Home /News /automobile /

பலரின் கனவாக மாறியுள்ள உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்- எமிரேட்ஸ் A380 பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

பலரின் கனவாக மாறியுள்ள உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்- எமிரேட்ஸ் A380 பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

உலகின் மிகப்பெரிய விமானம் எமிரேட்ஸ் A380

உலகின் மிகப்பெரிய விமானம் எமிரேட்ஸ் A380

​​உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அக்டோபர் 30, 2022 முதல் துபாயில் இருந்து பெங்களூரு வரையிலான வழித்தடத்தில் பயன்படுத்தவுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    எமிரேட்ஸ் A380 விமானம் என்பது மிக அற்புதமான விமானமாகும். இதன் தொழில்நுட்ப அமைப்பு மற்றும் பல முன்னேற்ற வடிவமைப்புகளைப் பற்றிப் பேசிக் கொண்டே போகலாம். இது ஒரு பொறியியல் அற்புதம் என்று சொன்னால் அது மிகையாகாது. உலகின் மிகப்பெரிய விமானம் என்பதால், இதில் அனைத்து ஆடம்பரமான வசதிகள் மற்றும் அம்சங்களும் உள்ளன.

    இப்போது, ​​எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இந்த விமானத்தை அக்டோபர் 30, 2022 முதல் துபாயில் இருந்து பெங்களூரு வரையிலான வழித்தடத்தில் பயன்படுத்தவுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகப் பலராலும் கொண்டாடப்படுகிறது.

    எமிரேட்ஸ் A380 சொகுசு விமானம்


    இந்நிலையில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபாய் மற்றும் பெங்களூரு இடையே இதுவரை போயிங் 777 விமானம் மூலம் இயக்கப்பட்டு வந்தது. எனவே, A380 விமானமானது பெங்களூரு மண்ணில் தரையிறங்குவதற்குக் குறித்தும், உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமாக இது மாறியுள்ளதைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களைப் பார்க்கலாம். இந்த எமிரேட்ஸ் A380 விமானமானது 510 முதல் 575 டன்கள் வரை எடை கொண்டதாக உள்ளது.

    எமிரேட்ஸ் A380 சொகுசு விமானம்


    இந்த A380 ஆனது போயிங் 777 விமானத்தை விட 45 சதவீதம் கூடுதலான இருக்கை திறன் கொண்டது. அதே போன்று கூடுதல் சொகுசு அறைகள் மற்றும் அனைத்து அறைகளிலும் மிகப்பெரிய திரைகளை இது கொண்டுள்ளது. இந்த எமிரேட்ஸ் விமானம் இதுவரை 1 பில்லியன் கிமீ-க்கு மேல் பறந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் 105 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் இதில் பயணம் செய்துள்ளனர்.

    எமிரேட்ஸ் A380 சொகுசு விமானம்


    இந்த விமானத்தின் முதல் வகுப்பில் தனியார் அறைகள் மற்றும் ஷவர் ஸ்பாக்கள் முதல் வணிக வகுப்பில் பிளாட்-பெட் இருக்கைகள் வரை பல சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும் இதில் கூடுதல் அறை, வயர்லெஸ் புளூடூத் இணைப்பு தரப்படுகிறது. மேலும் இதில் இன்ஃப்லைட் வைஃபையையும் தரப்பட்டுள்ளது. அதே போன்று வணிக வகுப்பில் உள்ளவர்களுக்கு, A380 விமானத்தில் ஒரு உள்விடுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் குறிப்பிட்ட இடங்களுக்கு இடையே புதிய பிரீமியம் எகனாமி வகுப்பையும் தொடங்கியுள்ளது.

    எமிரேட்ஸ் A380 சொகுசு விமானம்


    இந்த விமானம் GP7200 RR ட்ரெண்ட் 900 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 8,000 மைல்கள் (சுமார் 15,000 கிமீ) வரை பறக்கக் கூடியது. மேலும் இது 43,100 அடி வரை உயரத்தில் பறக்க இயலும். இந்த A380 விமானத்தின் உட்புற அமைப்பானது நேர்த்தியான கிரீம் மற்றும் வெண்கலத்தில் செய்யப்பட்டுள்ளது. முதல் வகுப்பில் பயணம் செய்யக் கூடியவர்களுக்கு பல்வேறு சலுகைகள் இதில் தரப்படுகிறது. இதில் தனியுரிமை கதவுகள், தனிப்பட்ட மினி-பார், சுற்றுப்புற விளக்குகள், தனியார் சினிமா, வேனிட்டி டேபிள் மற்றும் கண்ணாடி ஆகியவையும் அடங்கும்.
    Published by:Janvi
    First published:

    Tags: Dubai, Mumbai, Plane

    அடுத்த செய்தி