ரயில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை சமயோசித்தமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவுக்கு ஜாவா நிறுவனம் பார்டி டூ புல்லட்டை பரிசாக வழங்கி கவுரவித்துள்ளது.
மயூர் ஷெல்கே மும்பை மத்திய ரயில்வேயில் பாயிண்ட்ஸ் மேனாக பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 17ம் தேதி வாங்கினி ரயில் நிலையத்தில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, கண் தெரியாத பெண் ஒருவர் அழைத்துச் சென்ற குழந்தை திடீரென ரயில் தண்டவாளத்தில் விழுந்தது. சிறிது தொலைவில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. நொடியும் தாமதிக்காத மயூர் ஷெல்கே உடனடியாக வேகமாக ஓடிச்சென்று அந்தக் குழந்தையைக் காப்பாற்றி, தன்னையும் தற்காத்துக் கொண்டார்.
தன் உயிரை பணையம் வைத்து அவர் செய்த இந்த துணிகர செயல், அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் ஏப்ரல் 20ம் தேதி வெளியுலகுக்கு தெரியவந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து பலரும் மயூர்ஷெல்கேவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர். மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ்கோயலும் ஷெல்கேவின் வீரதீர செயல் மற்றும் அவர் பணியின் மீது காட்டிய அக்கறை வியக்க வைப்பதாக பாராட்டு தெரிவித்தார். இதனையடுத்த அவர் பணியாற்றும் ரயில்வே சார்பில் 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு ஷெல்கே கவுரவிக்கப்பட்டார்.
Also read... இந்த வருடம் இந்தியாவில் அறிமுகமாகயுள்ள 7-சீட்டர் கார்கள் - விவரம் உள்ளே!
தனது மனிதாபிமான செயலை மேலும் ஒருமுறை நிரூபித்தார் மயூர் ஷெல்கே. அதாவது, தனக்கு ரயில்வே சார்பில் வழங்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாயில் பாதித்தொகையை தண்டவாளத்தில் விழுந்து காப்பாற்றிய குழந்தையின் குடும்பத்துக்கு வழங்குவதாக அறிவித்தார்
அவரின் இந்த நேசகரமான செயல் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மயூர் ஷெல்கேவின் செயலைப் பாராட்டி ஜாவா நிறுவனம்
புல்லட் ஒன்றை அவருக்கு பரிசாக கொடுத்துள்ளது. ஜவா நிறுவனத்தின் பார்ட்டி டூ புல்லட்டை பரிசாக கொடுத்துள்ள அந்த நிறுவனம், மயூர் ஷெல்கேவின் அர்ப்பணிப்புக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம் எனத் தெரிவித்துள்ளது. அவருடைய தைரியத்தைக் கண்டு ஜாவா நிறுவனம் பெருமை கொள்வதாகவும் கூறியுள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அனுபம் தரேஜா, பாய்ண்ட்ஸ்மேன் மயூர் ஷெல்கேவின் தைரியத்துக்கு ஜாவா குடும்பம் கடன்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
அவரின் வீரதீர சாகச செயலுக்கு தலைவணங்குவதாகவும், அவரின் பெருமை மிகு செயலுக்கு பாராட்டுவதில் பெருமை கொள்வதாகவும் அனுபம் தரேஜா தெரிவித்துள்ளார். நொடிப் பொழுது தாமதித்து இருந்தால் கூட குழந்தையின் உயிரை காப்பாற்றியிருக்க முடியாது என்ற சூழலில் மயூர் ஷெல்கே செய்த செயல் காண்போரை வியக்கவைக்கிறது. இந்த வீடியோவை இந்திய ரயில்வேதுறையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மயூர் ஷெல்கே காப்பாற்றிய குழந்தையின் தாய்க்கு கண்கள் தெரியாது. ப்ளார்பாரத்தில் தாயுடன் சென்ற குழந்தை திடீரென தண்டவாளத்தில் தவறி விழுந்தது. வீடியோ பார்க்கும் அனைவருக்கும் இந்தக் காட்சி பதைபதைக்க வைக்கிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.