தனித்துவம் வாய்ந்த ஆட்டோமொபைல் பிராண்டுகளை உருவாக்கும் தாயகமாக இத்தாலி இருந்து வருகிறது. குறிப்பாக, பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் புராடக்ட்கள் அங்கு மேம்படுத்தப்படுகின்றன. சொகுசு வசதிகளை கொண்ட சூப்பர் பிரீமியம், அதிக விலை கொண்ட ப்ரீமியம் மற்றும் வெகுஜன மக்களுக்கான சாதாரண வகை கார்கள் அங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
உலகின் நம்பர் ஒன் ஆட்டோமொபைல் மார்க்கெட்-ஆக இத்தாலி நீடித்து வந்த நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டில் இலகு ரக கார்களின் விற்பனையில் உலகின் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இருந்து இத்தாலி வெளியேற்றப்பட்டுள்ளது என்று பிரிட்டனைச் சேர்ந்த மோட்டார் ஒன் நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கான கார் வசதியைப் பொருத்தவரையில் இலகுரக வாகனங்கள் தான் அதிகம் விற்பனை ஆகக் கூடிய ஒன்றாகும்.
கணிக்க இயலாத சூழ்நிலைகள்:
கடந்த சில ஆண்டுகளாக, கணிக்க முடியாத திடீர் மாற்றங்களால் சர்வதேச அளவிலான ஆட்டோமொபைல் தொழில்துறையின் போக்கு மாறியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கொரோனா பெருந்தொற்று காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது செமி கண்டக்டர் பற்றாக்குறை காரணமாகவும் உற்பத்தியில் மந்த நிலை காணப்படுகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி மக்கள் நகர்ந்து வருவதன் காரணமாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகவும் கார்களை வாங்குவதற்கான மக்களின் விருப்பங்களில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
ஒட்டுமொத்தமாக கடந்த 2021ஆம் ஆண்டில் உலகில் 82 மில்லியன் பாசஞ்சர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2020ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகமாகும். இருப்பினும், இத்தாலி போன்ற சில நாடுகளில் விற்பனை அளவு குறைந்துள்ளது.
also read : இனி இந்த பரிசோதனை கட்டாயம்... வாகன உரிமையாளர்களுக்கு அதிரடி உத்தரவு..
இத்தாலி ஆட்டோமொபைல் மார்க்கெட் நிலை
2021ஆம் ஆண்டில் இலகு ரக கார்களின் விற்பனை அடிப்படையில் உலக அளவிலான மார்க்கெட்டில் இத்தாலி 12ஆவது இடத்தில் இருக்கிறது. இத்தாலியில் சுமார் 2 மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், அது ரஷியாவிற்கு அடுத்தபடியாகவும், மெக்ஸிகோவுக்கு முன்னேயும் இருக்கிறது. பொதுவாக இத்தாலி முதல் 10 இடங்களுக்குள் வரும் என்ற நிலையில், தற்போதைய இடம் அதன் பின்னடைவை காட்டுகிறது.
also read : ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக மலிவு விலைவில் கிடைக்கும் டாப் 5 கார்களின் பட்டியல்!
முதல் இடத்தில் சீனா:
உலகின் மாபெரும் ஆட்டோமொபைல் மார்க்கெட்டாக சீனா நீடிக்கிறது. உற்பத்தி மற்றும் விற்பனை ஆகிய இரண்டிலும் அது முதலிடம் பெற்றுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் சீனாவில் 26.3 மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 15 மில்லியன் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த அமெரிக்காவைக் காட்டிலும் இது கூடுதலாகும்.
சீரான நிலையில் இந்தியா:
கொரோனாவுக்கு முன்பு இருந்தே, இந்திய ஆட்டோமொபைல் துறை எண்ணற்ற சவால்கலை எதிர்கொண்டு வருகிறது. கொரோனாவுக்கு பிறகு பிஎஸ் 6 என்ஜின் கட்டாயம் என்ற உத்தரவு அமலில் இருக்கிறது. சவால்களுக்கு மத்தியிலும், பாசஞ்சர் கார்களின் விற்பனை அபரிமிதமாக இருக்கிறது. உலக அளவிலான பட்டியலில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக 4ஆம் இடத்தில் இருக்கிறது இந்தியா. ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், பிரேசில் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளை இந்தியா முந்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Cars, Italy