விமான நிறுவனங்கள் அவ்வப்போது காட்டமான முடிவுகளை எடுத்து வருவதாக அந்நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில், இண்டிகோ விமான நிறுவனம் ஜூலை மாதத்தில் குறிப்பிட்ட தேதிகளில் விடுப்பு எடுத்து கொண்ட ஊழியர்கள் உரிய மருத்துவ ஆவணங்களை செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் இண்டிகோ நிறுவனத்தின் மருத்துவரிடம் தேவையான ஆவணங்களுடன் வருகை தருமாறு விமான நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் அவர்கள் உண்மையிலேயே நோய்வாய்ப்பட்டு இருந்தார்களா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜூலை 10 அன்று நோய்வாய்ப்பட்டு விடுப்பு எடுத்த தொழில்நுட்ப பிரிவில் பணிபுரியும் வல்லுனர்களில் ஒருவருக்கு இண்டிகோ நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பி உள்ளது. அதில் முன் அறிவிப்பின்றி விடுமுறை எடுப்பதால் விமானத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டு எழுதி இருந்தனர். மேலும், உங்கள் உடல்நிலையை உறுதிப்படுத்த தேவையான மருத்துவ ஆவணங்களுடன் இண்டிகோ நிறுவன மருத்துவர்களை உடனடியாக சந்திக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போன்று, விமான நிறுவனம் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாததால், அந்நாளில் விடுப்பு எடுத்து கொண்டவர்கள் உடனடியாக அந்த நிறுவன டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அப்பாயிண்ட்மெண்ட் எடுக்கவில்லை என்றால், அவர் "வேலையிலிருந்து தானாக முன்வந்து விலகுகிறார்" என்று விமான நிறுவனம் எடுத்து கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 2ம் தேதி அன்று, இண்டிகோவின் உள்நாட்டு விமானங்களில் 55 சதவீதம் விமானங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பயணிக்காமல் தாமதமானது, அதன் கேபின் குழு உறுப்பினர்கள் கணிசமான எண்ணிக்கையில் நோய்வாய்ப்பட்டு விடுப்பு எடுத்ததால் இந்த தாமதம் உண்டாகியது. மேலும், அவ்வாறு விடுப்பு எடுத்து கொண்டவர்கள் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் இன்டெர்வியுவிற்கு சென்றதாக சிலர் கூறுகின்றனர்.
Also Read : 18 நாட்களில் 8 சிக்கல்களை எதிர்கொண்ட ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் - டிஜிசிஏ நோட்டீஸ்!
பொதுவாக நிதி நெருக்கடி காலங்களில் இது போன்று பிற நிறுவனங்களுக்கு சென்று வேலை தேடுவது இயல்பான ஒன்றாக தான் இருந்து வருகிறது. அந்த வகையில், கோவிட் தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது இண்டிகோ நிறுவனம் தனது ஊழியர்களில் பெரும் பகுதியினரின் சம்பளத்தைக் குறைத்தது. இந்நிலையில் புதிய விமான நிறுவனமான ஆகாசா ஏர், புதுப்பிக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் மற்றும் டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்கள் பணியமர்த்தத் தொடங்கியுள்ளன.
Also Read : ஏர் இந்தியா நிறுவனம் ஆட்குறைப்பு: விருப்ப ஓய்வுக்கு கூடுதல் ஊக்கத்தொகை!
மேலும் இந்த வாய்ப்புகள் விமானத் துறையில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணமாக பலர் பிற விமான நிறுவனங்களில் வேலை தேட தொடங்கி உள்ளனர். வாழ்வாதாரத்தை சீரான முறையில் வைத்து கொள்ளவே இது போன்று பிற நிறுவனங்களுக்கு வேலை தேடி செல்கின்றனர் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயமே. அதே போன்று, நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் போக்கை கொரோனா தொற்றுக்கு பிறகும் பின்பற்றி வந்தால், அது அந்நிறுவனத்திற்கு தான் அதிக பாதிப்பை தரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indigo Air Service