22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அறிமுகமானது ஜாவா மோட்டார் பைக்

1980, 90-களில் இளைஞர்களின் மனதை கவர்ந்திருந்த ஜாவா மோட்டார் பைக்குக்கு ரசிகர் வட்டம் இன்றளவிலும் உண்டு.

Web Desk | news18
Updated: November 15, 2018, 11:21 PM IST
22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அறிமுகமானது ஜாவா மோட்டார் பைக்
மீண்டும் அறிமுகமானது ஜாவா மோட்டார் பைக்
Web Desk | news18
Updated: November 15, 2018, 11:21 PM IST
இந்தியாவில் 22 ஆண்டுகளுக்கு பிறகு, பெரும் எதிர்பார்ப்புக்கிடையே ஜாவா மோட்டார் பைக் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யமஹா நிறவனத்தின் 2 ஸ்டிரோக் பைக்குகளின் உற்பத்தி பல ஆண்டுக்கு முன்பே நிறுத்தப்பட்டாலும், அதற்கென தனி ரசிகர் கூட்டம் எப்போதும் உண்டு. அதுபோல், 1980, 90-களில் இளைஞர்களின் மனதை கவர்ந்திருந்த ஜாவா மோட்டார் பைக்குக்கு ரசிகர் வட்டம் இன்றளவிலும் உண்டு. புதுக்கவிதை திரைப்படத்தில் பைக் ரேசராக நடித்த ரஜினியுடன், அந்த படம் முழுவதும் ஜாவா பைக் கூடவே இடம்பெற்றிருக்கும். அதன் பிறகு, ஜாவா மீதான மோகம் மேலும் அதிகரித்தது.

எனினும், எரிபொருள் சிக்கன 4 ஸ்டிரோக் பைக்குகள் அறிமுகமான பிறகு 1996-இல், இந்தியாவில் ஜாவாவின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இளைஞர்களுக்கு மிகப்பிடித்தமான ஜாவா மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுத்தப்பட்டபோது, வருத்தப்படாதவர்களே கிடையாது.


இந்நிலையில் ஒன்றுபட்ட செக்கோஸ்லோவேக்கியா நாட்டின் 90 ஆண்டு கால ஜாவா பிராண்டை, மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் வேறு சிலரோடு சேர்ந்து 2016-இல் வாங்கியது. தற்போது அதன் உற்பத்தி துவங்கியுள்ளது. அது முன்பை விட வலுவாக 293 சிசி இன்ஜின் கொண்ட வாகனமாக புது அவதாரமெடுத்து, என்பீல்ட், பஜாஜ் டோமினார், ஹோண்டா சிபிஆர் பைக்குகளுக்கு போட்டியாக இன்று களமிறங்கியுள்ளது. 6 கியர்கள் உடைய ஜாவாவின் எடை 179 கிலோ.

ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று மாடல் பைக்குகள் மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டன.  ஜாவாவின் வரிக்கு முந்தைய விற்பனை விலை 1.64 லட்சம் ரூபாய். ஜாவா 42-வின் துவக்க விலை ரூ.1.55 லட்சம். ஜனவரியில் அறிமுகமாகவுள்ள பெராக்கின் விலை 1.89 லட்சம் ரூபாய். பெராக் மட்டும் ஜனவரியில் விற்பனைக்கு வருகிறது. மகிந்திரா நிறுவனத்திற்கு 60 சதவீத பங்குகளும், ஜாவா நிறுவனம், பொமன் இரானி போன்றோரிடம் எஞ்சிய பங்குகள் உள்ளன.

Also watch

Loading...

First published: November 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...