கொரோனா பெருந்தொற்று காலம் ஓய்ந்துள்ள நிலையில், அனைத்து ரயில் சேவைகளையும் இந்திய ரயில்வே மீண்டும் தொடங்கி வருகிறது. முன்னதாக, கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக பல்வேறு ரயில் சேவைகளை இந்திய ரயில்வே ரத்து செய்தது. அத்துடன், பல்வேறு ரயில்களின் பயண தூரம் மற்றும் நேரம் போன்றவைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்நிலையில், கொரோனா தொற்று குறையத் தொடங்கிய பிறகு, ரயில் சேவைகள் மீண்டும் படிப்படியாகத் தொடங்கப்பட்டன. தற்போதைய சூழலில் நாடெங்கிலும் 2,300 ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில் 100 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்பட 500 ரயில்களின் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு இந்திய ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
4ஆவது வந்தே பாரத் ரயில்
பயணிகளுக்கு எளிமையான மற்றும் சௌகரியமான பயண அனுபவங்களை வழங்கிடும் வகையில் இந்திய ரயில்வேயின் 3ஆவது மற்றும் 4ஆவது வந்தே பாரத் ரயில் சேவை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக் காலத்தில் தொடங்க இருக்கிறது. சதாப்தி, ஜன் சதாப்தி, இண்டர்சிட்டி போன்ற ரயில் சேவைகளின் மூலமாக பல லட்சக்கணக்கான மக்கள் தினசரி ரயில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read : இது தெரியுமா உங்களுக்கு? இனி ரயில் லேட்டா வந்தால் பயணிகளுக்கு இழப்பீடு கிடைக்குமாம்
இந்த மூன்று ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் சௌகரியகம் கருதி இவை அனைத்தையும் வந்தே பாரத் ரயில்களாக மாற்றுவதற்கு இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இவை வந்தே பாரத் ரயில்களாக மாற்றப்படும் பட்சத்தில், இதற்கு முன்பு இந்த வழித்தடத்தில் பயணம் செய்ய தேவைப்பட்ட நேரத்தைக் காட்டிலும் குறைவான கால அளவில் பயணிகள் பயணம் செய்ய முடியும்.
180 கி.மீ. வேகம்
வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் இயங்குபவை ஆகும். 2 அல்லது 3 முறை சோதனை ஓட்டம் நடத்திய பின்னர், இந்த ரயில்களை பயணிகள் சேவைக்கு பயன்படுத்துவதற்கான ஒப்புதல் கிடைக்கும். 75 வாரங்களில் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமாக இருக்கிறது. அதை மனதில் வைத்து வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் உற்பத்தி திறனை சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலை அதிகரித்து வருகிறது.
4ஆவது வந்தே பாரத் ரயில் சேவை தெலுங்கானாவில் இரண்டு மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டம் இந்த மாத மத்தியில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.