இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜிங் நிலையம் – பொது மக்களுக்காக நவி மும்பையில் திறப்பு!

இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜிங் நிலையம்

எலக்ட்ரிக் வாகனங்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய, 400,000 சார்ஜிங் நிலையங்களை அமைக்க இருப்பதாக அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

  • Share this:
மின்சார வாகனங்களை சார்ஜிங் செய்வதற்காக, மெஜந்தா பப்ளிக் சார்ஜிங் நிலையம் 24x7 மணி நேர சேவையுடன் இயங்கி வருகிறது. இதில் 2 சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு 21 ஏசி / டிசி சார்ஜர்கள் உள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய பொது ஈ.வி. (எலக்ட்ரானிக் வெஹிக்கிள்) சார்ஜிங் நிலையம், நவி மும்பையில், மெஜந்தாவால் துவங்கப்பட்டுள்ளது. இந்த சார்ஜிங் நிலையத்தை, மதிப்பிற்குரிய தொழில்துறை அமைச்சர் ஸ்ரீ. சுபாஷ் தேசாய் அவர்கள் தொடங்கி வைத்தார். 24x7 என்ற தொடர்ச்சியான செயல்பாட்டுடன், 21 ஏசி / டிசி சார்ஜர்களுடன் 2 சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் சார்ஜ் செய்யும் வசதியோடு இது போன்ற ஒரு நிலையம் தொடங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். நிலையங்களில் காணப்படும் சார்ஜர்களைப் பொறுத்து, 45 நிமிடங்களில் ஒரு வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏசி ஸ்லோ சார்ஜிங் தேவைப்படும் வாகனங்களுக்கு, ஒரு பார்க்கிங் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு நேரத்தில் சார்ஜ் செய்யத் தேவைப்படும் வாகனங்களுக்கும் (ஓவர்நைட்) கட்டணம் வசூலிக்க அனுமதிக்கிறது. இந்த சார்ஜர்களை சார்ஜ் கிரிட் செயலி (ChargeGrid) மூலம் ஆன்லைன் ரிமோட் கண்காணிப்பு வழியாக இயக்கலாம். இதில் தானியங்கி பேமெண்ட் கேட்வே உள்ளது. இதன் மூலம் சார்ஜர்களை கண்காணிக்கவும், பராமரிக்கவும், இயக்கவும் ஸ்டேஷன் மார்ஷல் தேவையை நீக்குகிறது. இந்த சார்ஜர்கள் ஒருங்கிணைந்த 40 கிலோவாட் ரூஃப்டாப் சூரிய சக்தியால் இயக்கப்படுகின்றன.

பெருநகரமான மும்பையில் இந்த பொது ஈ.வி. சார்ஜிங் நிலையம் அமைப்பது, பல விதங்களிலும் முன்மாதிரியாக உணரப்படுகிறது. குறிப்பாக, 2026 ஆம் ஆண்டுக்குள், மும்பை சாலைகளில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலக்ட்ரிக் வாகனங்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய, 400,000 சார்ஜிங் நிலையங்களை அமைக்க இருப்பதாக அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவுகளை ஆதரிக்கும் வகையில், மெஜந்தா அமைந்துள்ள பொது ஈ.வி. சார்ஜிங் நிலையம் ஒரு புரட்சிகர நடவடிக்கையாக அமைந்துள்ளது.

தற்போது, ​எலெக்ட்ரிக் வாகனம் தொழிற்துறை அமைப்பின் படி மின்சார வாகனங்களின் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாவது, மார்ச் 2021 நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 1,800 சார்ஜிங் நிலையங்கள் உள்ளன. இதில் ஃபிளீட் செக்மென்ட் உட்பட சுமார் 16,200 மின்சார கார்கள் உள்ளன. எனவே, மெஜந்தாவின் இந்த நடவடிக்கை 2026 ஆம் ஆண்டுக்குள் தேவைப்படும் எண்ணிக்கையிலான ஈ.வி. சார்ஜர்களை உருவாக்கும் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான முதல் வெற்றியாக நிரூபிக்கப்படும்.

மெஜந்தா, சமீபத்தில் 120 கோடி ரூபாயை, சீரிஸ்-ஏ நிதியாக அமெரிக்க பரோபகாரர் டாக்டர் கிரண் பட்டேலிடமிருந்து பெற்றுள்ளது. இந்தியாவில் சார்ஜிங் நிலையங்களின் பயன்பாடு மட்டுமின்றி, ஏற்றுமதிக செய்வதற்கும், சார்ஜர் மேம்பாடு மற்றும் உற்பத்தி யூனிட் அமைக்க, மெஜந்தா கூடுதலாக 30 கோடியைப் பெற உள்ளது. இந்த ஒருங்கிணைந்த சார்ஜிங் மற்றும் மேம்பாடு மற்றும் உற்பத்தி பிரிவு ஆகியவை ஸ்ட்ரீட்லேம்ப் சார்ஜர்களுடன், ஏசி சார்ஜர்களின் டெவலப்மென்ட் மற்றும் உற்பத்தித் தேவையை பூர்த்தி செய்யும்.

அதே இடத்தில், தனது இரண்டாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்துடன் (R&D), மெஜந்தா வரும் ஆண்டில் 170 பேருக்கு வேலை வழங்க இருக்கிறது. ஒருங்கிணைந்த சார்ஜிங் மற்றும் மேம்பாடு மற்றும் உற்பத்தி யூனிட் ஆகியவை மின்சார வாகனங்கள் சார்ஜிங்கிற்கான, முழுமையான, end to end 'சாக்கெட் டு சாப்ட்வேர்' தீர்வை வழங்கும் வாய்ப்பை மெஜந்தாவுக்கு வழங்கும்.

மெஜந்தா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இணை நிறுவனர் திரு. மாக்சன் லூயிஸ் கூறுகையில், “2021 ஆம் ஆண்டு மெஜந்தாவில் எங்களுக்குக் கிடைத்த வலிமையான வாய்ப்புகளைப் பயன்படுத்தி, மின்மயமாக்கல் மற்றும் மின்சார வாகனங்களின் (ஈ.வி) வளர்ச்சியை விரைவாகக் கண்டறிய வாய்ப்பையும், ஒரு பெரிய பொறுப்பையும் வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றுநோயின் தாக்கம், புதிய நுகர்வோர் தலைமுறையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், அவர்கள் ஆரோக்கியமாக இருக்கவும், சுத்தமான காற்றை சுவாசிக்கவும், அடுத்த தலைமுறைக்கு ஒரு சிறந்த, நெகிழ்ச்சியான, மாசில்லாத ஆரோக்கியமான உலகத்தை உருவாக்கவும் ஆர்வமாக உள்ளது. எங்களின் கண்ணோட்டமும், குறிக்கோளும் இந்த பார்வையை ஆதரித்து, வலுப்படுத்துவதோடு, அடுத்த ஆண்டுகளில் பல முன்னேற்றங்களை மேற்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட இருக்கிறோம்.”

Also read... KTM அட்வென்சர் பைக்குகளின் விலை அதிரடி குறைப்பு... எவ்வளவு தெரியுமா?

ரூ.4.99 கோடி விலையில் லம்போர்கினி லேட்டஸ்ட் மாடல் அறிமுகம்!

மதிப்பிற்குரிய ஸ்ரீ. சுபாஷ் தேசாய், தொழில்துறை மற்றும் சுரங்க அமைச்சர், “இந்தியாவில், மகாராஷ்டிரா எலக்ட்ரிக் வாகனங்கள் வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது. எங்களின், வரைவு எலக்ட்ரிக் வாகன (ஈ.வி) கொள்கை 2021 இன் படி, 2025 ஆம் ஆண்டுக்குள், குறைந்தது 1,46,000, பேட்டரி மூலம் இயக்கப்படும் புதிய மின்சார வாகனங்களை (BEV), சாலைகளில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அந்த நேரத்தில் அனைத்து புதிய வாகனப் பதிவுகளிலும் 10% காம்ப்ரமைஸ் செய்யப்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலுமே, மற்றும் விரைவில் உலகளவில் எலக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுக்கொள்வதற்கு மெஜந்தா போன்ற எங்கள் உள்ளூர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.

மெஜந்தா, சமீபத்தில் தெலுங்கானா மாநில புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழக லிமிடெட் (தெலுங்கானா ஸ்டேட் ரின்யூவபில் எனர்ஜி டெவெலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிட்டட் - டி.எஸ்.ஆர்.இ.டி.கோ) உடன், ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த திட்டத்தில், தெலுங்கானா மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும், அரசாங்க அதிகாரிகள் பயன்பாட்டுக்கு இருக்கும் ஐ.சி.இ (இன்டெர்னல் கம்பஸ்ஷன் இன்ஜின்) வாகனங்களை, மின்சார வாகனங்களாக மாற்ற ஒப்புதல் போடப்பட்டுள்ளது. அதாவது, தெலுங்கானா மாநிலத்தில் அரசு பயன்பாட்டு வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாறுவது, முதல் படியாக செயல்படுத்தப்பட உள்ளது.

அது மட்டுமின்றி, மஹிந்திரா எலக்ட்ரிக் உடனான சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அதன் பார்ட்னர்ஷிப்புடன், 100 மஹிந்திரா Treo Zor 3 சக்கர மின்சார வாகனங்களை வெளியிட உள்ளது. இந்த வாகனங்கள், புதிய e-mobility மின்சார வாகன இயக்கப்பட்ட போக்குவரத்து (EVET) தளத்தின் விநியோகக் டெலிவரி ஃப்ளீட்டில் சேர்க்கப்படும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: