ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

இண்டிகோவின் புதிய ஆஃபர்: ஆப் வழியாக முன்பதிவு செய்தால் ஃப்ரீ மீல் மற்றும் சீட் செலெக்ஷன்!

இண்டிகோவின் புதிய ஆஃபர்: ஆப் வழியாக முன்பதிவு செய்தால் ஃப்ரீ மீல் மற்றும் சீட் செலெக்ஷன்!

இனிமையான வானிலை காரணமாக பிரயாணங்கள் மேற்கொள்ள, பிப்ரவரி ஒரு சரியான மாதம் ஆகும்.

இனிமையான வானிலை காரணமாக பிரயாணங்கள் மேற்கொள்ள, பிப்ரவரி ஒரு சரியான மாதம் ஆகும்.

இனிமையான வானிலை காரணமாக பிரயாணங்கள் மேற்கொள்ள, பிப்ரவரி ஒரு சரியான மாதம் ஆகும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

பட்ஜெட் விலையில் விமான சேவைகளை நிகழ்த்துவதில் பெயர்போன ஏர்லைன் நிறுவனமான இண்டிகோ (IndiGo) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சலுகையை அறிவித்து உள்ளது. இதன் கீழ் பிப்ரவரி 21 முதல் நிறுவனத்தின் சொந்த மொபைல் ஆப் வழியாக முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவச உணவு (free meal) மற்றும் இருக்கை தேர்வு (seat selection) உட்பட புதிய சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமலில் உள்ள இந்த இண்டிகோ ஏர்லைன் ஆப் சலுகை ஆனது வருகிற 2022 மார்ச் மாதம் வரை அணுக கிடைக்கும், மேலும் ப்ரோமோஷன் கோட் ஃபீல்டில் குறிப்பிட்ட கோட்-ஐ உள்ளிடுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையைப் பெறலாம். இது தவிர, மொபிக்விக் (MobiKwik) வேலட்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இண்டிகோ நிறுவனம் ரூ.500 வரையிலான கேஷ்பேக் சலுகையையும் வழங்குகிறது.

இந்திய மக்கள் கோவிட் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வது அதிகரிக்க வேண்டும், விமான பயணிகள் மீண்டும் பயணம் செய்வதற்கான ஊக்கத்தினை பெற வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் தான் இண்டிகோ நிறுவனம் இந்த சலுகைகளை அறிவித்து உள்ளது.

இண்டிகோ நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியான வில்லியம் போல்டர், “இனிமையான வானிலை காரணமாக பிரயாணங்கள் மேற்கொள்ள, பிப்ரவரி ஒரு சரியான மாதம் ஆகும். (இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ள) இந்த ஆப்ஸ் சார்ந்த சலுகைகள் பயணிகளின் வசதியையும் நம்பிக்கையையும் இன்னும் மேம்படுத்தும் என்றும், விமானப் பயணத்திற்கான ஒட்டுமொத்த தேவையை அதிகரிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். விமானப் பயணத்தின் போது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம், மேலும் சரியான நேரத்திலான, மரியாதை மிக்க மற்றும் பாதுகாப்பான மற்றும் தொந்தரவு இல்லாத விமான பயண அனுபவத்தை மிகவும் மலிவான கட்டணத்தில் வழங்கவும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்,” என்று ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

நினைவூட்டும் வண்ணம், சமீபத்தில் இந்த விமான நிறுவனம் தனது ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து முதல் விமானத்தை வாங்கியது. இந்த விமானம் சஸ்டெய்னபிள் ஏவியேஷன் எரிபொருள் (sustainable aviation fuel) மற்றும் சாதாரண எரிபொருளின் (normal fuel) கலவையில் இயங்குகிறது. இந்த புத்தம் புதிய ஏ20 நியோ விமானம், வியாழனன்று பிரான்சில் உள்ள டோலோஸில் இருந்து கிளம்பி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தரையிறங்கியது.

Also read... நிலத்தில் மட்டுமல்ல நீரிலும் ஓட கூடிய வித்தியாசமான வாகனத்தை அறிமுகப்படுத்திய ஐரோப்பிய நிறுவனம்!

குறிப்பிட்ட விமானம் பிரான்சில் இருந்து இங்குள்ள விமான நிலையத்தில் தரை இறங்கிய பிறகு, இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி ஆன ரோனோஜாய் தத்தா, இந்த சஸ்டெய்னபிள் ஏவியேஷன் எரிபொருள் (sustainable aviation fuel - SAF) குறித்து எங்கள் நிறுவனம் நிறைய உற்பத்தியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறினார்.

ஏர்பஸ் நிறுவனத்தின் இந்திய மற்றும் தெற்காசிய தலைவர் மற்றும் எம்.டி ஆன ரெமி மில்லார்ட், ஏர்பஸ்ஸின் அனைத்து வணிக விமானங்களும் 50% எஸ்ஏஎஃப் (SAF - Sustainable Aviation Fuel) கலவையில் பறக்க சான்றிதழ் பெற்றுள்ளன, மேலும் அடுத்த பத்தாண்டுகளின் முடிவில் இவைகள் 100% எஸ்ஏஎஃப் கலவையில் பறக்க முடியும்" என்று கூறி உள்ளார்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இந்தியாவில், சஸ்டெய்னபிள் ஏவியேஷன் எரிபொருள் ஆனது வணிக விமானங்களில் பயன்படுத்த இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

First published:

Tags: Indigo