• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • பழைய டீசல் கார்களையும் சாலைகளில் இயக்க புதிய திட்டத்தை முன்னெடுத்த டெல்லி அரசு!

பழைய டீசல் கார்களையும் சாலைகளில் இயக்க புதிய திட்டத்தை முன்னெடுத்த டெல்லி அரசு!

டீசல் கார்

டீசல் கார்

பழைய டீசல் கார்களையும் சாலைகளில் இயக்கி செல்லும் வகையில் டெல்லி அரசு புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்து இருக்கிறது.

  • Share this:
காற்று மாசு அதிகம் காணப்படும் தலைநகர் டெல்லியில் டீசல் கார்களின் ரிஜிஸ்ட்ரேஷன் லைஃப்லைன் (registration lifeline) 10 ஆண்டுகள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான பழைய டீசல் கார்களை, டெல்லி சாலைகளில் ஓட்டுவதற்கான புதிய திட்டம் ஒன்றை அம்மாநில அரசு கொண்டு வந்து இருக்கிறது. தற்போது டெல்லியில் 38 லட்சத்திற்கும் அதிகமான பழைய வாகனங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இவற்றில் 35 லட்சம் பெட்ரோல் கார்கள் 15 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்டவை, மீதமுள்ள 3 லட்சம் டீசல் கார்கள் ஆகும். குறிப்பாக தேசிய தலைநகரில் காற்று மாசுபாடு நிலை மோசமடைந்து வரும் நிலையில், பழைய டீசல் கார்களையும் சாலைகளில் இயக்கி செல்லும் வகையில் டெல்லி அரசு புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்து இருக்கிறது.

அதற்கு பழைய டீசல் கார் ஓனர்கள் ஒரு விஷயம் செய்தாக வேண்டும். டெல்லி சாலைகளில் தங்கள் பழைய டீசல் காரைப் பயன்படுத்த, மக்கள் முதலில் அதை மின்சார வாகனமாக மாற்ற வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் ட்விட்டர் மூலம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் 10 ஆண்டுகளுக்கும் மேலான பழைய டீசல் கார்களின் உரிமையாளர்கள் தங்கள் கார் இன்ஜின்களை முழுவதுமாக எலெக்ட்ரிக் டிரைவ் டிரெய்ன்களுடன் (fully electric drivetrains) மாற்றினால் மட்டுமே தலைநகரில் இயக்க அனுமதிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

தவிர உரிமையாளர்கள் தங்கள் பழைய டீசல் கார்களில் மாற்றங்களை செய்வதற்காக அதாவது வழக்கமான உள் எரிப்பு இயந்திரங்களை (ICE) மின்சாரத்திற்கு மாற்றியமைப்பதற்காக மின்சார கருவிகளின் உற்பத்தியாளர்களை எம்பனெலிங்க் செய்ய டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

டெல்லி போக்குவரத்துக்கு துறை அமைச்சரின் இந்த அறிவிப்பின் மூலம், டீசல் இன்ஜின்களில் இருந்து எலெக்ட்ரிக்காக மாற்ற ஏற்றதாக கருதப்படும் வாகனங்கள் EV-க்களாக மாற்றப்பட்டு 10 வருட பதிவு காலக்கெடு தாண்டியும் பயன்படுத்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதே போல ஒவ்வொரு மாடலுக்கும் தனித்தனி கருவிகளை உருவாக்கினால் விலை அதிகமாக இருக்கும் என்பதால் இந்த எலெக்ட்ரிக் கிட்களின் சான்றிதழ் CNG ரெட்ரோ ஃபிட்மென்ட் போன்று உலகளாவியதாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Also read... நான்கு புதிய 350 சிசி பைக்குகள் அறிமுகம் – ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிவிப்பு

டெல்லி அரசின் இந்த புதிய திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், மக்கள் தங்கள் பழைய டீசல் கார்களை பயன்படுத்த முடியும் என்பதோடு, மாசு அளவை குறைக்கவும் இந்த திட்டம் உதவும். மேலும் இதன் மூலம் மின்சார வாகனங்களுக்கு மாறும் செலவை எலெக்ட்ரிக் கன்வர்ஷன் கிட் குறைக்கும் என்பதையும் நிரூபிக்க முடியும்.

எலெக்ட்ரிக் ஆட்டோ டெக்னலாஜியை எளிமையாக்குவது EV மார்க்கெட்டின் விரிவாக்கத்திற்கு உதவும் என்றும் நம்பப்படுகிறது. அதே நேரத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலான தடைசெய்யப்பட்ட பெட்ரோல் மாடல்களில் EV கருவிகளை மறுசீரமைக்க அனுமதிக்கப்படுமா என்பது குறித்து இன்னும் தெளிவான அறிவிப்பை டெல்லி அரசு வெளியிடவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: