ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

சீனியர் சிட்டிசன்களுக்கு ஓர் நற்செய்தி - மீண்டும் பயண சலுகையில் இந்தியன் ரயில்வே

சீனியர் சிட்டிசன்களுக்கு ஓர் நற்செய்தி - மீண்டும் பயண சலுகையில் இந்தியன் ரயில்வே

இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே

Indian Railways | முதியோருக்கான கட்டணச் சலுகை பெறுவதற்கான வயது வரம்பை அதிகரிப்பதுடன், சில வகுப்பு டிக்கெட்டுகளுக்கு மட்டுமே கட்டணச் சலுகை வழங்குவது என்ற முடிவை ரயில்வே வாரியம் எடுக்க உள்ளதாகத் தெரிகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரயில்களில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு பயணக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த சலுகை நிறுத்தப்பட்டது. பின்னர் ரயில் சேவைகள் முழுமையாக தொடங்கிய பின்னரும் கூட மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படவில்லை.

இத்தகைய சூழலில் முதியோருக்கான கட்டணச் சலுகை திட்டத்தை இந்திய ரயில்வே துறை மீண்டும் அறிமுகம் செய்ய இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இந்த முறை சலுகையை பெறுவதற்கான தகுதி வரையறைகள் மாற்றி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, கட்டணச் சலுகை பெறுவதற்கான வயது வரம்பை அதிகரிப்பதுடன், சில வகுப்பு டிக்கெட்டுகளுக்கு மட்டுமே கட்டணச் சலுகை வழங்குவது என்ற முடிவை ரயில்வே வாரியம் எடுக்க உள்ளதாகத் தெரிகிறது. இதற்கு முன்பு, அனைத்து வகுப்பு பெட்டிகளிலும் முதியோர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

பொது பெட்டிகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மட்டும் கட்டண சலுகை வழங்குவது குறித்து ரயில்வே வாரியம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதியோர்களுக்கான சலுகையை தொடரும் அதே வேளையில், அத்திட்டத்தில் ஏற்படும் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படலாம் என தெரிகிறது. எனினும், விதிமுறை மற்றும் நிபந்தனைகள் எதுவும் இதுவரையிலும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : இனி வெயிட்டிங் லிஸ்ட் தொல்லை இல்லை; ஐஆர்டிசியின் அதிரடி திட்டம்!

இதுகுறித்து ஜீ நியூஸ் நிறுவனத்திற்கு ரயில்வே துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் அளித்த தகவலில், “முதியோர்களுக்கு வழங்கப்படும் கட்டண சலுகை அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதை புரிந்து கொண்டுள்ளோம். அதை நாங்கள் ஒருபோதும் முழுமையாக ரத்து செய்யப் போவதில்லை. இதுகுறித்து மறுபரிசீலனை செய்து, வெகுவிரைவில் முடிவு எடுக்க இருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

முந்தைய சலுகை விவரம்

கொரோனா காலகட்டத்திற்கு முன்பு இருந்த சலுகை திட்டத்தின்படி ரயில்களில் பயணம் செய்யும் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வந்தது. பெண்களுக்கு 50 சதவீத கட்டண குறைப்பு செய்யப்பட்ட அதே வேளையில் ஆண்களுக்கு 40 சதவீத அளவுக்கு கட்டணம் குறைக்கப்பட்டு வந்தது. எனினும் கொரோனா காலகட்டத்தில் இந்த சலுகை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read : இனி இந்த ரயில்கள் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இலவச உணவு - இந்தியன் ரயில்வே முடிவு

ப்ரீமியம் தட்கல் திட்டம் விரைவில் அறிமுகம்

அனைத்து ரயில்களிலும் வெகு விரைவில் ப்ரீமியம் தட்கல் முறை டிக்கெட் பதிவு திட்டத்தை இந்திய ரயில்வே செயல்படுத்த உள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலமாக ரயில்வே துறையின் வருவாய் அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. தற்போதைய சூழலில் நாடெங்கிலும் 80 ரயில்களில் மட்டுமே இந்தத் திட்டம் அமலில் இருந்து வருகிறது. கடைசி நிமிடத்தில் ரயில் பயணங்களுக்கு திட்டமிடும் பயணிகளின் வசதி கருதி இந்த திட்டம் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: India, Indian Railways, Tamil News