எஸ்யூவி உற்பத்தியாளரான ஜீப் இந்தியா மீறுவனம் தனது காம்பஸ் மிட்-சைஸ் பிரிமியம் எஸ்யூவி-யின் விலையை மீண்டும் ஒருமுறை உயர்த்தியுள்ளது. 2017-ல் வெளியிடப்பட்ட காம்பஸ் எஸ்யூவி-யின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் 2021-ல் வெளியிடப்பட்டது. இந்திய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமான எஸ்யூவி-க்களில் ஒன்றாக இடத்தை பிடித்துள்ளது.

  நடப்பாண்டில் (2022) ஜீப் நிறுவனம் காம்பஸ் எஸ்யூவி-யின் விலையை தற்போது நான்காவது முறையாக உயர்த்தி இருக்கிறது. 2 மாதங்களுக்கு முன் ஜடந்த செப்டம்பர் மாதத்திலும் ஜீப் இந்தியா, காம்பஸ்

  எஸ்யூவி-யின் விலையை ரூ.90,000 வரை உயர்த்தியது.

  புதிதாக திருத்தப்பட்ட விலைப் பட்டியலின் படி,ட்ரிம்களைப் பொறுத்து காம்பஸ் எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.80 லட்சம் வரை உயர்ந்துள்ளது.

  இந்த புதிய விலை திருத்தத்தின் மூலம் ஸ்போர்ட் 4×2 பெட்ரோல் மாடலான காம்பஸின் பேஸ் மாடல் விலை இப்போது ரூ.21.09 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருக்கும். முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பேஸ் பெட்ரோல்-மேனுவல் வேரியன்ட் எஸ்யூவி-யின் விலை ரூ.18.04 லட்சமாகவும், டாப்-ஸ்பெக் டீசல் டிரைல்ஹாக் வேரியண்டின் விலை ரூ.30.72 லட்சமாகவும் இருந்தது.

  இப்போது இந்த வாகனங்களின் விலைகள் முறையே ரூ.21.09 லட்சம் மற்றும் ரூ.32.67 லட்சமாக இருக்கிறது. இந்த 11 மாதங்களில் பேஸ் அடிப்படை பெட்ரோல் வேரியன்ட்டின் விலைகள் ரூ. 3.05 லட்சம் வரையிலும், டாப்-ஸ்பெக் காம்பஸ் டிரெயில்ஹாக் வாகனத்தின் விலை ரூ. 1.95 லட்சம் வரையிலும் உயர்ந்துள்ளது.

  ஹார்ட் அட்டாக் வந்தாலும் இந்த கார் உங்கள காப்பாத்தும்... அசத்தலான எலெக்ட்ரிக் கார்!

  ஜீப் காம்பஸ் பவர்ட்ரெய்ன்:

  இந்தியாவில் ஜீப் காம்பஸ் இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது. காம்பாஸ் எஸ்யூவி-க்கான பவர்ட்ரெய்ன் ஆப்ஷன்களில் 167 பிஎச்பி மற்றும் 350 Nm பீக் டார்க்கை உருவாக்கும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினும் ஒன்று . இந்த எஞ்சின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 9-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் AT உடன் இணைக்கப்பட்டுள்ளது. 1.4-லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினையும் பெற்றுள்ள ஜீப் காம்பஸ், 6-ஸ்பீடு MT மற்றும் 7-ஸ்பீடு DCT உடன் இணைந்து, 160 bhp மற்றும் 250 Nm பீக் டார்க்கை வெளிப்படுத்துகிறது.

  ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஒரு பரந்த விலை வரம்பை கொண்டிருப்பதால் மார்க்கெட்டில் அதிக போட்டியாளர்களை கொண்டுள்ளது. ஹூண்டாய் டக்சன், சிட்ரோயன் சி5, டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் என ஜீப் நிறுவனத்தின் போட்டியாளர்கள் பட்டியல் நீள்கிறது.

  இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் புதிய மைல்கல்லை எட்டி சாதனை.!

  இதற்கிடையே வரும் நவம்பர் 17-ஆம் தேதி ஜீப் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய Grand Cherokee காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. முதல்முறையாக உள்நாட்டில் இந்த வாகனம் அசெம்பிள் செய்யப்படும் என்று நிறுவனம் கூறி இருக்கிறது. இதற்கான ப்ரீ-புக்கிங்ஸ் இப்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாத இறுதியில் டெலிவரி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Automobile, Jeep