இந்தியாவில் கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இப்போது கார்களின் விலை மற்றும் மைலேஜ் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக வாகனங்களின் பாதுகாப்பிற்கே அதிக முக்கிய கொடுத்து வருவது தெரியவந்துள்ளது. ஆம், சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, இந்தியர்கள் இப்போது தங்களுக்கு பாதுகாப்பான கார்களை வாங்க அதிக பணம் கொடுக்க தயாராக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கார்ட்ரேட் டெக்கின் பிராண்டான மொபிலிட்டி அவுட்லுக் நடத்திய கருத்துக்கணிப்பில், இந்தியாவில் உள்ள வாகன ஆர்வலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிக பாதுகாப்பு உணர்வுள்ளவர்களாகிவிட்டதாகவும், பாதுகாப்பான கார்களை வாங்குவதற்கு தங்கள் பட்ஜெட்டை பெரிதாக்க தயாராக இருப்பதாகவும் கண்டறிந்துள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள 2.7 லட்சம் வாடிக்கையாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் இந்த ஆய்வு இந்தியாவில் உள்ள மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் நான்கு சக்கர வாகனம் மற்றும் இரு சக்கர வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களை உள்ளடக்கியது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்கள், குறிப்பாக டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா போன்ற பிராண்டுகளின் கார்கள், சமீபத்தில் உலகளாவிய ஏஜென்சிகளால் நடத்தப்பட்ட பாதுகாப்பு விபத்து சோதனைகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டன. Tata Punch SUV ஆனது குளோபல் NCAP பாதுகாப்பு விபத்து சோதனையில் தேர்ச்சி பெற்ற சமீபத்திய கார் ஆகும். Punch தவிர, Nexon, Tigor, Tigor EV மற்றும் Altroz ஹேட்ச்பேக் போன்ற டாடா கார்கள் இந்திய சாலைகளில் மிகவும் பாதுகாப்பான கார்கள் என்ற பெயரை பெற்றுள்ளன. அதேபோல XUV300, Thar மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட XUV700 போன்ற மஹிந்திரா கார்கள் கூட பாதுகாப்பான விருப்பங்களாகக் கருதப்படுகின்றன.
ALSO READ | ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமா? ரூ.20,000க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் விவரம்!
அதன்படி இந்த ஆய்வில், பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுக்காக அசல் விலையை விட ₹30,000க்கு மேல் செலவழிக்கத் தயாராக இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஃப்ரோஸ்ட் & சரிபார்ப்பு பங்குதாரரான சல்லிவன் கூறியதாவது, "கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 3/4 பேர் எதிர்காலத்தில் வாகனம் வாங்கும் போது நான்கு அல்லது ஐந்து-நட்சத்திர மதிப்பிலான பாதுகாப்பு வாகனங்களையே ஆய்வு செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பிற்காக தங்கள் பட்ஜெட்டை தாண்டிய விலையை தர தயாராக இருப்பதாகவும் உள்ளனர்" என்று கூறியுள்ளார்.
அதன்படி, இந்தியாவில் வாகனம் வாங்குபவர்களில் பெரும்பாலானோர் கார்களின் பாதுகாப்பு மதிப்பீடுகளின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பதாக கணக்கெடுப்பு காட்டுகிறது. மேலும் ஆய்வில் பங்கேற்றவர்களில் 27 சதவீதம் பேர் பாதுகாப்பு மதிப்பீடுகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பது தீவிர கவலைக்கான ஆதாரமாகும் என்று கணக்கெடுப்பு அறிக்கையில் இறுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களை காட்டாயமாகியதன் மூலம், ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்), ஏர்பேக்குகள், ரோல்-ஓவர் தணிப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்களின் விழிப்புணர்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ALSO READ | சர்வீஸின் போது iPhone-களில் எந்த பார்ட்ஸ்கள் மாற்றப்பட்டுள்ளன.... விவரங்களை காட்டும் புதிய அம்சம்!
கார்ட்ரேட் டெக்கின் தலைமை நிர்வாக அதிகாரி (நுகர்வோர் வணிகம்) பன்வாரி லால் ஷர்மா கூறுகையில், "புதிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இணைக்கப்பட்டு வருவதால், வாகனத் துறை மாற்றத்தை சந்தித்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார். மேலும், புதியதாக கார் வாங்குபவர்களில் 45 சதவீதம் பேர் பாதுகாப்பு மதிப்பீடுகளைப் பொருட்படுத்தாமல், தாங்கள் ஏற்கனவே பயன்படுத்திய கார்களை விட புதிய கார்கள் பாதுகாப்பானவை என்று கருதுவதாகவும் சர்வே காட்டுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Car