Home /News /automobile /

ஓராண்டில் 6 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தத் திட்டம் - ஜாகுவார் அறிவிப்பு

ஓராண்டில் 6 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தத் திட்டம் - ஜாகுவார் அறிவிப்பு

ஜாகுவார் லேண்ட் ரோவர்

ஜாகுவார் லேண்ட் ரோவர்

'அடுத்த மூன்று ஆண்டுகளுள் எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகள் விலை கடுமையாக அதிகரிக்கும்'.

  • News18
  • Last Updated :
அடுத்த 12- 18 மாதங்களுக்குள் இந்தியாவில் 6 எலெக்ட்ரிக் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச அளவிலும் ஜாகுவார் லேண்ட் ரோவர் அதிகப்படியான எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாம். சுற்றுச்சூழலைக் காக்கும் பணியில் ஆட்டோமொபைல் துறை இணைய வேண்டும் என்ற நோக்கில் கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் உடனும் புதிய கார்களை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிஇஓ ரால்ஃப் ஸ்பெத் கூறுகையில், “2020-ம் ஆண்டுக்குள் எங்களது அனைத்து மாடல்களையும் எலெக்ட்ரிக் கார் ஆக மாற்ற முயற்சித்து வருகிறோம். தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ப்ரீமியம் ரக முழு எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை முதல் ஆளாக அறிமுகம் செய்ய உள்ளோம்.

எலெக்ட்ரிக் எஸ்யூவி ஜாகுவார் I-Pace ரக கார் 2020-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகும். இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சில மாடல்களை ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தும் திட்டமும் உள்ளது. இந்தியாவில் இந்த அப்டேட்க்கு சிறந்த வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். ஆனால், பேட்டரி தேவை என்பது மிகப்பெரிய சவால் ஆக உள்ளது. போதிய பேட்டரிகள் கிடைக்காததால் அடுத்த மூன்று ஆண்டுகளுள் எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகள் விலை கடுமையாக அதிகரிக்கும்” என்றார்.

மேலும் பார்க்க: அதிரடி வெளியீட்டுக்குத் தயாராகி உள்ள மாருதி சுசூகி S-Presso மைக்ரோ எஸ்யூவி!

108 ஆம்புலன்ஸ் சேவையை முறைகேடாக பயன்படுத்தும் தனியார் மருத்துவமனைகள்
Published by:Rahini M
First published:

Tags: Jaguar

அடுத்த செய்தி