முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / ஜாவா பைக்கில் தற்போது 2 புதிய கலர்கள் அறிமுகம்... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

ஜாவா பைக்கில் தற்போது 2 புதிய கலர்கள் அறிமுகம்... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

பைக்

பைக்

Jawa 42 and Yezdi Roadster Bike New Colors | Jawa 42 Sports Stripe மாடல் இப்போது புதிய மெட்டாலிக் காஸ்மிக் கார்பன் ஷேட் கலரில் கிடைக்கும் மற்றும் Yezdi Roadster பைக்கானது க்ளாஸ் ஃபினிஷ் கொண்ட புதிய கிரிம்சன் டூயல்-டோன் ஷேட் கலரில் கிடைக்கும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் 2 மாடல்களான ஜாவா 42 ஸ்போர்ட்ஸ் ஸ்ட்ரைப் மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் ஆகியவற்றிற்கான புதிய கலர் ஆப்ஷன்களை ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள்ஸ் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதன்படி Jawa 42 Sports Stripe மாடல் இப்போது புதிய மெட்டாலிக் காஸ்மிக் கார்பன் ஷேட் கலரில் கிடைக்கும் மற்றும் இதன் விலை ரூ.1.95 லட்சம் ஆகும். அதே நேரம் Yezdi Roadster பைக்கானது க்ளாஸ் ஃபினிஷ் கொண்ட புதிய கிரிம்சன் டூயல்-டோன் ஷேட் கலரில் கிடைக்கும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.04 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட கலர் ஆப்ஷன்கள் Jawa 42 Bobber-ல் உள்ளதை போலவே இருக்கும்.

புதிய கலர் ஆப்ஷன்கள் பற்றி கூறி இருக்கும் ஜாவா நிறுவனம், புதிய 42 ஸ்போர்ட்ஸ் ஸ்ட்ரைப் காஸ்மிக் கார்பன் கலர் பைக் கார்பன் ஃபைபர் ஃபினிஷிங் உள்ளது. மறுபுறம் டூயல்-டோன் Yezdi Roadster Crimson மோட்டார் சைக்கிளின் ஸ்டைலை உயர்த்தும் வெள்ளை மற்றும் கிரிம்சன் ரெட் பெயிண்ட் ஸ்கீமை கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது. Jawa Yezdi Motorcycles-ன் தலைமை நிர்வாக அதிகாரியான ஆஷிஷ் சிங் ஜோஷி புதிய கலர் ஆப்ஷன்களை பற்றி கூறுகையில், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த 2 புதிய கலர்களும் ஜாவா மற்றும் யெஸ்டி ஆகிய 2 பிராண்டை வாங்க விரும்பும் வாடிகையாளர்களுக்கு இன்னும் உற்சாகத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த நிதியாண்டானது இந்திய மார்க்கெட்டில் ஆல்-நியூ Yezdi ரேஞ்சை அறிமுகப்படுத்துவது, தொழில்துறையில் இதுவரை கண்டிராத வேகத்தில் எங்கள் டீலர்ஷிப் ஃபுட்பிரின்ட்டை அதிகரிப்பது என எங்களுக்கு பல சுவாரஸ்யமான மைல்கற்கள் நிறைந்ததாக இருக்கிறது. இது ஆரம்பம் மட்டுமே, மேலும் வரும் ஆண்டில் ஜாவா & யெஸ்டி தயாரிப்பு வரம்பில் மேலும் சில உற்சாகமூட்டும் தயாரிப்புகளை சேர்க்க நாங்கள் திட்டமிட்டுளோம் என்றார். புதிய கலர் அப்டேட்ஸ்களை தவிர பைக்குகளின் மற்ற விவரங்கள் அப்படியே இருக்கும். Yezdi Roadster தொடர்ந்து அதே 334cc, சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்ட் எஞ்சினில் இயங்குகிறது, இது 29.2bhp அதிகபட்ச ஆற்றல் வெளியீட்டையும் 28.95Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த பைக்கில் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியும் உள்ளது. 2 பைக்குகளும் டூயல்-சேனல் ஏபிஎஸ் உடன் கூடிய டிஸ்க் பிரேக்ஸ்களுடன் வருகின்றன. இந்த பைக்குகளின் சஸ்பென்ஷன் டியூட்டிஸானது டெலஸ்கோபிக் ஃப்ரன்ட் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் டூயல்-ஷாக் அப்சார்பர்ஸ் மூலம் கையாளப்படுகின்றன.

Also Read :  Splendor-க்கு போட்டியாக களமிறங்கும் ஹோண்டா.. மார்ச் மாதத்தில் புதிய அறிமுகம்..!

மறுபுறம் Jawa 42 தொடர்ந்து 294.72சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்ட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த பவர்டிரெய்ன் அதிகபட்சமாக 26.9bhp ஆற்றலையும் 26.84Nm பீக் டார்க்கை உருவாக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த 2 மோட்டார் சைக்கிள்களுமே சிக்ஸ்-ஸ்பீட் டிரான்ஸ்மிஷனை கொண்டுள்ளன. இதற்கிடையில் நிறுவனம் புதிய டீலர்ஷிப்கள் மற்றும் சர்விஸ் டச் பாயிண்ட்ஸ்களுடன் இந்திய மார்க்கெட்டில் அதன் தடத்தை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் 400 டச் பாயின்ட்ஸ்களை கொண்டுள்ளது. எனினும் 2023-ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 500-ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

First published:

Tags: Automobile, Bike, Tamil News