• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • புதிய தினசரி விமானங்களை விரைவில் ரூட் நெட்ஒர்க்கில் சேர்க்கும் இண்டிகோ நிறுவனம்!

புதிய தினசரி விமானங்களை விரைவில் ரூட் நெட்ஒர்க்கில் சேர்க்கும் இண்டிகோ நிறுவனம்!

இண்டிகோ ஏர்லைன்

இண்டிகோ ஏர்லைன்

பல்வேறு துறைகளின் தேவைக்கேற்ப புதிய வழித்தடங்களில் விமான சேவைகளை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்.

  • Share this:
உள்நாட்டு விமான இணைப்பை விரிவுபடுத்தும் வகையிலும், tier-2 அல்லது tier-3 சிட்டிகளுக்கு இடையிலான அணுகலை மேம்படுத்தவும் இந்த மாதத்தில் 38 உள்நாட்டு விமானங்களின் சேவையை தொடங்க உள்ளதாக நாட்டின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ அறிவித்து இருக்கிறது. இதன்படி செப்டம்பர் மாதத்தில் தன் ரூட் நெட்வொர்க்கில் 38 தினசரி விமானங்களை சேர்க்கிறது இண்டிகோ நிறுவனம். இந்த 38 புதிய விமானங்களில் 6E ஒன்லி கனெக்ட்டிங் விமானங்கள் 24, புதிய விமானங்கள் 2 மற்றும் 12 விமானங்கள் ஆகியவை அடங்கும்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இண்டிகோ நிறுவனம், லக்னோ-ராஞ்சி, பெங்களூரு-விசாகப்பட்டினம், சென்னை-இந்தூர், லக்னோ-ராய்பூர், மும்பை-கவுகாத்தி மற்றும் அகமதாபாத்-இந்தூர் உள்ளிட்ட வழித்தடங்களுக்கு இடையே விமானங்களை மீண்டும் இயக்க உள்ளதோடு, ராய்பூர்-புனே இடையே புதிய விமானங்களை இயக்க உள்ளதாக கூறி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே போல இண்டிகோ நிறுவனம் அகமதாபாத்-அகர்தலா (கொல்கத்தா வழியாக), சென்னை-சண்டிகர் (ஹைதராபாத் வழியாக), சென்னை-வதோதரா (ஹைதராபாத் வழியாக), கொல்கத்தா-கோழிக்கோடு (பெங்களூரு வழியாக), கொல்கத்தா-கோயம்புத்தூர் (ஹைதராபாத் வழியாக), சண்டிகர்-பாட்னா (லக்னோ வழியாக), சண்டிகர்- ராஞ்சி (லக்னோ வழியாக), சண்டிகர்-ஐதராபாத் (டெல்லி வழியாக), கோயம்புத்தூர்-லக்னோ (ஹைதராபாத் வழியாக), கோவை-உதய்பூர் (பெங்களூரு வழியாக), டெல்லி-சில்சார் (கொல்கத்தா வழியாக) மற்றும் ஹைதராபாத்-திப்ருகர் (கொல்கத்தா வழியாக) இடையே 24 விமானங்களை இயக்க உள்ளது.

இந்நிலையில் இண்டிகோ நிறுவனத்தின் தலைமை வருவாய் அதிகாரி சஞ்சய் குமார் பேசும் போது, "எங்கள் உள்நாட்டு நெட்வொர்க்கை வலுப்படுத்த 38 புதிய விமானங்களை சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த விமானங்கள் அதிகரிக்கும் பயண தேவையை பூர்த்தி செய்யும் தவிர மெட்ரோ மற்றும் tier 2/3 நகரங்களுக்கிடையிலான அணுகலை மேம்படுத்தும். தங்களது இந்த முடிவு கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்த உதவும் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

பல்வேறு துறைகளின் தேவைக்கேற்ப புதிய வழித்தடங்களில் விமான சேவைகளை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். எங்கள் நிறுவனத்தின் இணையற்ற 6E நெட்வொர்க் மூலம் மலிவு கட்டணத்தில் நேர்த்தியான மற்றும் தொந்தரவில்லாத சேவையை தொடர்ந்து வழங்குவதே எங்கள் முதன்மை முயற்சியாக இருக்கிறது என்றும் கூறினார்.

Also read... இந்தியாவில் புதிதாக அறிமுகமான "BMW X5 xDrive SportX Plus" வேரியன்ட்கள் - சிறப்பம்சங்கள், விலை விவரம்!

சமீபத்தில் மத்திய விமான போக்குவரத்துக்கு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பிராந்திய இணைப்பு திட்டம் (RCS) மூலம் சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களை பரந்த விமானப் பயண நெட்வொர்க்குடன் இணைக்கும் அரசின் லட்சியத் திட்டத்தின் கீழ் சுமார் 50 புதிய வழித்தடங்கள் நவம்பர் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்திருந்தார். இதனிடையே தற்போது இண்டிகோ சேர்க்க உள்ள புதிய தினசரி விமானங்கள் புதிய மற்றும் மலிவு விலையில் விமான பயணம் மேற்கொள்ள விரும்பும் வணிக மற்றும் ஓய்வு பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: