ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. ரயில் நிலையங்களில் இனி இந்த வசதியும் உண்டு!

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. ரயில் நிலையங்களில் இனி இந்த வசதியும் உண்டு!

ரயில் நிலையங்களில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலாம்

ரயில் நிலையங்களில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலாம்

ரயில் நிலையங்களில் வாங்கும் பொருட்களுக்கு டிஜிட்டல் மூலம் பணம் செலுத்தும் முறையை இந்தியன் ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • New Delhi, India

டிஜிட்டல் பேமெண்ட் செய்யும் வகையில் நாடெங்கிலும் 8,878 இடங்களில் வசதி செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடெங்கிலும் 596 ரயில்களில் பிஓஎஸ் மிஷின்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர 4,316 நிலையான அலகுகளில் பிஓஎஸ் மிஷின் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ரயில்வே துறையில் டிஜிட்டல் முறை இதுவரையில் பெரிய அளவுக்குத் தடம் பதிக்கவில்லை. குறிப்பாக, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பயணிகள் வாங்கும் உணவு மற்றும் இதர பொருட்களுக்கு நேரடியாகப் பணம் செலுத்தும் பழக்கம் நடைமுறையிலிருந்து வருகின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்தும் வகையாக தற்போது ரயில் நிலையங்களில் இந்த சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு மின்னணு அடிப்படையில் கேட்டரிங் சேவைகளை வழங்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 310 ரயில் நிலையங்களில் 1,755 சேவை தாரர்கள் மற்றும் 14 உணவு நிறுவனங்கள் மூலமாக இந்த சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். நாளொன்றுக்கு இந்த சேவைகள் மூலமாகச் சராசரியாக 41,844 சாப்பாடுகள் வழங்கப்பட்டு வருகின்றன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-கேட்டரிங் சேவையை இந்திய ரயில்வேவின் ஐஆர்சிடிசி நிறுவனம் நிர்வகித்து வருகிறது. பயணிகள் தாங்கள் பயணம் செய்வதற்கு முன்பாகவே, உணவுகளுக்கும் சேர்த்து டிக்கெட்டோடு முன்பதிவு செய்து கொள்ள முடியும். இதை ஆப் மூலமாகச் செய்யலாம் அல்லது இணையதளத்தில் மேற்கொள்ளலாம். இணைய வசதி இல்லாத வாடிக்கையாளர்கள் 1323 என்ற சேவை மைய எண்ணுக்குத் தொடர்பு கொள்வதன் மூலமாகவும் இந்த சேவைகளைப் பெற முடியும்.

Also Read : இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ் : விலையை உயர்த்திய ஹீரோ நிறுவனம்!

இந்த ரயில்வே சார்பில் லாஜிஸ்டிக்ஸ் செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே சமயம், ரயில் தடம் உள்பட ரயில்வே சம்பந்தப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. புதிய வழித்தடம் அமைப்பது, அகல ரயில் பாதைகளாக மாற்றுவது, இரட்டை மற்றும் மூன்று வழித் தடங்கள் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 1,353 கி.மீ. தொலைவுக்கான புதிய ரயில் தட பணிகளை ரயில்வே துறை நிறைவு செய்துள்ளது. ரயில்வே உள்கட்டமைப்புகள் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளன என்பதற்குச் சாட்சியாக நாட்டில் பல ரயில் நிலையங்கள் உயர்தரத்திற்கு மாற்றப்பட்டிருப்பதைப் பயணிகள் காண முடியும் என்று ரயில்வே தெரிவிக்கிறது.

Published by:Janvi
First published:

Tags: Digital India, Indian Railways, UPI