ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. தொழில்நுட்பம் மட்டும் இன்றி காலத்திற்கு ஏற்ற நவீன சாதனங்களும் ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்துடன் இணைக்கிறது. உலகின் பல நாடுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கார்களில் மேலும் நவீன வளர்ச்சியடைந்து முழுமையாக சூரிய சக்தியில் இயக்கப்படும் கார்கள் உற்பத்தி செய்யப்படுமா என்ற கேள்வி கண்டிப்பாக எழுகிறது. இந்த கட்டுரையில் கார்கள் முழுமையாக சூரிய சக்தியில் இயங்க உள்ள வாய்ப்புகள் மற்றும் அதன் பயனபாட்டை பற்றி பார்ப்போம். நடையணம், காளை வண்டிப் பயணம், சைக்கிள் பயணம், இரு சக்கர வாகனப் பயணம், கார் பயணம், செகுசு பார் பயணம் என நாளுக்கு நாள் நம் பயணத்தின் பாதை பரிணமத்துக்கொண்டே வருகிறது. நமக்கு ஏற்படுகிற தேவை கண்டுபிடிப்பின் அவசியத்தை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது.
எலெக்ட்ரிக் கார் வரை வந்து விட்டோம். அடுத்து சோலார் கார் தான். இந்த நினைப்பில் பலரும் சோலார் காரை தயாரி்க்கும் முனைப்பில் இருக்கிறார்கள். ஆனால் சோலார் காரை நமது பயன்பாட்டிற்கு தடையில்லாமல் பயன்படுத்தும் வகையில் தயாரிக்க முடியுமா? இது சாத்தியமா? என எழும் பல கேள்விகளுக்கு ஆணித்தரமாக பதில் கொடுக்க முடியவில்லை . சோலார் கார் தயாரிக்கும் சாத்தியக் கூறுகள் பற்ற இப்போது பார்க்கலாம்.
Also Read : 4,000-க்கும் மேற்பட்ட கார்களை ரீகால் செய்த டொயோட்டா நிறுவனம்..!
இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான கார்கள் பெட்ரோல் அல்லது டீசல் பவரில் இயங்கும் திறன் கொண்டவை, இந்த எரிபொருள் பூமியி்ல் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய்யிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. ஆனால் பூமியிலிருந்து இன்னும் எவ்வளவு காலத்திற்குக் கச்சா எண்ணெய் கிடைக்கும் என நமக்குத் தெரியாது. இதனால் மாற்று எரிசக்தியில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். கார் தயாரிப்பு நிறுவனங்களும் அதை முன்னெடுத்து வருகிறார்கள். இதையடுத்து தற்போது ஹைபிரிட் கார்கள், எலெக்ட்ரிக் கார்கள், ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் கார்கள் தயாரிப்பில் உள்ளன.
எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களுக்கு மின்சார சக்தி தேவை. இந்த மின் சக்தி ஏதாவது எரிபொருள் மூலம்தான் கிடைக்கிறது. இதை மாற்றி சூரிய சக்தியில் இந்த மின்சாரத்தை எடுத்து எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தும்படியான சூரிய சக்தி கார்கள் குறித்து சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதை அடிப்படியாகக் கொண்டு சில நிறுவனங்கள் சூரிய சக்தியில் இயங்கும் காரை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
சூரிய சக்தி என்பது நமக்கு எப்பொழுதும் கிடைத்துக்கொண்டே இருக்கும் ஒரு சக்தி. இது என்றைக்குமே தீர்ந்து போகாத ஒரு ஆற்றல் என்பதால் இந்த சக்தியைப் பயன்படுத்தி கார்களை வடிவமைத்தால் அது இயற்கை வளங்களை அழிக்காமல் இயங்கும்.
தற்போது உள்ள கார்களுக்கு நல்ல மாற்றாக அமையும். ஆனால் அது அவ்வளவு எளிதில்லை. ஒரு சதுர மீட்டர் அளவிலான சூரிய ஒளியில் 1000 வாட்ஸ் மின்சாரம் பூமிக்கு வரும். ஆனால் அதில் 20 சதவீதம் அதாவது 200 வாட்ஸ் மின்சாரத்தைத் தான் தற்போது உள்ள சோலார் பேனல்களால் கன்வெர்ட் செய்ய முடியும். இப்பொழுது ஒரு கார் முழுவதும் சோலார் பேனல்களாக வைத்து டிசன் செய்தாலும் அதிகபட்சம் 2 கிலோ வாட் மின்சாரத்தைத் தான் ஒரே நேரத்தில் எடுக்க முடியும். ஆனால் மின்சார கார் இயங்க 100 கிலோவாட் திறன் கொண்ட மோட்டார் தேவை.
அப்படி என்றால் கார் மூலம் நமக்கு கிடைக்கும் சூரிய சக்தியை விட 50 மடங்கு அதிக திறன் கொண்ட மோட்டார் அது. அதனால் சூரிய சக்தியை மட்டும் ஒரே சக்தியைக் கொண்டு கார்களை வடிவமைக்க முடியாது. கார் முழுவதும் சோலார் பேனல்கள் கொண்டு தயாரிப்பது காரின் வடிவமைப்பில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும். இது போக ஹைட்லைட், வைப்பர், ரியர் வியூ கண்ணாடி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த முடியாது.
இது போக சோலார் பேனல்கள் ஒரே இடத்தில் இருக்கும் போது தான் சிறப்பாகச் செயல்படும் நகர்ந்து கொண்டேயிருந்தால் காற்று காரணமாக அதன் திறன் குறையும். அதனால் தற்போது உள்ள தொழிற்நுட்பத்தின்படி சோலார் கார் என்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்.
செய்தியாளர்: ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Car, Luxurious cars