பெரிய கார்களைப் பயன்படுத்த விரும்பும் இந்தியர்கள்- மஹிந்திரா தலைவர் வேதனை..!

’சிறிய ரக கார்களை அறிமுகம் செய்தால் இந்தியாவில் அதற்குப் போதுமான வரவேற்பு கிடைப்பது இல்லை’

பெரிய கார்களைப் பயன்படுத்த விரும்பும் இந்தியர்கள்- மஹிந்திரா தலைவர் வேதனை..!
’சிறிய ரக கார்களை அறிமுகம் செய்தால் இந்தியாவில் அதற்குப் போதுமான வரவேற்பு கிடைப்பது இல்லை’
  • News18 Tamil
  • Last Updated: February 24, 2020, 12:46 PM IST
  • Share this:
ஒரே ஒரு நபர் பயணிக்க வேண்டிய சூழல் என்றாலும் கூட பெரிய எஸ்யூவி ரக கார்களை எடுத்துக்கொண்டு சாலைகளில் கூட்ட நெரிசலையே இந்தியர்கள் ஏற்படுத்துகிறோம் என மஹிந்திரா நிறுவன நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா வேதனை தெரிவித்துள்ளார்.

கார் பயன்பாடு குறித்து பவன் கோயங்கா கூறுகையில், “இந்தியாவில் மாசுபாடுகளுக்கும் மிகப்பெரும் காரணமாக ஆட்டோமொபைல் துறை இருப்பது உண்மைதான். ஆனால், முடிந்தவரையில் மாசுபாட்டைக் குறைக்கும் வகையிலான தொழில்நுட்பங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவில் கார் பயன்பாடு என்பது வித்தியாசமானது.

பெரிய ரக கார்களையே இந்தியர்கள் பயன்படுத்த விரும்புகின்றனர். ஒருத்தர் பயணிக்க வேண்டுமென்றால் கூட பெரிய எஸ்யூவி ரக கார்களை சாலைகளில் ஓட்டிச் செல்கின்றனர். இது போக்குவரத்துக்கும் இடையூறு மாசுபாடுக்கும் வழிவகுக்கும். தேவை என்பதையும் தாண்டி, கார் என்பது சொகுசான வாழ்க்கைக்கான ஒரு அம்சமாக மாறிவிட்டது”.


”சிறிய ரக கார்களை அறிமுகம் செய்தால் இந்தியாவில் அதற்குப் போதுமான வரவேற்பு கிடைப்பது இல்லை. தற்போதைய சூழலில் ஆட்டோமொபைல் துறையில் உபயோகப்படும் தொழில்நுட்பம் மிகப்பெரும் வரம் ஆகும்” என்றார்.

மேலும் பார்க்க: ட்ரம்ப் இந்தியப் பயணத்துக்காக வந்துள்ள பிரத்யேக கார்... வாய் பிளக்க வைக்கும் சொகுசு வசதிகள்!
First published: February 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading