• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • Bajaj Vs EV Startups: கொளுத்தி போட்ட பஜாஜ் - பதிலடி கொடுக்கும் ஓலா, ஏதர் நிறுவனங்கள்!

Bajaj Vs EV Startups: கொளுத்தி போட்ட பஜாஜ் - பதிலடி கொடுக்கும் ஓலா, ஏதர் நிறுவனங்கள்!

ஏதர்

ஏதர்

பஜாஜின் இந்தக் கருத்து எலக்டிரிக் இருச்சக்கர வாகன தயாரிப்பில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களான ஓலா, ஏதர், டார்க், மற்றும் ஸ்மார்ட் இ-நிறுவனங்களுக்கு கடுப்பை கிளப்பியுள்ளது.

  • Share this:
இரு சக்கர வாகன விற்பனையில் சாம்பியன்ஸாக இருக்கும் பஜாஜ், என்பீல்டு, டி.வி.எஸ் நிறுவனங்களை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வீழ்த்திவிட முடியாது என மறைமுகமாக கூறிய பஜாஜ்ஜூக்கு ஓலா, ஏதர் நிறுவனங்கள் பதிலடி கொடுத்து வருகின்றன.

பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எப்போதும் தனக்கு மனதில் தோன்றியதை வெளிப்படையாக கூறுதற்கு தயங்கியதே இல்லை. அண்மையில் அந்த நிறுவனத்தின் பஜாஜ் பல்சர் 250 மாடல் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், புதிய பைக்குகளை அறிமுகப்படுத்திய பின்னர் ஒரு சில கருத்துகளை வெளிப்படையாக பேசினார்.

இருச்சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தியில் தடம் பதித்து விற்பனையை ஜெட் வேகத்தில் செய்து வரும் ஓலா, ஏதர், டார்க் மற்றும் ஸ்மார்ட் இ (Ola, Ather, Tork and SmartE) நிறுவனங்களை பற்றி பேசும்போது, சாம்பியன்கள் எப்படி காலை உணவாக ஓட்ஸ் (OATS) எடுத்துக்கொள்கிறார்களோ, அதுபோல பாரம்பரியமாக இருக்கும் நிறுவனங்களான பஜாஜ், என்பீல்டு மற்றும் டி.வி.எஸ் நிறுவனங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை எளிதாக ஆதிக்கம் செலுத்திவிடும் என மறைமுகமாக தெரிவித்தார். அதாவது, BET (பஜாஜ், என்பீல்டு, டி.வி.எஸ்) நிறுவனங்கள் தக்க சமயத்தில் மின்சார வாகன மார்க்கெட்டில் நுழைந்து ஆதிக்கம் செலுத்தும் என்றும் குறிப்பிட்டார்.



பஜாஜின் இந்தக் கருத்து எலக்டிரிக் இருச்சக்கர வாகன தயாரிப்பில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களான ஓலா, ஏதர், டார்க், மற்றும் ஸ்மார்ட் இ-நிறுவனங்களுக்கு கடுப்பை கிளப்பியுள்ளது. பஜாஜ் மறைமுகமாக தாக்கி பேசியதற்கு எதிர்வினையாற்றியுள்ள ஏதர் நிறுவனம், அவர் கூறிய வார்த்தையில் இருந்தே மீம் ஒன்றை கிரியேட் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

அதில் ஓட்ஸ் என்ற புகைப்படத்தை பதிவிட்டு, உங்களுக்கு உடனடியாக பிக்அப் கிடைக்கவேண்டும் என்றால், இதனை தேர்ந்தெடுங்கள் என பஜாஜின் ஸ்டைலிலேயே மறைமுகமாக கூறியுள்ளது. ஓட்ஸ் தினத்தில் ஏதர் இந்த மீம்மை பதிவிட்டிருந்தாலும், எலக்டிரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை விமர்சித்த ராகுல் பஜாஜின் கருத்துக்கு பதில் சொல்லும் விதமாகவும் அமைந்துள்ளது.

சாம்பியன்களுக்கே ஓட்ஸ் தேவைப்படுகிறது, இதனை நாங்கள் சொல்லவில்லை, நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளார்கள் என்றும் ஏதர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சாதரணமாக ஏதர் நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தைப் பார்த்தால், அந்த நிறுவனம் ஏதோ ஓட்ஸ் புரோடக்ட் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றும். ஆனால், ராகுல் பஜாஜின் கருத்துக்கு பதிலடியாக இந்த போஸ்டை அவர்கள் பதிவு செய்துள்ளனர். ஓலாவும், ராகுல் பஜாஜ் கருத்துக்கு தங்களுடைய எதிர்வினையை பதிவு செய்துள்ளனர்.

Also read... இளைஞர்களே தட்டி தூக்கலாம்... இரு வெர்சன்களில் வெளியான பஜாஜ் பல்சர் பைக்குகள்!

நெட்டிசன் ஒருவர் ஒரே சமயத்தில் ஓலா நிறுவனம் 90 ஆயிரம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 1800 எலக்டிரிக் ஸ்கூட்டர்களை ஏதர் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால், பஜாஜ் நிறுவனம் ஜனவரி 2020 ல் இருந்து ஜூலை 2021 வரை வெறும் 3300 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. பஜாஜின் கருத்து நகைப்பாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். நெட்டிசனின் இந்த பதிவை ஓலாவின் நிர்வாக இயக்குநர் பவிஷ் அகர்வால் ரீ டிவிட் செய்துள்ளார். இதேபோல் மற்ற இரு ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பஜாஜின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: