ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

சென்னை டூ பூட்டான்.. பார்சலாகும் வாகனங்கள்.. இந்தியன் ரயில்வேயில் புதிய முயற்சி.!

சென்னை டூ பூட்டான்.. பார்சலாகும் வாகனங்கள்.. இந்தியன் ரயில்வேயில் புதிய முயற்சி.!

சென்னை டூ பூட்டான் வாகனங்கள் டெலிவரி

சென்னை டூ பூட்டான் வாகனங்கள் டெலிவரி

Indian Railways : இந்திய ரயில்வே பல விதமான வழித்தடங்களை பயன்படுத்தி சென்னையில் இருந்து பூட்டானுக்கு வாகனங்களை கொண்டு சென்றுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய ரயில்வே முதன்முறையாக மல்ட்டிமோடல் வழித்தடம் (multi-modal route) மூலம் பூட்டானுக்கு பயன்பாட்டு வாகனங்களை (utility vehicles) வழங்கி இருக்கிறது. பூட்டானுக்கு வாகனங்களை டெலிவரி செய்ய முதல் முறையாக இந்தியன் ரயில்வே ஒன்றுக்கு மேற்பட்ட போக்குவரத்தைப் பயன்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பூடான் வாங்கி இருக்கும் எழுபத்தைந்து பயன்பாட்டு வாகனங்கள் சென்னையில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள ஹசிமாரா ரயில்வே ஸ்டேஷனுக்கு சரக்கு ரயில் வழியே கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதுபற்றி மேலும் தகவல் தெரிவித்து உள்ள அதிகாரிகள் பயன்பாட்டு வாகனங்களை ஏற்றி சென்ற சரக்கு ரயில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 28) இரவு வடக்கு மேற்கு வங்காளத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள ஹசிமாரா ரயில்வே ஸ்டேஷனை அடைந்தது.

ஹசிமாராவில் (Hasimara) இந்திய விமானப்படை நிலையம் உள்ளது மற்றும் பூட்டானின் அருகிலுள்ள ரயில் நிலையமாகவும் உள்ளது. இது பூடான் எல்லையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது மற்றும் மறுபுறம் அருகிலுள்ள நகரம் பூட்டானின் வணிக தலைநகரான ஃபுயென்ஷோலிங் (Phuentsholing) அமைந்துள்ளது.

பின் அந்த 75 வாகனங்கள் அடுத்த நாளான சனிக்கிழமை காலை (அக்டோபர் 29) சாலை வழியாக அருகிலுள்ள பூடான் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன என்று அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். Isuzu Motors நிறுவனம் தயாரித்துள்ள SUV கார்கள் தான் தற்போது பூட்டானுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளன. வடகிழக்கு எல்லை ரயில்வேயின் (NFR- Northeast Frontier Railways) அலிபுர்துவார் கோட்ட ரயில்வே மேலாளரான திலீப் குமார் சிங் கூறுகையில், "இது இந்திய ரயில்வேயின் முதல் முறையான முயற்சி என்றும், இது நினைத்தபடி வெற்றி பெற்றுள்ளது என்றும் கூறினார். சரக்கு ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து போன்ற பல ரூட்களை பயன்படுத்தி சரக்குகளை ஓரிடத்திற்கு கொண்டு சேர்க்கும் சேவையை இந்தியன் ரயில்வே வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

Also Read : பிரேக்கில் பிரச்னை இருக்கு.. 9,000 கார்களை திரும்ப பெறுகிறது மாருதி சுஸுகி!

மேலும் பூட்டான் நாட்டின் தேவையின் அடிப்படையில் எதிர்காலத்தில் மேலும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அதிகாரி திலீப் குமார் சிங், பூட்டான் நாட்டுடனான இந்தியாவின் வணிக உறவை தொடர்ந்து வலுப்படுத்தும் முயற்சியாக நாங்கள் ஹசிமாரா ரயில்வே ஸ்டேஷனின் உள்கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்.

இந்த நடவடிக்கை காரணமாக இந்தியா, பூட்டானுடன் வணிகம் செய்வதற்கு மூலோபாயமாக அமைந்துள்ளது. தவிர சரக்குகளை வைக்க மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்துடன் (Central Warehousing Corporation) இணைந்து ஒரு பெரிய குடோன் ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளோம். நாங்கள் அனைத்து வகையான பொருட்களையும் கையாள விரும்புகிறோம், அதற்கு இது ஒரு ஆரம்பம் தான் என்று கூறி இருக்கிறார்.

Published by:Janvi
First published:

Tags: Indian Railways, Transport