Home /News /automobile /

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் டபுள் டெக்கர் AC பேருந்து மும்பையில் அறிமுகம்.!

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் டபுள் டெக்கர் AC பேருந்து மும்பையில் அறிமுகம்.!

எலெக்ட்ரிக் பேருந்து

எலெக்ட்ரிக் பேருந்து

Electric Double Decker AC Bus | இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் டபுள் டெக்கர் பஸ் மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India
புவி வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் உலகளவில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் எரிபொருட்களின் விலையேற்றம் காரணமாக சமீப மாதங்களாக எலெக்ட்ரிக் வாகன விற்பனை சூடுபிடித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் டபுள் டெக்கர் பஸ் மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் பேருந்தை சமீபத்தில் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெற்கு மும்பையில் உள்ள Y B Centre-ல் அறிமுகப்படுத்தினார். மும்பையில் பொதுப் போக்குவரத்திற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எலெக்ட்ரிக் டபுள் டெக்கர் ஏசி பஸ், ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்தின் தயாரிப்பாகும்.

இந்த பஸ்ஸின் பெயர் Switch EiV 22 ஆகும், மேலும் இது வரும் செப்டம்பர் முதல் BEST-ஆல் இயக்கப்படும். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த டபுள் டெக்கர் ஏசி பஸ், பல ஆண்டுகளுக்கு முன் மும்பை உள்ளூர் போக்குவரத்தின் ஒரு பகுதியாக இருந்த டபுள் டெக்கர் பேருந்துகளின் நினைவுகளை மீட்டெடுத்துள்ளதாக மும்பை வாசிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். இதனிடையே Switch EiV 22 பஸ் பற்றி குறிப்பிட்டுள்ள ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்தின் CEO மகேஷ் பாபு, இது சமீபத்திய தொழில்நுட்பம், அதி நவீன வடிவமைப்பு, மிக உயர்ந்த பாதுகாப்பு மற்றும் சிறந்த இன்-கிளாஸ் வசதி அம்சங்களை கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.மும்பையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டபுள் டெக்கர்பஸ், நாட்டில் பொது போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இன்டர்-சிட்டி பஸ் மார்க்கெட்டில் புதிய தரத்தை அமைக்கும் என்றார். இதனிடையே Switch EiV 22 பஸ்ஸை அறிமுகம் செய்து வைத்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டின் போக்குவரத்து முறையை நீண்ட கால நோக்கில் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. நகர்ப்புற போக்குவரத்தை சீர்திருத்துவதில் கவனம் செலுத்த முயற்சிக்கிறோம்.

Also Read : பட்ஜெட்டில் சொல்லி அடிக்கும் மாருதி சுசுகி.. ஸ்டைலிலும் அசத்தும் புதிய ஆல்டோ கே10 மாடல்

பசுமை தீர்வுகளுக்கான நுகர்வோர் தேவை அதிகரித்து, EV வாகனங்களை ஊக்குவிப்பதற்கு அரசின் தொலைநோக்கு கொள்கைகள் ஆதரவாக உள்ளன. அசோக் லேலண்டின் துணை நிறுவனமான ஸ்விட்ச் மொபிலிட்டி, டபுள் டெக்கரைப் புதுப்பித்து, பயணிகள் மற்றும் சமூகத்தின் நலனுக்காக புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் உறுதியாக இருப்பதற்கு வாழ்த்துக்கள் என்றார். இந்த புதிய எலெக்ட்ரிக் டபுள் டெக்கர் பேருந்து உலகின் முதல் செமி லோ ஃப்ளோர் , ஏர் கண்டிஷன்ட், எலெக்ட்ரிக் டபுள் டெக்கர், ரியர் ஓவர்ஹாங் மற்றும் பின்புற படிக்கட்டு ஆகியவற்றில் அகலமான கதவுடன் இருக்கும். மேலும் இந்த எலெக்ட்ரிக் டபுள் டெக்கர் பஸ் ஒரு லைட் வெயிட் அலுமினியம் பாடி கட்டுமானத்தை கொண்டது என ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனம் கூறி இருக்கிறது.

Also Read : 10 லட்சத்திற்கும் குறைவான சிறந்த கார்களின் பட்டியல் இதோ..

டபுள் டெக்கர்ஸ் ஒரு பஸ்சுக்கு 78-90 வரை சுமந்து செல்லும் திறனை வழங்கும். இப்பேருந்தில் தற்போதுள்ள டபுள் டெக்கரில் உள்ள ஒற்றை படிக்கட்டுக்கு பதிலாக இரண்டு படிக்கட்டுகள் இருக்கும்.பேருந்தில் ஏறும் போது அல்லது இறங்கும் போது பயணிகளுக்கு வசதியான இயக்கத்தை உறுதி செய்யும். சத்தமில்லாமல் இயங்கும் இந்த பேருந்துகள் பயணிகளுக்கு வசதியான பயண அனுபவத்தையும் வழங்கும். இந்த பஸ்ஸில் சார்ஜிங் பாயிண்ட்ஸ்கள் இருக்கும். ஸ்விட்ச் EiV 22 ஆனது 231 kWh 2-ஸ்ட்ரிங், லிக்விட் கூல்டு, அதிக அடர்த்தி கொண்ட என்எம்சி கெமிஸ்ட்ரி பேட்டரி பேக் மற்றும் டூயல் கன் சார்ஜிங் சிஸ்டம் மூலம் இயக்கப்படுகிறது. இது நகர பயன்பாடுகளில் 250 கிமீ ரேஞ்சை தருகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Electric Buses, Mumbai

அடுத்த செய்தி