• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • சூப்பர் சலுகையை அறிவித்தது Jeep Compass - ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி பெற அரிய வாய்ப்பு!

சூப்பர் சலுகையை அறிவித்தது Jeep Compass - ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி பெற அரிய வாய்ப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த மாத இறுதி வரை (ஜன.31) இந்த சலுகையைப் பெறலாம். இந்த அமெரிக்க எஸ்யூவி பிராண்ட் காரை வாங்கும் பெண் வாடிக்கையாளர்களுக்கு சில கூடுதல் நன்மைகளையும் நிறுவனம் வழங்குகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜனவரி முழுவதும் ஜீப் இந்தியாவின் (Jeep India) காம்பஸ் பிரீமியம் எஸ்யூவியை (Compass premium SUV) வாங்குபவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கப்படவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் (Jeep Compass facelift) இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக முந்தைய மாடலின் விற்பனையை அதிகரிக்க இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முந்தைய மாடல் ஜீப் காம்பஸின் பங்குகளை கிளியர் செய்ய ஒரு தந்திரமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. 

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த மாத இறுதி வரை (ஜன.31) இந்த சலுகையைப் பெறலாம். இந்த அமெரிக்க எஸ்யூவி பிராண்ட் காரை வாங்கும் பெண் வாடிக்கையாளர்களுக்கு சில கூடுதல் நன்மைகளையும் நிறுவனம் வழங்குகிறது. அந்த சலுகைகள் குறித்த விவரங்களை அருகிலுள்ள ஜீப் ஷோரூமில் பெண்கள் விசாரித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜீப் காம்பசை வாங்குபவர்களுக்கு ரூ .1.5 லட்சம் வரை ரொக்க சலுகைகள் மற்றும் ஈ.எம்.ஐ திட்டங்கள் உள்ளிட்ட தள்ளுபடிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக நிறுவனம் அளித்த தகவலின்படி, இந்த எஸ்யூவி காரை, ஒரு நபர் ஜனவரி மாதத்தில் ரூ. 22,823 என்ற ஈ.எம்.ஐ. விருப்பத்தில் வாங்கலாம். 

மேலும் இந்த பிராண்ட் ஒரு கலப்பின ஈ.எம்.ஐ. (hybrid EMI) விருப்பத்தையும் வழங்குகிறது. அதில், ஒருவரின் மாதாந்திர ஈ.எம்.ஐ கட்டணம் ஒரு லட்சத்திற்கு ரூ.1,111 ஆகத் தொடங்குகிறது. மேலும் கடனின் கால அளவை பொறுத்து அதன் தொகை சீராக அதிகரிக்கிறது. அதேபோல, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஈ.எம்.ஐ கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்படும். இந்த மாதங்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதவிர இந்த காரின் அதிகாரப்பூர்வ கடன் விருப்பங்கள் வெறும் 7.25 சதவீதத்தில் தொடங்குகின்றன. 

Also read... கொரோனா காலத்திலும் நெக்சான் எலெக்ட்ரிக் கார் விற்பனை அதிகரிப்பு - வாடிக்கையாளர்கள் விருப்பும் எலெக்ட்ரிக் கார்!

காம்பஸின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. ஸ்போர்ட் பிளஸ், லாங்கிட்டியூட் ஆப்ஷன், லிமிடெட் பிளஸ், நைட் ஈகிள் மற்றும் டிரெயில்ஹாக் உள்ளிட்ட ஐந்து டிரிம்களில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த கார் பெரும்பாலும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் தோற்றத்தைப் பொறுத்தவரை, இந்த கார் புதிய ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் மற்றும் புதிய அலாய் வீல்களுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் தற்போதுள்ள 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட்டை 160 பிஹெச்பி -250 என்எம் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் யூனிட்டை 170 பிஎச்பி -350 என்எம் உடன் தக்க வைத்துக் கொள்ளும். காரின் டீசல் வேரியண்ட்டில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கும். பெட்ரோல் எஞ்சினின் மறுபுறம், 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் 7-ஸ்பீட் ட்வின் கிளட்ச் ஆட்டோமேட்டிக் உள்ளிட்ட இரண்டு கியர்பாக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: