Home /News /automobile /

90-வது ஆண்டுவிழாவைக் கொண்டாட புதிய க்ளாசிக் 300- அறிமுகம் செய்த ஜாவா!

90-வது ஆண்டுவிழாவைக் கொண்டாட புதிய க்ளாசிக் 300- அறிமுகம் செய்த ஜாவா!

ஜாவா க்ளாஸிக் 300

ஜாவா க்ளாஸிக் 300

அக்டோபர் 15-ம் தேதி முதல் அத்தனை ஜாவா டீலர்ஷிப் ஷோரூம்களிலும் கிடைக்கும்.

  • News18
  • Last Updated :
90-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் வகையில் புதிய க்ளாசிக் 300 ரக பைக்கை அறிமுகம் செய்துள்ளது க்ளாசிக் லெஜெண்ட் நிறுவனம்.

90-வது ஜாவா க்ளாசிக் 300 இந்தியப் பதிப்பு 1.64 லட்சம் ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏபிஎஸ் இல்லா பைக்கின் விலை 1.72 லட்சம் ஆகும். 1929-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜாவா-வின் வெற்றியைக் குறிக்கும் வகையில் இந்த பைக் ஜாவா டூயல் சேனல் ரகத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிற வடிவமைப்பு ஜாவா 500 OHV பைக்கின் அடிப்படையைப் பின்பற்றியுள்ளது. கூடுதலாக இந்த ஆண்டு வெளிவரும் அத்தனை ஜாவா பைக்கிலும் 90-ம் ஆண்டு விழா முத்திரை இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒவ்வொரு பைக்கிற்கும் அதற்கென தனி சீரியல் நம்பரும் பைக்கில் பொறிக்கப்பட உள்ளது.

மிகவும் குறைந்த பதிப்புகளே வெளியாகி உள்ள ஜாவா க்ளாசிக் 300 பைக் சிவப்பு மற்றும் ஐவரி நிறத்தில் இருக்கும். வாடிக்கையாளர்கள் உடனடி டெலிவரி எடுக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. அக்டோபர் 15-ம் தேதி முதல் அத்தனை ஜாவா டீலர்ஷிப் ஷோரூம்களிலும் கிடைக்கும்.

293cc என்ஜின் திறன், லிக்விட் கூல் என்ஜின், 27bhp திறன் வெளியீட்டுக்கான டார்க் வெளியீடு 28Nm ஆக உள்ளது. சிறப்புப் பதிவுகள் அனைத்தும் மத்திய பிரதேசத்தில் உள்ள பிதாம்பூர் உற்பத்தித் தொழிற்சாலையில் தயாராகி உள்ளன.

மேலும் பார்க்க: மஹிந்திரா உடன் இணைந்தது ஃபோர்டு... விற்பனையை அதிகரிக்க கூட்டணியா?

நவீன முறையில் பயிர்களுக்கு பூச்சிமருந்து தெளிக்கும் ட்ரோன்
Published by:Rahini M
First published:

Tags: Java bike

அடுத்த செய்தி