ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

செப்டம்பரில் சக்கை போடு போட்ட கார் விற்பனை - காரணம் என்ன?

செப்டம்பரில் சக்கை போடு போட்ட கார் விற்பனை - காரணம் என்ன?

வாகன விற்பனை

வாகன விற்பனை

Vehicle sales in India | செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 3.55 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் இது 91 சதவீதம் அதிகமாகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் பொதுமக்கள் பயணிக்கும் வாகன விற்பனையானது முன்னெப்போதும் இல்லாத வகையில் செப்டம்பர் மாதத்தில் மிக அதிகமாக நடைபெற்றுள்ளது. எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு புதிய வாகனங்களை வாங்குவதற்கு மக்கள் காட்டும் ஆர்வம், உற்பத்தி அதிகரிப்பு மற்றும் செமி கண்டக்டர் சப்ளை ஆகியவை காரணமாக இது சாத்தியமாகியுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 3.55 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் இது 91 சதவீதம் அதிகமாகும். இந்த விற்பனை வேகம் காரணமாக, இரண்டாம் காலாண்டு விற்பனை என்பது 10 லட்சத்தை கடந்துள்ளது. இது மாபெரும் சாதனையாகும்.

டெலிவரியை விரைவுபடுத்தும் உற்பத்தியாளர்கள்

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களான டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி, ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் கடந்த மாதத்தில் தங்கள் டீலர்களுக்கான டெலிவரியை விரைவுபடுத்தியுள்ளனர். சிப் பற்றாக்குறை சரி செய்யப்பட்ட நிலையில், உற்பத்தி வேகமெடுத்துள்ளதன் காரணமாக டெலிவரி விரைவாக நடைபெறுகிறது.

மாருதி நிறுவனத்தின் விற்பனை

இந்தியாவின் மாபெரும் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி சார்பில், கடந்த மாதத்தில் மொத்தம் 1.48 லட்சம் வாகனங்கள் மொத்த விற்பனை மூலமாக விநியோகிக்கப்பட்டுள்ளது. இதுவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அந்நிறுவனம் 63,000 கார்களை விற்பனை செய்திருந்தது.

கடந்த 42 மாதங்களை ஒப்பிடுகையில், இரண்டாம் மாதமாக செப்டம்பரில் அதிக விற்பனை நடைபெற்றுள்ளது என்று மாருதி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஷாஷாங் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். முன்னதாக, கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தங்கள் நிறுவனம் சார்பில் 1.63 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது என்றார் அவர்.

Also Read : இந்த போக்குவரத்து குறியீடுகள் மற்றும் அடையாளங்கள் எதற்கு எனத் தெரியுமா? 

சிறிய கார்களின் விற்பனை அதிகம்

சிறிய வகை கார்களான ஆல்டோ, எஸ்பிரெஸோ போன்ற கார்கள் கடந்த மாதத்தில் 29,574 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் சிறிய வகை கார்களில் 14,936 கார்கள் விற்பனை ஆகியிருந்தன.

இதேபோன்று ஸ்விஃப்ட், செலீரியோ, இக்னிஸ், டிசையர் போன்ற நடுத்தர வகை கார்களின் விற்பனை 72,176 என்ற எண்ணிக்கையிலும் விடாரா, பிரெஸ்ஸா, எர்டிகா போன்ற வகை கார்களின் விற்பனை 32,574 என்ற எண்ணிக்கையிலும் பதிவாகியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மாதத்தில் 47,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதேபோல, டொயோட்டா நிறுவனத்தின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

Also Read : இளம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் Hero Maestro Xoom 110 அறிமுகம்!

விற்பனை அதிகரிப்புக்கு காரணம் என்ன

இந்தியப் பொருளாதாரம் கடந்த சில காலாண்டுகளாக புத்துணர்ச்சி பெற்று வரும் நிலையிலும், அக்டோபர் மாதத்தில் அணிவகுக்கும் பண்டிகை காலம் காரணமாகவும் வாகன விற்பனை அதிகரித்துள்ளது என்று ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குநர் தருண் கார்க் தெரிவித்தார்.

Published by:Selvi M
First published:

Tags: Automobile, Cars, India