Home /News /automobile /

செல்லப்பிராணிகளுடன் இனி ரயில் பயணம் - இந்தியன் ரயில்வே அனுமதி

செல்லப்பிராணிகளுடன் இனி ரயில் பயணம் - இந்தியன் ரயில்வே அனுமதி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Indian Railway | தங்களுடைய குழந்தைகள் போல் வளர்க்கும் செல்லப்பிராணிகளை ரயில் பயணத்தில் அழைத்துச் செல்லலாம் என உரிமையாளர்களுக்கு இந்தியன் ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுடன் ரயில் பயணம் மேற்கொள்ளவிரும்பும் பயணிகள் ஏசி முதல் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளில் மட்டுமே முன்பதிவு செய்து பயணிக்கலாம் என இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இன்றைக்கு அனைவரின் வீடுகளிலும் நாய்,பூனை போன்ற செல்லப்பிராணிகளை தங்களது குழந்தைகள் போல் வளர்த்து வருகின்றனர். நாய்களைத் தினமும் வாக்கிங் அழைத்துச் செல்வதையும் வாடிக்கையாகக் கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் எதிர்பாராதவிதமாக நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்படும் போது தாங்கள் ஆசையாய் வளர்த்த செல்லப்பிராணிகளை வீட்டில் தனியாக விட்டு செல்ல நேரிடும். ஒருவேளை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் சில போக்குவரத்து சேவை செல்லப்பிராணிகளை உடன் அழைத்து செல்வதற்கு அனுமதிப்பில்லை.

    இந்நிலையில் தான் தங்களுடைய குழந்தைகள் போல் வளர்க்கும் செல்லப்பிராணிகளை ரயில் பயணத்தில் அழைத்துச் செல்லலாம் என உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இருந்தப் போதும் சில கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அவை என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்…

    Read More : தீபாவளி விடுமுறை காலத்தில் பட்ஜெட் செலவில் சுற்றுலா செல்லலாம்... IRCTC வழங்கும் டூர் பேக்கேஜ்


    ரயிலில் செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்வதற்கான விதிமுறைகள்:

    நீங்கள் ரயில் பயணிக்கும் போது செல்லப்பிராணிகளை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் இரண்டாம் வகுப்பு மற்றும் பிரேக் வேனில் உள்ள நாய் பெட்டியில் பயணிகள் தங்கள் செல்ல நாய்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு வேளை உங்களுடனே நீங்கள் வளர்க்கும் நாய்களை உடன் அழைத்து செல்ல வேண்டும் என்றால், நான்கு இருக்கைகள் கொண்ட கேபின் அல்லது இரண்டு இருக்கை கொண்ட முதல் வகுப்பு ஏசி பிரிவில் நீங்கள் டிக்கெட்டுகளை புக் செய்து செல்லப்பிராணிகளை அழைத்து செல்ல அனுமதிக்கிறது.



    மேலும் AC two-tier, AC three-tier, AC chair car, sleeper class, and second-classல் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.

    நீங்கள் நாய் பெட்டியில் செல்லப்பிராணிகளை எடுத்துச் சென்றால் கிலோவுக்கு ரூ. 30 மற்றும் பயணிகளுடன் உங்களது செல்லப்பிராணிகள் பயணிக்க வேண்டும் என்றால் கிலோவுக்கு ரூபாய் 60 ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒருவேளை நீங்கள் முன்பதிவு செய்யப்படவில்லை என்றால், குறைந்தப்பட்சம் ரூ. 50 க்கு உட்பட்ட லக்கேஜ் அளவை விட ஆறு மடங்கு அபராதம் விதிக்கப்படும்.

    ராஜ்தானி, சதாப்தி போன்ற ரயில்களில் நாய் பெட்டிகள் உள்ளன. மேலும் இந்திய ரயில்வேயின் கூற்றுப்படி, செல்லப்பிராணிகளை முன்கூட்டியே முன்பதிவு செய்ய எந்த ஏற்பாடும் இல்லை. இருந்தப்போதும் ரயில்கள் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே கவுண்டரில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.



    ரயில் பயணத்தை மேற்கொள்ளும் போது, உங்களது செல்லப்பிராணிகளுக்குத் தேவையான உணவு, தண்ணீர் போன்றவற்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். இந்தப் பயணத்தின் போது உங்களது செல்லப்பிராணிகளுக்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டால் இதற்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பல்ல எனவும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

    இந்திய ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பைப் பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் கூறியுள்ள விதிமுறைப் பின்பற்றி நாங்கள் இனி பின்பற்றுகிறோம், நிச்சயம் இது எங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பது போன்ற கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: India, Indian Railways, Tamil Nadu

    அடுத்த செய்தி