Home /News /automobile /

இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் பேருந்து புனேவில் இயக்கம்..! ஹைட்ரஜன் மற்றும் காற்றில் மின்சார உற்பத்தி - எப்படி செயல்படுகிறது?

இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் பேருந்து புனேவில் இயக்கம்..! ஹைட்ரஜன் மற்றும் காற்றில் மின்சார உற்பத்தி - எப்படி செயல்படுகிறது?

ஹைட்ரஜன் பேருந்து

ஹைட்ரஜன் பேருந்து

Hydrogen Fuel Cell Bus | பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள எரிவாயு செல் என்பது ஹைட்ரஜன் மற்றும் காற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்துக் கொள்ளும். அதன் மூலமாக பேருந்து இயக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pune, India
இந்தியாவில் முதன் முதலாக தயாரிக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் எரிவாயுவில் இயங்கும் பேருந்தின் சேவையை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், புனே மாநகரில் தொடங்கி வைத்தார். மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) சார்பில் இந்த பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் பேசுகையில், “ஹைட்ரஜன் இலக்கு என்ற திட்டத்தை செயல்படுத்துவதன் மூலமாக தற்சார்பு உற்பத்தி, மாசற்ற எரிவாயு, பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்வது மற்றும் தொடர்புடைய துறையில் வேலைவாய்ப்பை பெருக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி ஊக்குவித்து வருகிறார்’’ என்று தெரிவித்தார்.

பேருந்து எப்படி இயங்குகிறது

பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள எரிவாயு செல் என்பது ஹைட்ரஜன் மற்றும் காற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்துக் கொள்ளும். அதன் மூலமாக பேருந்து இயக்கும். எரிவாயு உற்பத்தி என்பது முழுக்க, முழுக்க தண்ணீரையும், காற்றையும் மையப்படுத்தி இயங்குவதால், இதில் சுற்றுச்சூழல் பாதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்னும், சொல்லப்போனால் சுற்றுச்சூழல்லுக்கு உகந்த வகையில் இந்த வகை பேருந்துகள் இயங்கும்.



டீசல் பேருந்து - ஒப்பீடு

உதாரணத்திற்கு தொலை தூரத்தில் இயங்கக் கூடிய டீசல் பேருந்து ஒன்று, ஆண்டுக்கு சராசரியாக சுமார் 100 டன் அளவுக்கு கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியேற்றி வருகிறது. நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான பேருந்துகள் இயங்கி வரும் நிலையில், ஒட்டுமொத்தமாக எவ்வளவு அதிகமான கார்பன் வாயு வெளியேறுகிறது என்பதை கணக்கிட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அளவில் இருக்கிறது.

Also Read : இந்தியாவில் களம் இறங்குகிறது மெக்லாரன்.. சூப்பர் கார்கள் வரிசையில் மற்றுமொரு சேர்க்கை!

அதே சமயம், ஹைட்ரஜன் பேருந்துகள் என்பது மாசற்ற எரிவாயுவில் இயங்குவதோடு மட்டுமல்லாமல், டீசல் பேருந்துகளை இயக்குவதற்கான செலவை ஒப்பிடுகையில், இது குறைவாகும். ஆகவே, நாட்டில் இனி வரும் காலங்களில் போக்குவரத்து வசதியை அளிப்பதில் ஹைட்ரஜன் பேருந்துகள் பெரும் பங்கு வகிக்கும் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.



ஹைட்ரஜன் பேருந்துகளுக்கான தேவை

உலக அளவில் கச்சா எண்ணெய் ஆதாரங்கள் நாளுக்கு, நாள் குறைந்து கொண்டே வருகின்றன. மற்றொரு பக்கம் பெட்ரோல், டீசல் விலையேற்றமும் அதிகரித்து வருகின்றது. இது மட்டுமல்லாமல், பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்குவதினால், உலக அளவில் 12 முதல் 14 சதவீத அளவுக்கான கார்பன் வெளியேற்றம் இதன் மூலமாக நடைபெறுகிறது.

Also Read : இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் டபுள் டெக்கர் AC பேருந்து மும்பையில் அறிமுகம்.!

ஆகவே, வாகன இயக்க செலவை கட்டுக்குள் கொண்டு வருவது, மாசுபாட்டை குறைப்பது போன்ற பல்வேறு இலக்குகளுடன் மாசற்ற எரிவாயுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு எலெக்ட்ரிக் வாகனங்களும், அதன் தொடர்ச்சியாக ஹைட்ரஜன் வாகனங்களும் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Pune

அடுத்த செய்தி