புதிய இன்ஜினுடன் களமிறங்கிறது ஜாகுவார் `எப்’ ஸ்போர்ட்ஸ் கார்

புதிய இன்ஜினுடன் களமிறங்கிறது  ஜாகுவார் `எப்’ ஸ்போர்ட்ஸ் கார்
ஜாகுவார் எஃப்-வகை கார்
  • News18
  • Last Updated: July 16, 2018, 8:00 PM IST
  • Share this:
புதிய வகை இன்ஜினுடன் ஜாகுவார் `எப்’ வகை ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு வர இருக்கிறது. 4 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் இன்ஜினை எப் வகை ஸ்போர்ட்ஸ் காரில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

எஃப்- வகை ஸ்போர்ட்ஸ் கார் எல்லா வானிலையிலும் ஓட்டக்கூடிய சூப்பர் காராகும். இதன் விலை 90.93 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை இருக்கும் என ஜாகுவார் நிறுவனம் தெரிவித்துள்ல்ளது.

இந்த கார் முழுக்க முழுக்க அலுமினியத்தால் தயாரிக்கபட்டிருக்கிறது. மேலும் இது டர்போ சார்ஜ் இன்ஜினுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த புதிய காரில் இன்ஜீனியம் இன்ஜின் பொருத்தப்பட்டிருப்பதன் மூலம் வண்டியின் எடை 52 கிலோகிராம் குறைக்கப்பட்டுள்ளது. புது இன்ஜினை கொண்ட மாடல் கூப் மற்றும் கன்வர்டிபில் என இரு வகைகளிலும் விற்பனைக்கு வருகிறது.ஜாகுவார் எஃப்-வகை கார்

இந்த புதிய 221கிலோ வாட் சக்தி கொண்ட 2.0 பெட்ரோல் இன்ஜின், 5.7 செகண்டில் 100 கிமீ வேகத்தை தொடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் டாப் ஸ்பீட் ஒரு மணி நேரத்துக்கு 250 கிமீ ஆகும்.

Loading...

இது குறித்து பேசிய ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியாவின் தலைவர் ரோஹித் சூரி  “இந்த புதிய 2.0 இன்ஜினை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி  அடைகிறோம். இதன்மூலம் நாங்கள் அனைத்து தளத்திலும் உள்ள வாடிக்கையாளர்களைக் கவர முடியும். புது பொலிவுடன் வரும் இந்த எஃப்-வகை கார் அனைவரையும் கவரும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஜாகுவார் எக்ஸ்இ ( விலை ரூபாய் 39.73 லட்சம்), எக்ஸ்.எஃப் (விலை ரூபாய் 49.58 லட்சம்), எஃப்-பேஸ்(விலை ரூபாய் 62.99 லட்சம் முதல்), எக்ஸ்ஜே(ரூபாய் 110.38 லட்சம் வரை) ஆகிய கார்கள் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
First published: July 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...