Home /News /automobile /

இந்தியாவின் அதிவேக எலெக்ட்ரிக் பைக் Ultraviolette F77 எப்போது அறிமுகம்? நிறுவனம் வெளியிட்ட தகவல்!

இந்தியாவின் அதிவேக எலெக்ட்ரிக் பைக் Ultraviolette F77 எப்போது அறிமுகம்? நிறுவனம் வெளியிட்ட தகவல்!

எலெக்ட்ரிக் பைக்  Ultraviolette F77

எலெக்ட்ரிக் பைக் Ultraviolette F77

அல்ட்ராவயலெட் F77 (Ultraviolette F77) இந்தியாவில் உள்ள மற்ற வாகன உற்பத்தியாளர்களின் எலெக்ட்ரிக் பைக்குகளை விட ஸ்போர்ட்டி மற்றும் மிகவும் தனித்துவமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மக்களை பெரிதும் பாதித்து வரும் நிலையில், பெட்ரோல் டூ வீலர்களுக்கு மாற்றாக நாட்டு மக்களின் கவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பக்கம் திரும்பி இருக்கிறது. ஓலா எலெக்ட்ரிக், சிம்பிள் எனர்ஜி உள்ளிட்ட பல நிறுவனங்கள் அடுத்தடுத்து எலெக்ட்ரிக் டூ வீலர்களை களமிறக்கி வருகின்றன.

எரிபொருள் விலையேற்றம் மற்றும் பெருகி வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகங்களால், இந்திய எலெக்ட்ரிக் டூவீலர் மார்க்கெட்டில் ஏற்றம் காணப்படுகிறது. இதனிடையே இந்தியாவின் அதிவேக மற்றும் அதிநவீன எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள், நாட்டின் ஆட்டோமொபைல் சந்தையில் மார்ச் 2022-ல் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. பெங்களூருவில் அமைந்திருக்கும் எலெக்ட்ரானிக் சிட்டி அருகே F77 எலெக்ட்ரிக் பைக்கிற்கான முதல் உற்பத்தி மற்றும் அசெம்பிளி ஆலையை அமைக்க உள்ளதாக டிவிஎஸ் ஆதரவு பெற்ற EV நிறுவனமான அல்ட்ராவயலட் ஆட்டோமோட்டிவ் (Ultraviolette Automotive) தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவின் அதிவேக எலெக்ட்ரிக் பைக் என்று குறிப்பிடப்படும் அல்ட்ராவயலெட் F77 (Ultraviolette F77) இந்தியாவில் உள்ள மற்ற வாகன உற்பத்தியாளர்களின் எலெக்ட்ரிக் பைக்குகளை விட ஸ்போர்ட்டி மற்றும் மிகவும் தனித்துவமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. Ultraviolette F77 பைக்கின் ப்ரீ-ப்ரொடக்ஷன் கான்செப்ட் வம்பர் 2019 இல் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்டது. அல்ட்ரா வயலெட் நிறுவனம் அதன் அல்ட்ராவயலட் F77 பைக்கின் விலை குறித்த தகவல் எதையும் இன்னும் வெளியிடவில்லை. என்றாலும் FAME II மானியத்திற்கு முன் இந்த பைக் ரூ.3 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தற்போது பெங்களூருவில் துவங்க போவதாக அறிவித்துள்ள ஆலையில் நடப்பாண்டு இறுதிக்குள் (2021 இறுதிக்குள்) சுமார் 15,000 யூனிட் எலெக்ட்ரிக் பைக் என்ற உற்பத்தி இலக்கை நிறைவு செய்யும் என்று அல்ட்ராவயலட் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

எனினும் இந்நிறுவனத்தின் இலக்கு ஆண்டுக்கு சுமார் 1.2 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்வது என்பதே. Ultraviolette F77 எலெக்ட்ரிக் பைக் மூன்று தனித்துவமான பேட்டரி பேக்குகளுடன், 3 வேரியன்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மூன்றில் ஒரு வேரியன்ட் மணிக்கு அதிகபட்சம் 150 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் தயாரிக்கப்பட இருக்கிறது.

இது தொடர்பாக அல்ட்ராவயலட் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிறுவனருமான நாராயண் சுப்ரமணியம் கூறுகையில், நாட்டிலிருக்கும் எலெக்ட்ரிக் மார்க்கெட் மற்றும் சர்வதேச எலெக்ட்ரிக் மார்க்கெட்களுக்கும் ஒரு சிறந்த எலெக்ட்ரிக் வெஹிகிள் அனுபவத்தை உருவாக்குவதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். தற்போது இந்த பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டி இருக்கிறோம். பிராந்தியத்திலும் அதைச் சுற்றிலும் வலுவான விநியோகச் சங்கிலி சுற்றுச்சூழல் அமைப்பு இருக்கும் காரணத்தினாலேயே நாட்டின் அதிவேக மற்றும் அதிநவீன எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி ஆலையை பெங்களுருவில் அமைக்க முடிவு செய்தோம் என்றார்.

Also read... டாடா முதல் ஹூண்டாய் வரை... முன்னணி கார் நிறுவனங்கள் வழங்கும் சிறந்த மின்சார வாகனங்கள்!

மேலும் பேசிய நாராயண் சுப்ரமணியம், "வரவிருக்கும் தங்கள் எலெக்ட்ரிக் பைக்கிற்கு பெரும் வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு நிலவி வ்ருவகிறது. இந்த எலெக்ட்ரிக் பைக் உற்பத்திக்கான காம்போனென்ட்ஸ்கள் உள்நாட்டில் பெறப்படும் என்பதால், இந்த பைக்கின் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமான பாகங்கள் இந்தியாவிலேயே தான் தயாரிக்கப்படும்" என்றார். இந்த ஆண்டின் இறுதியில் Ultraviolette F77 பைக்கிற்கான ப்ரீ-ஆர்டர்களை அல்ட்ராவயலட் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் தொடங்கும் என்று தெரிகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Electric bike

அடுத்த செய்தி