Home /News /automobile /

டொயோட்டா மிராய் - இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எலக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

டொயோட்டா மிராய் - இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எலக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

toyota mirai

toyota mirai

Toyota Mirai | இந்த கார், ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தி, செல் பேட்டரிகள் மூலம் இயங்குகிறது. காரை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு, ஐந்து நிமிடம் தான் ஆகும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 650 கிமீ தூரம் வரை செல்லலாம்.

இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதுமே சுற்றுசூழல் பாதிப்பை குறைக்க மற்றும் தடுக்க மாற்று எரிபொருளைப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில், ஹைட்ரஜனை மாற்று எரிபொருளாக பயன்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதையொட்டி, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், முதன் முறையாக இந்தியாவில் ஹைட்ரஜனால் இயங்கும் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை தொடங்கிவிட்ட நிலையில், தற்போது டொயோட்டா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தும் எலக்ட்ரிக் கார், அரசாங்கத்தின் சோதனை நிறுவனமான சர்வதேச தானியங்கி தொழில்நுட்ப மையத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் என்று சில நாட்களுக்கு முன்பு டொயோட்டா நிறுவனம் ஒரு அதிகாரபூர்வமான அறிக்கையை வெளியிட்டது. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எலக்ட்ரிக் கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இங்கே.

Toyota Kirloskar மோட்டார் நிறுவனத்தின் ஹைட்ரஜன் எலக்ட்ரிக் காருக்கு டொயோட்டா மிராய் (Toyota Mirai) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜப்பானிய மொழியில் 'மிராய்' என்ற சொல்லுக்கு 'எதிர்காலம்' என்று பொருள்.

இந்த கார், ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தி, செல் பேட்டரிகள் மூலம் இயங்குகிறது. காரை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு, ஐந்து நிமிடம் தான் ஆகும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 650 கிமீ தூரம் வரை செல்லலாம்.



டொயோட்டா மிராய் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் காராக இருந்தாலும், இந்த எலக்ட்ரிக் கார் 2014 ஆம் ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டது என்றும், ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் எலக்ட்ரிக் வாகனங்களில் முதன்மையானது என்றும் டொயோட்டா நிறுவனம் கூறியது. அது மட்டுமின்றி, இந்திய சாலைகளுக்கு மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு பொருந்தும் வகையில், உரிய மாற்றங்களை செய்வதற்கான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது.

Also Read : ரூ.85,000 வரை சிறப்பு தள்ளுபடிகள் - TATA Motors-ன் அதிரடி அறிவிப்பு!

ஹைட்ரஜனால் இயங்கும் இந்த வாகனம், சுற்றுசூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத ஜீரோ எமிஷன் நோக்கத்தை நிறைவேற்ற உதவும் மிகச் சிறப்பான தீர்வாகக் கருதப்படுகிறது. இந்த வகையான வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை, அதாவது பசுமை ஹைட்ரஜனைப் பெறுவதற்கு, பல விதமான மறுசுழற்சி செய்யும் ஆதாரங்கள் உள்ளன. கிரீன் ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதற்கான பொருத்தமான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கு எதிர்காலத்தில் தூய்மையான மாசில்லாத சுற்றுச்சூழல் மற்றும் மலிவு விலையில் எரிபொருள் ஆகியவற்றைக் கொடுப்பதில் பசுமை ஹைட்ரஜன் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : கார் வாங்க காத்திருப்போருக்கு நல்ல செய்தி...

மேற்கூறிய விவரங்களின் அடிப்படையில், தற்போது ஹைட்ரஜனில் இயங்கக்கூடிய பேருந்துகளை உற்பத்தி செய்ய மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பேருந்துகள், டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் இடையே இயக்கப்படும் என்று கூறப்பட்டது.

கிரீன் ஹைட்ரஜன் பயன்பாடு, சாலை போக்குவரத்து உட்பட பல்வேறு துறைகளில் கார்பனை முழுமையாக நீக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Toyota

அடுத்த செய்தி