• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • இளைஞர்களே தட்டி தூக்கலாம்... இரு வெர்சன்களில் வெளியான பஜாஜ் பல்சர் பைக்குகள்!

இளைஞர்களே தட்டி தூக்கலாம்... இரு வெர்சன்களில் வெளியான பஜாஜ் பல்சர் பைக்குகள்!

பஜாஜ் பல்சர்

பஜாஜ் பல்சர்

வடிவமைப்பில் 5 ஆண்டுகளாக கவனம் செலுத்தியதாக தெரிவித்த அவர், 3 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும் பஜாஜ் கூறினார்.

  • Share this:
250 சிசி என்ஜினில் இரு வெர்சன்களில் புதிய பஜாஜ் பல்சர் பைக்குகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இளைஞர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கும் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக்குகள் கடந்த 10 ஆண்டுகளாக இருசக்கர வாகனப் பிரிவில், அந்த நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய மாடலாக இருந்து வருகிறது. மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் அந்தப் பைக் மாடலில், இதுவரை அதிகபட்சம் 220 சிசி மட்டுமே இருந்தது. தற்போது, புதிய மாடலாக 250 சிசியில் என் 250 & எஃப்250 என இரு பைக்குகளை பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையின்படி 1.38 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 28ம் தேதி நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ், புதிய பல்சர் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். வேகத்துக்கும், ரைடிங்கிற்கும் புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என்ற பெயர் பெற்றிருக்கும் பல்சர் பிராண்டின் இந்த புதிய பைக்குகளும், அதே பெயரை எடுக்கும் என பஜாஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய பஜாஜ், "இருச்சக்கர வாகன மார்க்கெட்டில் பஜாஜ் நீண்ட காலமாக இருக்கிறது. வேகத்துக்கும், ரைடிங்கில் திரில்லான அனுபவத்தையும் கொடுத்து வருகிறது. அதே பிராண்டில் 250 சிசியில் இரண்டு பைக்குகளை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பைக்குகளும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் லுக், சர்வீஸ் திருப்திகரமானதாக இருக்கும்" என குறிப்பிட்டார்.

வடிவமைப்பில் 5 ஆண்டுகளாக கவனம் செலுத்தியதாக தெரிவித்த அவர், 3 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும் பஜாஜ் கூறினார். விலையைப் பொறுத்தவரை, 250N பைக்கின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.38 லட்சமாகவும், 250F பைக்கின் விலை ரூ.1.40 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 250 என் பைக், டெக்னோ கிரே நிறத்திலும், 250 எப் பைக் சிவப்பு நிறத்திலும் உள்ளது.

Also read... குரூயிசர் பைக்குகளை களமிறக்கும் கோமாகி - இந்தியாவின் முதல் எலக்டிரிக் பைக்!

புதிய பல்சர் 250 பைக்குகள் இரண்டிலும் ஒரே மாதிரியான 4-ஸ்ட்ரோக் ஆயில்-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 24.5 பிஎஸ் மற்றும் 21.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் உடன் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின் பக்க சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளது. சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்பக்கத்தில் 37 மி.மீ டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் நைட்ரக்ஸ் உடன் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்குகளின் முன்பக்கத்தில் ரிவர்ஸ்-பூமராங் எல்இடி டி.ஆர்.எல்களுடன் எல்இடி பிரோஜெக்டர் யூனிபோட் ஹெட்லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் இல்லை. கியர்-ஷிப்ட் இண்டிகேட்டர் மற்றும் டிஸ்டன்ஸ் டு எம்ப்டி ரீட்அவுட் மற்றும் செல்போன் ரீச்சார்ஜ் அம்சமும் உள்ளது. டையர் சைஸ் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: