• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • டிசம்பர் 31 வரை சுமார் ரூ.3 லட்சம் வரை ஆஃபர்களை அள்ளி வீசிய ஜீப் நிறுவனம்!

டிசம்பர் 31 வரை சுமார் ரூ.3 லட்சம் வரை ஆஃபர்களை அள்ளி வீசிய ஜீப் நிறுவனம்!

 (Image source: Jeep)

(Image source: Jeep)

ஜீப் காம்பஸை வாங்கும் வாடிக்கையாளருக்கு ரூ.1.8 லட்சம் வரையிலான பணச்சலுகையும், எக்சேன்ஜ் போனஸ் ரூ.50 ஆயிரமும், உதிரிபாகங்களுக்கான சலுகை 50 ஆயிரமும் வழங்கப்படுகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாடு முழுவதும் உள்ள ஜீப் விற்பனையாளர்கள் டிசம்பர் 31ம் தேதி வரையிலான ஆண்டு இறுதி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. புதிய ஆண்டு தொடங்க சிலநாட்களே இருப்பதால், இந்த ஆண்டு உற்பத்தி செய்த ஜீப்களை விற்பனை செய்ய புதுப் புது ஆஃபர்களுடன் ஜீப் நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளன. வாடிக்கையாளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையறிந்து, அவர்களை கவரும் வகையில், ஆஃபர்களை அறிவிக்கின்றன. அந்த வகையில் காம்பஸ் ஜீப் நிறுவனமும், தனது இருப்பு வாகனங்களை விற்பனை செய்ய ரூ.3 லட்சம் வரையிலான புதிய ஆஃபர்களை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு கார் மாடல்களுக்கு ஏற்றார்போல் பணச்சலுகை, எக்சேன்ஜ் போனஸ், உதரிபாகங்களின் சலுகை மற்றும் லாயல்டி போனஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. காம்பஸ் ஜீப்பை பொறுத்த வரை 2 லிட்டர் மல்டி டீசல் என்ஜினைக் கொண்டுள்ளது. மேலும், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், கிளைமேட் கன்ட்ரோலர் கொடுக்கப்பட்டுள்ளன. டிரைவருக்கும் அவரது அருகில் அமர்ந்திருப்பவருக்கும் தனித் தனியாக ஏர் பேக்குகள் வழங்கப்படுகிறது. 

ஜீப் காம்பஸை வாங்கும் வாடிக்கையாளருக்கு ரூ.1.8 லட்சம் வரையிலான பணச்சலுகையும், எக்சேன்ஜ் போனஸ் ரூ.50 ஆயிரமும், உதிரிபாகங்களுக்கான சலுகை 50 ஆயிரமும் வழங்கப்படுகின்றன. லாயல்டி போனஸ் 20 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. ஜீப் விராங்லருக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. இதற்கிடையே, காம்பஸ் கார் நிறுவனம், ஜீப்பின் முன் பக்கத்தில் சில அமைப்புகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன் டெஸ்ட் மாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. 

Also read... நிசான் கிக்ஸ் SUV கார்களுக்கு அசத்தலான ஆபஃர்- ரூ.65,000 வரை சலுகை அறிவிப்பு!



குறிப்பாக சீனா - ஸ்பெக் மாடல் கார் குவான்ஷோவில் (Guangzhou) நடைபெற்ற 2020 ஆட்டோ மொபைல் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேமாதிரியான புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காம்பஸ் ஜீப்பின் மாடல்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றங்கள், இதற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்களைப் போன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஒவ்வொரு காரின் நீளம் மற்றும் உயரம் முறை 29 மி.மீ, 17 மி.மீ என அதிகரிக்கப்பட்டுள்ளது. சக்கரங்கள் ஏற்கனவே உள்ளது போன்று கொடுக்கப்பட்டுள்ளன. அதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முன்பக்கத்தில் உள்ள விளக்குகளின் அளவு ஸ்லிம் (slim) ஆக்கப்பட்டு வைடர் எல்.இ.டி (LED), டி.ஆர்.எல்ஸ் (DRLs) கொடுக்கப்பட்டுள்ளன. முன்பக்க பம்பர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஜீப்பின் முன்பக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில மாற்றங்களுடன் இந்தியாவில் புதிய மாடல் களம் காணவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: