ஆரம்ப கால பறக்கும் கார்களின் விலை என்னவாக இருக்கும் தெரியுமா?

flying cars

பறக்கும் காரின் முதல் மாடல் சந்தையில் அறிமுகமாகும் போது, இந்திய ரூபாயின் மதிப்பில் பறக்கும் கார்களின் விலை கிட்டத்தட்ட ஆறு கோடி இருக்கலாம்.

  • Share this:
பறக்கும் காரின் விலை, எரிபொருள், கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும் பயிற்சிக் கட்டணம், காப்பீடு மற்றும் பார்க்கிங் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு, பறக்கும் கார் வாங்க எவ்வளவு செலவாகும் என்று பெண்டகன் மோட்டார் குழும ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஒரு பறக்கும் காரை வாங்குவது மற்றும் பயன்படுத்துவது என்பது மிகவும் ஆடம்பரமானது என்று பிரிட்டன் ஆய்வு தெரிவித்துள்ளது. சராசரியாக £535,000 அல்லது சுமார் $741,000 செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

காரின் விலை, எதிர்காலத்தில் வரக்கூடிய பறக்கும் கார்களின் அறிவிக்கப்பட்ட ரீடெயில் விலை, பறக்க உரிமம் பெறுவதற்கான தொகை, காப்பீடு, ஸ்டோரேஜ் மற்றும் எரிபொருள் நிரப்புதல் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. இங்கிலாந்தின் கார் விற்பனை வலைத்தளமான பென்டகன் மோட்டார் குழுமத்தின் ஆராய்ச்சி, ஒரு பறக்கும் காரை சொந்தமாக்க சராசரியாக £ 535,831 செலவாகும் - அல்லது அமெரிக்க பணமதிப்பில் தோராயமாக $742,498 ஆகலாம் என்று கூறுகிறது. முதல் மாடல் சந்தையில் அறிமுகமாகும் போது, இந்திய ரூபாயின் மதிப்பில் பறக்கும் கார்களின் விலை கிட்டத்தட்ட ஆறு கோடி இருக்கலாம்.

Also Read:  அம்மாடியோவ்...! பழங்கால டெலிபோன் பூத்-க்கு இவ்வளவு விலையா? - செடி விற்பனை செய்தவருக்கு அடித்த ஜாக்பாட்!

இந்தத் தொகையை கணக்கிடுவதற்கு, பறக்கும் கார்களின் அடக்க விலையை மட்டுமில்லாமல், ஒரு வாகன இயக்கத்திற்குத் தேவையான பல விஷயங்களுக்கு ஆகும் செலவினங்களையும் உள்ளடக்கியுள்ளது. எரிபொருள் பயன்பாடு, பறக்கும் கார் பயிற்சி கட்டணம், காப்பீடு மற்றும் பார்க்கிங் கட்டணம் ஆகியவை இதிலே சேர்க்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, பறக்கும் கார் பயன்படுத்துவதற்கான முறையான உரிமமும் தேவைப்படுகிறது. இந்த உரிமத்தைப் பெறுவதற்கு தோராயமாக £ 26,830 ($37,190) செலவாகும் என்று கூறப்படுகிறது.

Also Read:   Tyre Safety: லாங் டிரிப்புக்கு திட்டமிடுகிறீர்களா? டயரில் இதையெல்லாம் செக் பண்ணுங்க!

இதற்கிடையில், இதே அளவு மற்றும் எடை உள்ள, பறக்கும் வாகனங்கள் (விமானங்கள்) ஓட்டும் முன் அனுபவம் இல்லாத ஒரு நபருக்கு வழங்கப்படும் காப்பீடு என்ற அடிப்படையில், பறக்கும் காருக்கான காப்பீடுத் தொகை £12,850 ($ 17,810) என்று தோராயமாக கூறப்படுகிறது. ஆனால், பறக்கும் காரை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ள, உங்களுக்கு ஆகும் மிகப்பெரிய செலவு, வாகனம் வாங்குவதாகும். காரின் விலை மட்டும், கிட்டத்தட்ட £ 500,000 ($693,000) ஆகலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆய்வில் சேர்க்கப்பட்ட மாடல்களில் ஏரோமொபில் (AeroMobil), அஸ்கா (Aska),மோல்லர் ஸ்கைகார் 400 (Moller Skycar), டெர்ராபூஜியா (Terrafugia) மற்றும் ஸ்கைட்ரைவ் (SkyDrive) ஆகியவற்றோடு, பால்-வி (Pal-V) உள்ளது. நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்ட இந்த மாடல் 2022 ஆம் ஆண்டில் சந்தைப்படுத்தப்படும் முதல் பறக்கும் காராக இருக்கலாம். சாலையில் ஒரு சிறிய ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுவது போன்ற தோற்றமளிக்கும் இந்த மாடல், கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு பறக்கும் வாகனமாக உருமாறிவிடும்.
Published by:Arun
First published: