விற்பனைக்கு வந்துள்ள இந்தியாவின் அதிக விலையுள்ள லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்!

லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்

இந்தியாவை சேர்ந்த பிக் பாய் டாய்ஸ் (Big Boy Toyz), தன்னுடைய நிறுவனம் சார்பில் லம்போர்கினி அவென்டடோர் SVJ MY 2019 விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கார் பிரியர்கள் மனதில் லம்போர்கினி சூப்பர் கார்களுக்கு ஏகப்பட்ட மவுசு. விலை உயர்வு என்றாலும் இந்திய சந்தைகளில் இந்த கார்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி. வருடந்தோறும் அதிக அளவில் இந்த கார்கள் விற்பனையாகி வருகிறது. இந்திய அளவில் திரையுலக நட்சத்திரங்கள் தொழில் அதிபர்கள் இந்த காரை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த பிக் பாய் டாய்ஸ் (Big Boy Toyz), தன்னுடைய நிறுவனம் சார்பில் லம்போர்கினி அவென்டடோர் SVJ MY 2019 விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

இரண்டு இருக்கைகள் மட்டும் கொண்ட இந்த கார் உலக அளவில் 900 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் 6498cc, Naturally aspirated, V12, DOHC இஞ்சின் மற்றும் 7 ஸ்பீட் ISR ஆட்டோமேட்டட் டிரான்ஸ்மிஸன், ஜியல்லோ டெனரிஃப் (Giallo Tenerife) எனப்படும் ஒரு வகை இள மஞ்சள் நிறம் கொண்டுள்ளது. மேலும் இந்த காரானது 770PS / 759BHP @ 8500 RPM பீக் பவர் மற்றும் 720NM @ 6750 RPM கொண்டது. இந்த கார் குறித்து இந்திய விற்பனையாளரான பிக் பாய் டாய்ஸ் நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்ததாவது, இந்தியாவின் விலை அதிகமிக்க காரை விற்பனை செய்வதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.

கடந்த இரண்டு நாட்களில் மக்களிடம் இருந்து இந்த கார் குறித்து மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இது மக்களிடையே லம்போர்கினி அவென்டடோர் எஸ்விஜே கார் மீது இருக்கும் ஆர்வத்தை காட்டுகிறது. இப்போது கார்கள் ஆடம்பரம் என்ற நிலையை தாண்டி அத்தியாவசியமாகி விட்டது. இதனால் கார் சந்தையில் இந்த காரின் விற்பனை அதிகரிக்கும் என்று நம்பிக்கையுள்ளது. இந்த கார்கள் குறித்து வாடிக்கையாளர்களிடம் இருந்து கோரிக்கைகள் எழத் துவங்கியுள்ளன. அதனால் இந்திய சாலையில் இந்த கார் செல்வதை விரைவில் காணலாம் என்றார்.

கொரோனா உள்ளிட்ட காரணங்களால் கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்குவதில் மக்களிடையே ஆர்வம் குறைந்தது. இந்த காரணத்தால் இந்திய சந்தையில் வாகன விற்பனை பெரும் சரிவை சந்தித்தது. இப்படி இருக்க லம்போர்கினியின் இந்த ஸ்போர்ட்ஸ் கார் விற்பனை எந்த அளவுக்கு இருக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Also read... கோவிட்-19 லாக்டவுன்: வாரன்ட்டி, சர்வீஸ் காலத்தை நீட்டித்துள்ள வாகன நிறுவனங்கள்!

கடந்த 2019 ஆம் ஆண்டு லம்போர்கினி நிறுவனம் 8,205 கார்களை விற்பனை செய்தது. ஆனால் அதன் பின் 2020ம் ஆண்டில் 7,430 சூப்பர் கார்கள் விற்பனையாகியுள்ளது. கொரோனா பாதிப்புகள் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த கடந்த ஆண்டில் லம்போகினி இந்த எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்திருப்பது மக்களிடையே இந்த காரின் மீதான ஆர்வத்தை காட்டுகிறது. இதனையடுத்து இந்த வருடமும் கார் விற்பனை நன்றாக இருக்கும் என்று நம்பலாம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: