• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • 1971 போர் வெற்றியை கொண்டாடும் ஜாவா... காக்கி மற்றும் மிட்நைட் கிரே கலரில் பைக் அறிமுகம்!

1971 போர் வெற்றியை கொண்டாடும் ஜாவா... காக்கி மற்றும் மிட்நைட் கிரே கலரில் பைக் அறிமுகம்!

ஜாவா

ஜாவா

இந்தப் போரின் வெற்றியை நினைவு கூறும் விதமாக ஜாவா 42 பைக் இரண்டு விதமான கலர் வேரியண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • Share this:
1971 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா ராணுவம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, காக்கி மற்றும் மிட்நைட் கிரே கலரில் ஜாவா பைக்குகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜாவா 42 வேரியண்ட் அப்டேட் செய்யப்பட்டு புதிய லுக்கில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய 1971 ஆம் ஆண்டு போரில் வெற்றி பெற்றதன் 50வது ஆண்டு நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரின் வெற்றியை நினைவு கூறும் விதமாக ஜாவா 42 பைக் இரண்டு விதமான கலர் வேரியண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தின் உடையான காக்கி கலர் மற்றும் மிட்நைட் கிரே கலரில் பைக்குகளின் பெயிண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் டேங்க் மீது இந்திய ராணுவத்தின் சின்னமும், 1971 ஆம் ஆண்டு போர் வெற்றியை குறிக்கும் சின்னமும் இடம்பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த லோகோவுக்கு மேல் மற்றும் கீழ் பகுதியில் இந்திய தேசியக் கொடிகள் 3 ஸ்டிரிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. பெயிண்ட் மற்றும் லுக் மட்டுமல்லாது இயந்திரங்களிலும் புதிய அப்டேட்டுகள் செய்யப்பட்டுள்ளன. பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸைக் கருத்தில் கொண்டு சஸ்பென்ஷன் மற்றும் பிரேம்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

ஓட்டுபவரின் சவுகரித்திற்காக இருக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. ரிம்கள் கருப்பு நிறத்திலும், சக்கரத்தின் ஸ்போக்குகள் சில்வர் நிறத்திலும் உள்ளன. மற்ற எந்திர பாகங்கள் வழக்கம்போல் கருப்பு நிறத்திலேயே உள்ளன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காக்கி மற்றும் மிட்நைட் கிரே பெயிண்டுகள் ஒளியை எதிரொலிக்காது என ஜாவா கூறியுள்ளது. ஜாவா பைக்கில் 293சிசி லிக்யுடு-கூல்டு & ஃப்யுல் இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 27.33 பிஎஸ் மற்றும் 27.02 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

Also read... உற்பத்தி செலவுகளை ஈடுசெய்ய ஸ்விஃப்ட், சிஎன்ஜி மாடல்களின் விலையை மேலும் உயர்த்தியது மாருதி சுசுகி!

மெஜந்தாவுடன் இணைந்து பெங்களூரில் களமிறங்கும் மஹிந்திரா ட்ரே சோர் எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனம்!

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள கிளாசிக் லெஜெண்ட் நிறுவனம், இந்திய ராணுவத்தின் 1971 ஆம் ஆண்டின் போர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ராணுவத்தின் கலர் மற்றும் லோகோவுடன் வெளிவரும் முதல் பைக் என்ற பெருமையை ஜாவா பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் 71 ஆம் ஆண்டு போர் வெற்றியின் 50 ஆண்டை கொண்டாடுவதில் ஜாவா பெருமை கொள்வதாகவும், ராணுவத்தின் போர் வெற்றியையும், வீர தீரத்தையும் காக்கி மற்றும் மிட்நைட் கிரே கலர்கள் வெளிப்படுத்துபவையாக இருக்கும் என விளக்கம் அளித்துள்ளது. வீரர்களின் தன்னலமற்ற சேவை மற்றும் தேசபக்தியை காக்கி கலர் குறிப்பதாக கூறியுள்ள ஜாவா, லோங்கே வாலா இடத்தில் நடைபெற்ற சண்டை நினைவு கூறும் விதமாக மிட்நைட் கிரே கலர் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

போர் நாளில் இரவு நேரத்தில் இந்தியாவுக்காக கடுமையாக போராடி பெற்ற வெற்றியில், உயிர்தியாகம் செய்த வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் இந்த கலர் பிரதிபலிப்பதாகவும் ஜாவா தெரிவித்துள்ளது. மேலும், இந்திய இராணுவத்தின் "ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்" கொண்டாட்டத்திலும் ஜாவா பைக் கலந்து கொள்ளவுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: