Home /News /automobile /

ஜப்பான் நிலநடுக்கத்தால் டொயோட்டா மற்றும் நிஸ்ஸான் ஆலைகளில் உற்பத்தி பாதிப்பு

ஜப்பான் நிலநடுக்கத்தால் டொயோட்டா மற்றும் நிஸ்ஸான் ஆலைகளில் உற்பத்தி பாதிப்பு

டொயோட்டா

டொயோட்டா

ஜப்பான் நாட்டின் புகுஷிமா நகரத்தில் சரியாக புதன்கிழமை நள்ளிரவு சமயத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பான் நாட்டின் புகுஷிமா நகரத்தில் சரியாக புதன்கிழமை நள்ளிரவு சமயத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 7.4ஆக பதிவானது. நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் மற்றும் நிஸான் மோட்டார் கோ லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் தடைபட்டுள்ளன.

டொயோட்டா நிறுவன தொழிற்சாலைகள் இவாட்டே மற்றும் மியாகி ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. ஏற்கனவே திட்டமிட்டபடி அங்கு வியாழக்கிழமை வரை உற்பத்தி பணிகளை நிறுத்தி வைப்பது என்றும், அதற்குப் பிறகு உற்பத்தி பணிகளை தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், திட்டமிட்டபடி உற்பத்தி பணிகளை தொடங்க முடியவில்லை. டொயோட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஷியோரி ஹாஷிம்டோ இந்தத் தகவலை தெரிவித்தார். டொயோட்டா நிறுவனத் தயாரிப்புகளில் பிரபலமானதாக அறியப்படும் யாரிஸ் காம்ப்பாக்ட் கார் இந்த ஆலைகளில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

நிஸாண் தொழிற்சாலையிலும் உற்பத்தி பாதிப்பு

புகுஷிமா நகருக்கு அருகே இவாகி என்ற இடத்தில் நிஸான் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. இங்குள்ள ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் உற்பத்தி பணிகளை நிறுத்துவது என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது என்றும், தற்போது நிலநடுக்கம் காரணமாக உற்பத்தியை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அஸுஸா மொமோசே தெரிவித்தார்.

ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லை

டொயோட்டா தொழிற்சாலையில் இயந்திரங்கள் மற்றும் கட்டமைப்புகளுக்கு நிலநடுக்கம் எதிரொலியாக சில பாதிப்புகள் நிகழ்ந்துள்ளன. எனினும், ஊழியர்கள் யாருக்கும் காயமில்லை என்று அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இதேபோன்று, நிஸான் தொழிற்சாலையில் இருந்து அனைத்து தொழிலாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டனர் என்றும், அவர்களில் யாருக்கும் காயமில்லை என்றும் அஸுஸா மொமோசே கூறினார்.

டொயோட்டா நிறுவனத்திற்கு உறுதி பாகங்களை விநியோகம் செய்யும் நிறுவனமான டென்ஸோ கார்ப்பரேஷன் நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read... ஹோலி ஸ்பெஷல் : புதிய வண்ணங்களில் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை!

இந்த பாதிப்புகள் எதிரொலியாக டென்ஸோ நிறுவனத்தில் எந்த அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்படும் என்பது குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஹிடாச்சி அஸ்டெமோ நிறுவனத்திலும் தற்காலிகமாக உற்பத்தி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அங்கு ஆய்வு நடத்திய பிறகு உற்பத்தி மீண்டும் தொடங்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ரெனீசாஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் மூன்று இடங்களில் உள்ள ஆலைகளில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் டொயோட்டா நிறுவனத்திற்கான முக்கிய உதிரி பாகங்களை விநியோகம் செய்து வரும் சப்ளையர் நிறுவனம் ஆகும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Toyota

அடுத்த செய்தி