எலெக்ட்ரிக் கார்கள் தயாரிப்பதாக ஜாகுவார் நிறுவனம் அறிவிப்பு

எலெக்ட்ரிக் கார்கள் தயாரிப்பதாக ஜாகுவார் நிறுவனம் அறிவிப்பு
ஜாகுவார் ஈ கார்.
  • News18
  • Last Updated: August 24, 2018, 8:53 PM IST
  • Share this:
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் எலக்டிரிக் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் தனது  ‘இ’ ரக கார்களை எலக்ட்ரிக் கார்களாக மாற்றுவதற்கும் ஜாகுவார் நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகன் மார்கலும் திருமணம் முடித்து விட்டு ஜாக்குவார் எலக்ட்ரிக் காரில் பயணம் செய்தது ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. தற்போது ஜாக்குவாரின் எலக்டிரிக் கார்கள் விற்பனைக்கு வர உள்ளன. இவற்றுக்கு இ-ஸீரோ என பெயரிடப்பட்டுள்ளன.

1960 - ஆம் தயாரிக்கப்பட்ட விண்டேஜ் ஸ்போர்ட்ஸ் கார்களை போலவே, நீளமான முன் பக்கத்துடனும், வளைந்த மேல்பகுதியுடனும் புதிய கார்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இஞ்சின்களுக்கு பதிலாக பேட்டரி மற்றும் எலக்டிரிக் மோட்டர் பொருத்தப்படும். பழைய என்ஜின்களும் காரிலே வைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாகுவாரின் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்.யூ.வி போலவே, புதிய இ-ஸீரோ ரக கார்களும் இயங்கும்.


ஜாக்வாரின் பழைய கார்களை வைத்திருப்பவர்கள், அந்நிறுவனத்திடம் கொடுத்து எலக்டிரிக் கார்களாக மாற்றிக்கொள்ளலாம். 6 சிலிண்டர்களை கொண்ட இ-ரக கார்களை முழுவதுமாக எலக்டிரிக் கார்களாக மாற்றிக்கொள்ளலாம் என ஜாகுவார் நிறுவனம் அறிவித்துள்ளது.

இ-ஸீரோ ரக கார்கள் மணிக்கு 170 மைல் வேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது. முதல் கார் 2020-ம் ஆண்டு விற்பனைக்கு வர உள்ளது. புதிய  இ-ஸீரோ ரக கார்கள் கலிபோர்னியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
First published: August 24, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading