கார் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் திருத்தம் செய்து வழங்க வேண்டுமென ஜாகுவார் நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்டுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் ‘கார்’ என்ற ஆங்கில வார்த்தைக்கான அர்த்தம் ‘மோட்டாரால் இயங்கும் ஒரு சாலை வாகனம்’ என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு அகராதியின் மற்றொரு பதிப்பில் ‘உள் எரிப்பு இயந்திரத்திறன் கொண்ட நான்கு சக்கரங்கள் உடனான ஒரு சாலை வாகனம் மற்றும் குறைந்த அளவிலான பயணிகளை ஏற்றிச்செல்லும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கார் நிறுவனமான ஜாகுவார் ‘கார்’ என்ற ஆங்கில வார்த்தைக்குக் கொடுக்கப்பட்டுள்ள இந்த அர்த்தத்தை அல்லது விளக்கத்தை மறு ஆய்வு செய்து திருத்தி வழங்குமாறு ஆக்ஸ்ஃபோர்டு அகராதிக்குக் கோரிக்கை வைத்துள்ளது.
அதாவது, எலெக்ட்ரிக் வாகனம் என்கிற பொருள் புரியும் வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதைக் குறிப்பிடாவிட்டால் மாசு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் கார்கள் ‘கார்’ என்ற வார்த்தைக்குள் அடங்காதா? என்றும் ஜாகுவார் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் பார்க்க: டீசல் ரக க்ராண்ட் i10 கார் உற்பத்தியை நிறுத்த ஹூண்டாய் முடிவு!
70 ஆண்டுகள் பழமையான கார் கண்காட்சி!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.