முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / விமான பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்...சர்வதேச விமான கட்டணங்கள் குறைய வாய்ப்பு

விமான பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்...சர்வதேச விமான கட்டணங்கள் குறைய வாய்ப்பு

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட 116 நாடுகளுடன் இந்தியா இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட 116 நாடுகளுடன் இந்தியா இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

116 நாடுகளுடன் இருதரப்பு Air Services Agreement உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுடன் விமானச் சேவை ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இருதரப்பு விமானச் சேவைகளுக்காக இந்திய அரசு 116 நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செயல்படுத்தியுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் விமான இணைப்பு தளத்தை அதிகரிக்கவும், விரிவுபடுத்தவும் 116 நாடுகளுடன் இருதரப்பு விமானச் சேவை ஒப்பந்தங்களைச் செயல்படுத்தியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

116 நாடுகளுடன் இருதரப்பு விமானச் சேவைகள் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ள தகவலை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் விகே சிங் நாடாளுமன்றத்தில் தனது எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார். ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா வரை உள்ள 116 நாடுகளுடன் இருதரப்பு Air Services Agreement உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

Also Read :எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடிக்கும் என்ற பயமா? இனி கவலை இல்லை...வந்தாச்சு ஃபயர்ப்ரூஃப் பேட்டரி!!

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட 116 நாடுகளுடன் இந்தியா இருதரப்பு விமானச் சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த இருதரப்பு விமானச் சேவை ஒப்பந்தம் வேறுபட்ட அளவிலான விமான சுதந்திரத்தை வழங்கும். மேலும் இந்தியாவின் விமான நிறுவனங்களுக்கு மற்றொரு நாட்டின் வான்வெளியில் நுழைவதற்கான அனுமதியை வழங்கும் வணிக விமான உரிமைகளின் தொகுப்பாக இருக்கிறது.

இந்தியாவிற்கும் குறிப்பிட்ட விமான நிறுவனம் எங்கிருந்து இயக்கப்படுகிறதோ அந்த நாட்டிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இருதரப்பு விமானச் சேவைகள் ஒப்பந்தத்தில் point of call-ஆக நியமிக்கப்பட்டால், எந்த ஒரு வெளிநாட்டு விமான நிறுவனமும் இந்தியாவில் உள்ள ஒரு பாயின்ட்டிற்கு அல்லது பாயின்ட்டில் இருந்து செயல்பட முடியும் என்று எழுத்துப்பூர்வமா பதிலில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசின் இந்த நடவடிக்கை பயணிகளுக்கும் பயனளிக்கும் மற்றும் இதன் விளைவாகச் சர்வதேச விமான கட்டணங்கள் குறைக்கப்படலாம் என்று பயணத்துறை நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ விமான நிலையங்களைத் தவிர மற்ற நகரங்களிலிருந்து வெளிநாட்டு விமானங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று பயணத் துறை நீண்ட காலமாக அரசை வற்புறுத்தி வருகிறது. இதனிடையே STIC டிராவல் குழுமத்தின் குழு வணிக மேம்பாட்டு இயக்குனர் அஞ்சு வாரியா கூறுகையில், இருதரப்பு விமானச் சேவை ஒப்பந்தங்களை பல்வேறு நாடுகளுடன் செய்வது இருக்கை திறனை அதிகரிக்கவும், வெளிநாட்டு கேரியர்களுக்கு திறந்த வான கொள்கையை வைத்திருப்பதும் நல்லது.

Also Read :ஜூலை மாதத்தில் ஹூண்டாய் இந்தியா கார் விற்பனை அதிகரிப்பு... எவ்வளவு தெரியுமா.? இதோ முழு விபரம்!

ஏனெனில் இது பயணிகளுக்கு மிகவும் பயனளிக்கும் எனக் கூறி இருக்கிறார். எனினும் வெளிநாட்டு கேரியர்களுக்கு ஆதரவான point of call காணப்படும் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, பயணிகள் சேவைகளை இயக்கும் நோக்கத்திற்காக எந்தவொரு வெளிநாட்டு கேரியருக்கும் புதிய point of call-ஆக தற்போது மெட்ரோ அல்லாத விமான நிலையத்தை அரசு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Flight, Flight travel, Ticket booking