Home /News /automobile /

இனி இந்த ரயில்கள் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இலவச உணவு - இந்தியன் ரயில்வே முடிவு

இனி இந்த ரயில்கள் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இலவச உணவு - இந்தியன் ரயில்வே முடிவு

ப்ரீமியம் ரயில்

ப்ரீமியம் ரயில்

Indian Railways | ஒரு ரயில் தாமதமாக கிளம்பினாலோ அல்லது இடையில் ஏதேனும் காரணத்துக்காக நிறுத்தப்பட்டாலோ, பயணிகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்க்கான இந்திய ரயில்வே துறை கோடிக்கணக்கான பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை தொடர்ந்து செய்து வருகிறது. நீண்டதூரம் பயணம் செய்பவர்களுக்கு, எக்ஸ்பிரஸ் ரயில், ஸ்பெஷல் ரயில், சூப்பர் ஃபாஸ்ட் ரயில் என்று பல விதமான ரயில்களை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, வெவ்வேறு மண்டங்களில் இயக்கி வருகிறது. ரயில்களின் சேவைகள் எவ்வளவு சிறப்பாக மேம்படுத்தப்பட்டு வந்தாலும், சில நேரங்களில் ரயில் தாமதமாக வருவது அல்லது தாமதமாக கிளம்புவது என்பதை தவிர்க்க முடியாது. ரயில்கள் தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும். ரயில்வே துறையால் கூட அதனைக் கட்டுப்படுத்த முடியாது.

ஒரு ரயில் தாமதமாக கிளம்பினாலோ அல்லது இடையில் ஏதேனும் காரணத்துக்காக நிறுத்தப்பட்டாலோ, பயணிகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். எனவே, எதிர்பாராத தாமதங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்ற நிலையில் ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு ஒரு புதிய அறிவிப்பை மேற்கொண்டுள்ளது. ரயில் கிளம்புவதற்கு தாமதம் ஏற்பட்டால் அனைத்து பயணிகளுக்கும் இலவசமாக உணவு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இந்திய ரயில்வேயின் வழிமுறைகளின்படி, குறிப்பிட்ட நேரத்தை விட 2 மணி நேரங்களுக்கு மேல் தாமதமாக கிளம்பினால் ஒவ்வொரு பயணியும் ரயிலில் இலவச உணவு மற்றும் பானத்தை பெற முடியும். ஆனால் இந்த சேவை அனைத்து ரயில்களிலும் இல்லை என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ரயில் தாமதத்தால் இலவச உணவுகள் என்பது நீண்ட தூரம் இயங்கும் மற்றும் பிரீமியம் ரயில்களான ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களுக்கு மட்டுமே இருக்கிறது.



இந்த ரயில்களுக்குமே மட்டும் ஏன் இவ்வாறான சலுகை மற்ற ரயில்களுக்கு ஏன் இல்லை என்ற கேள்வி எழலாம். மேலே குறிப்பிட்ட ரயில்கள் அனைத்துமே பிரீமியம் ரயில்கள்; நாடு முழுவதும் இதே போன்ற பலவிதமான சூப்பர்பாஸ்ட் ரயில்கள் இயங்கி வருகின்றன. விரைவாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் தான் இந்த ரயில்களில் பெரும்பாலான பயணிகள் பயணிக்கின்றனர். எக்ஸ்பிரஸ் ரயில்கள் என்னும் பொழுது கால தாமதத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும். எனவே ரயில் கிளம்பும்போது மட்டுமல்லாமல் எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ அதுவும் சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்பதும் முக்கியமானது. எனவே கால தாமதம் என்பது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்த கூடியதால். தவிர்க்க முடியாத சில காரணங்களால் தாமதம் ஏற்பட கூடிய இத்தகைய பிரீமியம் ரயில்களில், பயணிகளுக்கு உணவும் பணமும் வழங்கப்படுகிறது.

Also Read : ரயில் பயணங்களில் இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்... வழிமுறை இதோ...!?

ரயில் கிளம்பும் மற்றும் சென்று சேரும் நேரத்திற்கு ஏற்றவாறு பயணிகள் காலை உணவு, மதிய உணவு, மாலை உணவு என்று தாங்கள் விரும்பும் உணவை ரயிலிலேயே இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பிரீமியம் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுதே நமக்கு எந்த உணவுகள் வேண்டும் என்பதையும் சேர்த்து முன்பதிவு செய்யும் விருப்பமும் இருக்கிறது. மேலும் இத்தகைய ரயில்கள் எல்லா ரயில் நிலையங்களிலும் நிற்காது. எனவே ரயில்களில் கிடைக்கும் உணவுதான் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளுக்கான உணவு என்பதால், தாமதமாகும் ரயில்களில் உணவு வழங்கத் திட்டமிட்டுள்ளது.

Also Read : காஷ்மீருக்கு சுற்றுலா போகா ஆசையா! மலிவு விலையில் IRCTC வழங்கும் டூர் பேக்கேஜ்.! 

தொடர்ந்து இந்திய ரயில்வே பயணிகளின் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு சேவைகளை மேம்படுத்தி வரும் நிலையில் ஐஆர்சிடிசியும் உணவு சேவையின் தரத்தை மேம்படுத்தி உள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Indian Railways, IRCTC

அடுத்த செய்தி