இந்தியாவில் முதல் பொட்டிக் ஷோரூம் தொடங்கிய ஜாகுவார்..!

ஜாகுவார் குறித்த அத்தனை அப்டேட்களும் இந்த பொட்டிக்கில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: July 20, 2019, 10:33 PM IST
இந்தியாவில் முதல் பொட்டிக் ஷோரூம் தொடங்கிய ஜாகுவார்..!
ஜாகுவார் பொட்டிக் (Image source: Jaguar Land Rover)
Web Desk | news18
Updated: July 20, 2019, 10:33 PM IST
ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியாவில் தனது முதல் பொட்டிக் ஷோரூமை பெங்களூருவில் திறந்துள்ளது.

புதிய பொட்டிக் ஷோரூமை ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ரோஹித் சூரி திறந்து வைத்தார். வாடிக்கையாளர்களின் தேவைக்காகவும் கார்களின் கண்காட்சிக்காகவும் இந்த ஷோரூம் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜாகுவார் குறித்த அத்தனை அப்டேட்களும் இந்த பொட்டிக்கில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிர்வாக இயக்குநர் ரோகித் சூரி கூறுகையில், “இந்தியாவில் ஜாகுவாருக்கான முக்கிய சந்தையாக உள்ள பெங்களூரு நகரில் எங்களது முதல் பொட்டிக் ஷோரூமை திறந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அத்தனை டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் இந்த பொட்டிக் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாது ஜாகுவார் ரசிகர்களுக்கும் இந்த பொட்டிக் சிறந்ததொரு வாய்ப்பையும் அனுபவத்தையும் தரும்” என்றார்.


ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களுக்கு இந்தியாவில் மொத்தம் 27 இடங்களில் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப்கள் உள்ளன. அகமதாபாத், அவுரங்காபாத், பெங்களூரு, புவனேஷ்வர், சண்டிகர், சென்னை, கோவை, டெல்லி, குர்கான், ஹைதராபாத், இந்தூர், ஜெய்பூர், கொல்கஹ்தா, கொச்சி, கர்னால், லூதியானா, மங்களுரூ, மும்பை, நாக்பூர், நொய்டா, பூனே, ராய்பூர், விஜயவாடா மற்றும் சூரத் நகரில் அவுட்லெட்கள் உள்ளன.

மேலும் பார்க்க: எதிர்பாராத வீழ்ச்சியை சந்தித்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ்..!
First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...