முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / காஷ்மீருக்கு சுற்றுலா போகா ஆசையா! மலிவு விலையில் IRCTC வழங்கும் டூர் பேக்கேஜ்.! 

காஷ்மீருக்கு சுற்றுலா போகா ஆசையா! மலிவு விலையில் IRCTC வழங்கும் டூர் பேக்கேஜ்.! 

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர்

IRCTC Kashmir Tour Package | 'ஹெவன் ஆன் எர்த்' என்று அழைக்கப்படும் காஷ்மீரின் அழகிய சமவெளிகளை ரசிக்க IRCTC உருவாக்கியுள்ள பேக்கேஜின் பெயர் "Kashmir Heaven On Earth Ex Mumbai (WMA50)" என்பதாகும்.

  • Last Updated :
  • Jammu and Kashmir, India

பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் பகுதியாக இருக்கிறது இந்தியாவின் ஜம்மு காஷ்மீர். இதன் அழகு காரணமாக நாட்டில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக இருக்கிறது காஷ்மீர். அழகான மற்றும் வசீகரமான இயற்கை சூழலை கொண்டுள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் காஷ்மீருக்கு செல்கின்றனர்.

பார்த்து ரசிக்க ரசிக்க கண்களுக்கு மிகவும் இனிமையாகவும் மற்றும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையிலும் இருக்கும் அழகிய காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு நீங்கள் மலிவு கட்டணத்தில் செல்ல விரும்புகிறீர்களா.! ஆனால் அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்ற தயக்கத்தில் காஷ்மீர் டூரை தள்ளி போட்டு கொண்டே இருக்கிறீர்களா.!

அப்படி என்றால் IRCTC உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்குச் செல்ல விரும்புவோருக்கு ஒரு கவர்ச்சிகரமான ஏர் டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. இந்திய ரயில்வேயின் IRCTC-ன் இந்த ஸ்பெஷல் டூர் பேக்கேஜை நீங்கள் தேர்வு செய்தால் காஷ்மீரில் எத்தனை நாட்கள் செலவிடுவீர்கள், எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும் உள்ளிட்ட இந்த டூர் பேக்கேஜ் பற்றிய முழுமையான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

IRCTC-யின் காஷ்மீர் டூர் பேக்கேஜ்..

'ஹெவன் ஆன் எர்த்' என்று அழைக்கப்படும் காஷ்மீரின் அழகிய சமவெளிகளை ரசிக்க IRCTC உருவாக்கியுள்ள பேக்கேஜின் பெயர் "Kashmir Heaven On Earth Ex Mumbai (WMA50)" என்பதாகும். IRCTC-ன் இந்த பேக்கேஜை தேர்வு செய்தால் நீங்கள் காஷ்மீருக்கு விமானத்தில் செல்லலாம்.

Also Read : தென்னிந்திய சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்துள்ள ஐஆர்சிடிசி.! விவரங்கள்..

IRCTC சமீபத்தில் வெளியிட்டுள்ள ட்விட்டில் காஷ்மீர் டூர் பேக்கேஜ் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. காஷ்மீரின் மிக அழகான இடங்களான ஸ்ரீநகர், குல்மார்க், சோன்மார்க் மற்றும் பஹல்காம் போன்ற இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பை இந்த ஸ்பெஷல் பேக்கேஜ் வழங்குகிறது. 6 பகல் மற்றும் 5 இரவுகளை கொண்ட இந்த டூர் பேக்கேஜ் மும்பையில் இருந்து துவங்குகிறது. இந்த டூர் பேக்கேஜ் வரும் செப்டம்பர் 5, செப்டம்பர் 19 மற்றும் அக்டோபர் 10 ஆகிய மூன்று தேதிகளில் துவங்க உள்ளது. உங்களுக்கு இதில் எந்த தேதி வசதியோ அந்த தேதியில் டூர் பேக்கேஜை புக் செய்து கொள்ளலாம்.

எவ்வளவு செலவு ஆகும்.?

இந்த பேக்கேஜ் மிகவும் சிக்கனமானது. இந்த டூரிஸ்ட் பேக்கேஜில் ஒரு சுற்றுலாப் பயணிக்கு ரூ.44,300 செலவாகும். double occupancy-க்கு ஒரு நபருக்கு ரூ.35,900 செலவாகும். குடும்பத்துடன் காஷ்மீர் சுற்றுலா செல்வதாக இருந்தால் மொத்தம் மூன்று பேர் இருந்தீர்கள் என்றால் ஒரு நபருக்கு ரூ.34,700 செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு தனி கட்டணம் விதிக்கப்படும். இதை பற்றிய கூடுதல் தகவலுக்கு,IRCTC-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை விசிட் செய்யலாம்.

Also Read : ரயில் பயணங்களில் இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்... வழிமுறை இதோ...!?

IRCTC-ன் அதிகாரபூர்வ வெப்சைட்டான www.irctctourism.com-க்கு சென்று இந்த டூரிஸ்ட் பேக்கேஜை புக்கிங் செய்யலாம். தவிர IRCTC சுற்றுலா வசதி மையங்கள், மண்டல அலுவலகங்கள் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் மூலமாகவும் புக்கிங் செய்யலாம்.

டூர் பேக்கேஜின் ஹைலைட்ஸ்:

பேக்கேஜின் பெயர் - காஷ்மீர் ஹெவன் ஆன் எர்த் எக்ஸ் மும்பை

புறப்படும் தேதிகள் - செப்டம்பர் 5, செப்டம்பர் 19 மற்றும் அக்டோபர் 10

பார்க்க கூடிய இடங்கள் - ஸ்ரீநகர், குல்மார்க், சோன்மார்க், பஹல்காம்

பயணத்தின் காலம் - 6 பகல்கள் மற்றும் 5 இரவுகள்

top videos

    பயண முறை - விமானம்

    First published:

    Tags: IRCTC, Jammu and Kashmir, Tour