இண்டிகோ ஏர்லைன் விமான நிறுவனம் தங்கள் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 10 சதவிகிதம் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி ஒருமுறையோ அல்லது பலமுறைகளோ இந்தியாவிற்குள் பயணம் செய்யும் பயணிகளுக்கு பொருந்தும்.
பயணிகள் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வழங்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழை பயணிகள் சமர்பிக்க வேண்டும். அல்லது ஆரோக்கிய சேது எனும் மொபைல் ஆப்பில் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான தகவலை செக் இன் கவுண்டரில் காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த தள்ளுபடியை பெற நீங்கள் செய்ய வேண்டியது.
1. புறப்படும் இடம், சென்று சேரும் இடம் ஆகியவற்றைக் குறிப்பிடும் போது Vaxi Fare Option என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. முதல் தவணை அல்லது இரண்டாவது தவணை தடுப்பு செலுத்திக்கொண்டீர்களா என்ற ஆப்சன் அதில் இருக்கும். நீங்கள் உங்கள் பதிலை செலக்ட் செய்ய வேண்டும்.
3. நீங்கள் செல்லவிருக்கிற, திரும்பி வருகிற விமானங்கள் குறித்து அதில் குறிப்பிட்டிருக்க ஆப்சன்கள் மூலம் தெரிவிக்க வேண்டும்.
4. உங்கள் ஐடியை சமர்பிக்க வேண்டும்.
5. நீங்கள் பணம் செலுத்தும் முன்பு Vaxi fare அதில் சேரக்கப்படும்.
இண்டிகோ தள்ளுபடி வழங்கும் குறிப்பிட்ட விமானங்களில் அடிப்படைக் கட்டணங்களுக்கு மட்டும் இது செல்லுபடியாகும். விமான நிலைய கட்டணங்கள், அரசின் வரிகள் ஆகியவை இந்த தள்ளுபடியில் அடங்கும்.
Also read... European Countries: ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலா தளங்கள் திறப்பு - இந்தியர்களுக்கு அனுமதியுண்டா?
இந்த ஆஃபர் கடந்த ஜூன் 23, 2021 முதல் எப்பொழுது இண்டிகோ நிறுவனம் இந்த ஆஃபரை நிறுத்துகிறதோ அதுவரை செல்லுபடியாகும். மேலும் இந்த ஆஃபர் 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்த ஆஃபர் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது.
பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு சுற்றுலா வர அனுமதி வழங்கி வருகிறது. இதே போல தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு சில சலுகைகளைப் பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளது. மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்க, வங்கிகள் பிக்ஸட் டெபாசிட் (FD) கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கியுள்ளன. இதற்காக நீங்கள் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்திக்கொண்டிருக்க வேண்டும்.
யுகோ வங்கி (UCO Bank) FD கணக்கிற்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு 30 பேசிக் பாயிண்ட்ஸ்கள் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த சலுகை செப்டம்பர் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும். சென்டரல் பேங்க் ஆஃப் இந்தியாவும் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு 25 பேஸிக் பாயிண்ட்ஸ்கள் கிடைக்கும் என அறிவுத்துள்ளது. இதுபோன்ற சலுகை அறிவுப்புகள் மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள தூண்டுவதாக அமையும்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indigo, Indigo Air Service