Home /News /automobile /

சரக்கு போக்குவரத்தில் முன் எப்போதும் இல்லாத சாதனையை செய்த இந்திய ரயில்வே துறை!

சரக்கு போக்குவரத்தில் முன் எப்போதும் இல்லாத சாதனையை செய்த இந்திய ரயில்வே துறை!

இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே

Indian Railway | சரக்கு ஏற்றுமதியில் கடந்த 24 மாதங்கள் தொடர்ச்சியாக மிக சிறப்பான முறையில் இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • New Delhi, India
    கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 119.32 மெட்ரிக் டன் அளவுக்கான சரக்குகளை கையாண்டுள்ளதாகவும், இதுவரை இல்லாத அதிகபட்ச அளவு இது என்று இந்திய ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் கூடுதலாக 8.69 மெட்ரிக் டன் சரக்குகள் ஏற்றப்பட்டுள்ளன என்றும், இது 7.86 சதவீதம் அதிகம் என்றும் கடந்த திங்கள்கிழமை ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுளது.

    சரக்கு ஏற்றுமதியில் கடந்த 24 மாதங்கள் தொடர்ச்சியாக மிக சிறப்பான முறையில் இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது. சுமார் 9.2 மெட்ரிக் டன் நிலக்கரி, 0.71 மெட்ரிக் டன் உரம், இதர சரக்குகளில் 0.68 மெட்ரிக் டன் ஆகியவை கூடுதலாக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

    2022 - 2023 நிதியாண்டில் ஆட்டோமொபைல் வாகனங்கள் மற்றும் அது சார்ந்த பொருட்களின் சரக்கு போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,314 ரேக்குகளில் சரக்குகள் ஏற்றப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 2,206 ரேக்குகளில் சரக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. இது சுமார் 68 சதவீத வளர்ச்சி ஆகும்.

    Read more: விநாயகர் சதுர்த்தி விழா - மும்பையின் பிரசித்தி பெற்ற லால்பகுசா கோயிலில் முகேஷ் அம்பானி வழிபாடு

    ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒட்டுமொத்தமாக கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் 620.87 மெட்ரிக் டன் அளவுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதே மாதங்களில் கடந்த 2021 - 2022 ஆண்டில் 562.75 மெட்ரிக் டன் அளவு மட்டுமே சரக்குகள் கொண்டு செல்லப்பட்டிருந்தன. இரண்டு கால கட்டத்தையும் ஒப்பிடுகையில் தற்போதைய அளவு என்பது 10.32 சதவீதம் அதிகம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எண்டிகேம் அளவுகள்

    ஒரு கி.மீ. தொலைவுக்கு எத்தனை டன்கள் சரக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்ற அளவு எண்டிகேம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த அளவானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 63 பில்லியனாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 16 சதவீத வளர்ச்சி கண்டு 73 பில்லியனாக உள்ளது. இந்த ஆண்டின் முதல் மாதங்களில் ஒட்டுமொத்த எண்டிகேம் அளவு என்பது 18.29 சதவீதம் அதிகரித்துள்ளது.

    நீடித்த முயற்சிகளுக்கு பலன்

    சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க இந்திய ரயில்வே துறை மேற்கொண்டு வந்த நீடித்த முயற்சிகளின் பலனாக தற்போதைய சாதனை எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன், நாடெங்கிலும் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக சரக்குப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய சரக்குப் பொருளாக நிலக்கரி இருந்துள்ளது.

     
    Published by:Srilekha A
    First published:

    Tags: Indian Railways, Transport

    அடுத்த செய்தி